இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகளில் புதிய திருத்தம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகளில் புதிய திருத்தம்

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விதிகள் மாற்றப்பட்டு உள்ளன

பி.ஆர்க்., படிப்பு, வேளாண் இன்ஜினியரிங்,கணினி அறிவியல், அச்சு தொழில்நுட்பம், 'பயோ டெக்னாலஜி' போன்ற பாடப்பிரிவுகளில்

மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 வகுப்பில் கணிதம் படிக்காத, அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களும் சேரும் வகையில்,

மாற்றம் செய்யப்பட உள்ளது.இதற்காக, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியும், வரைவு விதிகளை தயார் செய்யும் பணியை துவக்கியுள்ளன.

அடுத்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கில், திருத்திய விதிகள் அமலுக்கு வரும் போது, பிளஸ் 2 அறிவியல்,

தொழிற்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவு மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.