சர்வர் பிரச்னை காரணமாக 2022 ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் நிறைய விண்ணப்பதாரர்கள் கவலை கொண்டு இருந்தனர் 

அவர்களின் வேண்டுதலின்படி ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க பட்டது

இருந்த போதிலும் சர்வர் பிரச்சனைகள் பற்றிய தெளிவான வெளிக்கங்களை தேர்வு வாரியம் வெளியிடவில்லை

இந்நிலையில் இன்று விண்ணப்பிக்க தொடங்கிய ஆசிரியர்களுக்கு மீண்டும் சர்வர் பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது

விண்ணப்பத்தை தொடங்கும் போது அனுப்பப்படும் OTP தாமதமாக வருவதாகவும்

விண்ணப்பிக்கையில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்போது ERROR என வருவதாகவும்

பாதியில் சர்வர் எர்ரர் என வெளியேறி விடுவதாகவும் மீண்டும் ரெப்பிரேஷ் கொடுத்தால் மீண்டும் ERROR என வருவதாகவும்

விண்ணப்பிக்க காத்திருக்கும் ஆசிரியர் விண்ணப்பதாரர்கள் கூறுகின்றனர்

சில நேரங்களில் ஒவ்வொரு பக்கத்தை தாண்டும் போதும் 30 வினாடிகள் காத்திருந்தாள் தொடர்ந்து விண்ணப்பிக்க முடிகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்

தொடர்ந்து சர்வர் பிரச்னை ஏற்படுவதால் விண்ணப்பிக்கும் சர்வரின் செயல்திறனை உயர்த்த கோரிக்கையும் வைக்க படுகிறது