Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை

Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை செய்த பெண்களை கவுரவிக்கும் விதமாக மார்ச் 8 உலக சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்க படுகிறது.

பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாடு என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படுகிறது . இந்த பாகுபாடு பெண்கள் மீது சுமத்தப்படும் மாபெரும் தடையாகும்.பெண்களின் துணையுடனேதான் பல சமூக ,பொருளாதார தீர்க்க படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அமைதியான குடும்ப சூழல் ,பொருளாதார வளர்ச்சி,சீரான முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்களிப்பு ஒவ்வொரு குடுமபத்திற்கும் தேவைப்படுகிறது.சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு துறைகளை வலுப்படுத்த பெண்களின் பங்கு தேவைப்படுகிறது, இத்தகைய சக்தி கொண்ட பெண்களை போற்றிடவே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

1911 ஆம் ஆண்டிலிருந்தே ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பெண்களின் சமூக கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தகர்த்தெறியும் ஒரு சங்கல்பத்தை ஒவ்வொரு அரசும் கையிலெடுக்கிறது.

2010 சர்வதேச மகளிர் தினத்தன்று சம உரிமை , சம வாய்ப்பு என்ற கோட்பாடு உலகம் முழுவதும் ஒலித்தது. பள்ளி, கல்லூரி ,தொழிற்கூடங்கள், மற்றும் குடும்பங்களில் மகளிர் தினம் கடைபிடிக்க படுகிறது. ஒவ்வொரு அரசும் மகளிருக்கான பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் வளர்த்தி திட்டங்களை மகளிர் தினத்தன்று வெளியிடுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில் இன்னும் மகளிருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற வாதத்தை முறியடிக்கும் விதமாக பல மகளிர் அமைப்புகள் செயல்படுகின்றன. பெண்கல்வியே பெண்ணை சுதந்திரமுறச்செய்யும் என்ற இந்திய அரசின் கோட்பாட்டில் ஒன்றை அனைவரும் அறியும்படி, அரசு விளம்பரங்கள் மற்றும் சட்டங்கள் மூலமாக தெரியப்படுத்துகிறது.

நாகரிக வளர்ச்சியில் தம்மை மிஞ்சும் திறனுடைய பெண்களை மதிக்கும் பழக்கம் சிறுவயது முதலே ஆண் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க படுகின்றன.மகளிர் தினம் போன்ற நிகழ்வுகளை பள்ளிகளில் நடுத்துவதால்.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது இயல்பான சாத்தியமாகிறது

Inspirational women’s day quotes in Tamilமகளிர் தின வாழ்த்துகள்