Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Top 10 richest people in the world – டாப் 10 உலக பணக்காரர்கள்

Top 10 richest people in the world – டாப் 10 உலக பணக்காரர்கள் :- உலகத்தில் உள்ள முதல் பத்து பணக்காரர்களின் பட்டியல் வருடா வருடம் மாறிக்கொண்டே இருக்கும் ஒரு பட்டியலாகும் ,அவர்களது நிகர மதிப்பு மற்றும் நிதி திறன் கொண்டே இந்த பட்டியலில் மாற்றங்கள் நிகழுகின்றன .இந்த வருடத்துக்கான முதல் 10 பணக்காரர்கள் பட்டியல் இங்கே கொடுக்க பட்டுள்ளது (இந்த கட்டுரை டிசம்பர் 2021இல் எழுதப்பட்டது

1.எலான் மசுக் – நிகர மதிப்பு 202.1 பில்லியன் அமெரிக்க டாலர்

எலான் மசுக்

எலான் மசுக் தனது தனிப்பட்ட புரட்சிகரமான போக்குவரத்து தொழில்நுட்பத்தில் பூமியில் தனது டெஸ்லா மின் வாகனம் மூலமாகவும் ,வானில் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலமாகவும் தனது தனித்துவத்தை முன்னெடுப்பதால் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார் ,இவரது டெஸ்லா நிறுவனம் 800 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகவும் , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக வும் கருதப்படுகிறது , இதனால் இவரது சொத்து மதிப்பு 202.1 பில்லியன் அமெரிக்க டாலர் என வரையறுக்க பட்டு முன்னணியில் உள்ளார்.டெஸ்லா நிறுவனத்தில் மிக சக்திவாய்ந்த கார் தொழில்நுட்ப நிறுவனமாக உலகளவில் உயர்ந்து 800 பில்லியன் மதிப்புடைய நிறுவனமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2.ஜெஃப் பெசோஸ் – நிகர மதிப்பு 191.7 பில்லியன் அமெரிக்க டாலர்

ஜெஃப் பெசோஸ்

191.7 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடம் பிடிக்கிறார்.தனது மனைவியை பிரிந்து அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை பிரித்து கொடுத்த பின்னரும் இதே இடத்தில தொடர்கிறார் இவர் .94இல் தொடங்க பட்ட அமேசான் நிறுவனம் முதலில் மின்னணு புத்தகங்கள் விற்பனையிலும் பின்னர் அனைத்து பொருட்களையும் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யும் நிறுவனமாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது .இவரும் தனது பங்கிற்கு வான் போக்குவரத்தில் கவனம் செலுத்துவது அனைவரும் தெரிந்ததே

3.பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர் – நிகர மதிப்பு 174.8 பில்லியன் அமெரிக்க டாலர்

பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பத்தினர்

பிரான்ஸ் நிறுவனமான LVMH இன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் உலகளவில் பணக்காரர் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்.இவரது நிகர மதிப்பு 174.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும் ,உலகளவில் கோலோச்சும் லூயிஸ் உய்ட்டன் மற்றும் செபோரா போன்ற முன்னணி நிறுவனங்கள் அடங்கிய 70 நிறுவனங்களின் சொந்தக்காரராகிய இவர் கடந்த டிசம்பர் மாதம் 100 பில்லியன் நிகரமதிப்பு எல்லையை தாண்டியது குறிப்பிட தக்கது

4.பில் கேட்ஸ் – நிகர மதிப்பு 131 பில்லியன் அமெரிக்க டாலர்

பில் கேட்ஸ்

பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரும் ,உலகளவில் கோலோச்சும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும் இவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது ,இதன் காரணமாகவே அதிக நாட்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்,பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமாக இருந்து வருகிறது

5.லாரி எலிசன் – நிகர மதிப்பு 123.1 பில்லியன் அமெரிக்க டாலர்

லாரி எலிசன்

இவர் தனது மென்பொருள் நிறுவனம் ஆரக்கிளில் மூலம் இந்த நிகர மதிப்பை அடைந்தார்.2014இல் தனது தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்,கிட்டத்தட்ட ஹவாய் தீவான லனாய் முழுவதையும் இவர் சொந்தமாக வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.மென் சந்தை வணிகத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அடுத்த படியாக அதிகம் சம்பாதிப்பது இவரது நிறுவனமே ஆகும்

6.லாரி பேஜ் – நிகர மதிப்பு 119.6 பில்லியன் அமெரிக்க டாலர்

லாரி பேஜ்

லாரி பேஜ் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனராவார் ,இவர் தனது நிகர மதிப்பான 119.6 பில்லியன் மூலமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடிக்கிறார்.விண்வெளி ஆய்வு நிறுவனமான பிளானட்டரி ரிசோர்சஸ் நிறுவனத்திலும் இவர் முதலீடு செய்துள்ளார் என்பதும் பல நிறுவனங்களுக்கு நிதியளித்து வருவது குறிப்பிடத்தக்கது,பறக்கும் கார் தயாரிப்பு ஆராய்ச்சி நிறுவனங்களான கிட்டி ஹாக் மற்றும் ஓப்பனர் போன்ற நிறுவனங்களில் இவரது பங்கும் இருக்கிறது

7.மார்க் ஜூக்கர்பெர்க் – நிகர மதிப்பு 118.1 பில்லியன் அமெரிக்க டாலர்

பேஸ்புக் நிறுவனத்தை தொடங்கிய மார்க் ஜூக்கர்பெர்க் ஏழாவது இடத்தில 118.1 பில்லியன் அமெரிக்க டாலருடன் உள்ளார் .சமூக வலைத்தளங்களில் கோலோச்சும் இவர் 2012 ஆம் ஆண்டு பில்லியன் டாலர் மயில்கல்லை எட்டினர் ,மிக குறைந்த வயதில் பணக்காரர் வரிசையில் இடம் பெற்றவரும் இளவயதில் பில்லியனர் என்ற பெருமையையும் இவரே சூடிக்கொண்டார்.இந்தியா மற்றும் பல நாடுகளில் டிக்டோக் தடை செய்ய பட்ட பிறகு அதற்க்கு மாற்றாக இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அதிகம் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது

8. செர்ஜி பிரின் – நிகர மதிப்பு 115.3 பில்லியன் அமெரிக்க டாலர்

செர்ஜி பிரின்

ஆல்பாபெட்டின் இணை நிறுவனரும் குழு உறுப்பினருமான செர்ஜி பிரின் 115.3 பில்லியன் டாலர் நிகர பாதிப்புடன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.இவர் 1998 இல் லாரி பேஜுடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிட தக்கது.

9. வாரன் பஃபே – நிகர மதிப்பு 103.1 பில்லியன் அமெரிக்க டாலர்

வாரன் பஃபே

ஓமாஹாவின் ஆரக்கிள் சூத்திர பெயருடன் வளம் வரும் வாரன் பஃபே உலகளவில் மிக சக்திவாய்ந்த முதலீட்டாளர் ஆவார் .உலகளவில் முன்னனி நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பவரும் இவரே ஆவர் ,கோக்க கோலா நிறுவனத்தின் பெறுமதிப்புடைய பங்குகளையும் இவரே வைத்துள்ளார் ,இதன் காரணமாகவே இவரது நிகரமதிப்பு 100 பில்லியனுக்கு மேலாகவே உள்ளது.தனது 11வது வயதில் இருந்தே முன்னனி நிறுவனங்களில் பங்குகளை வாங்க தொடங்கிவிட்டார் என்பது ஆச்சர்யமான உண்மையாகும்

10. முகேஷ் அம்பானி – நிகர மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முதல் பணக்காரரான இவர் உலகளவில் பத்தாவது இடத்தை பிடிக்கிறார் ,இவரது நிகர மதிப்பு 102 பில்லியன் ஆகும்.இவரது தந்தை திருபாய் அம்பானியின் எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவனங்கள் மூலமாக இவருக்கு பெரும் மதிப்பு வருகிறது .தற்சமயம் இந்தியாவில் சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் இவர் இதன் மூலமாகவே முன்னணிக்கு வந்து கொண்டுள்ளார்.இவரது ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் மூலமாக மட்டும் 20 பில்லியன் நிகரமதிப்பை அதிக படுத்தினார் என்பது வரலாறாகும்.