Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th MATERIALS

12th Bio Botany Assignment 2021 with Answerkey (TNSCERT ) Tamil Medium

12th Bio Botany Assignment TM:- Hello Students recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

பனிரெண்டாம் வகுப்பு ஒப்படைப்பு 2021 உங்களுக்காக விடையுடன் கொடுக்க பட்டுள்ளது ,மிக நேர்த்தியாக வடிவமைக்க பட்ட இந்த விடை குறிப்புகளை நீங்கள் கீழே உள்ள PDF லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்

இந்த விடை குறிப்பில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட விரும்பினால் கேளே குறிப்பிடவும் ,உடனுக்குடன் தவறான விடையை மற்றயமைக்க படும்

Click Here to Download 12th Bio Botany English medium Assignment

12th Bio Botany Assignment 2021 with Answerkey
Assignment

ஒப்படைப்பு  வகுப்பு :12

பாடம்: உயிரி – தாவரவியல்

பாடம்-1 தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம்

அலகு-1 பகுதி -அ
1.ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.மயோசோட்டிஸின் மகரந்தத் துகள்களின் அளவு
அ) 10 மைக்ரோ மீட்டர் இ) 200 மைக்ரோமீட்டர்
ஆ) 20 மைக்ரோமீட்டர் ஈ) 2000 மைக்ரோ மீட்டர்
  அ) 10 மைக்ரோ மீட்டர்
2. கொடுக்கப்பட்டுள்ள அவற்றில் எது பெரு கேபீட்டகத் தாவரத்தை குறிக்கிறது
அ) சூல் ஆ) கருப்பை
இ) சூல் திசு ஈ) கருவூண் திசு
  ஆ) கருப்பை
3. முளை வேர் உறை காணப்படும் தாவரம்
அ) நெல் ஆ)பீன்ஸ்
இ) பட்டாணி ஈ)டிரைடாக்ஸ்
  அ) நெல்
4. மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும்
அ) அடித்தோல் நிலையிலுள்ள வித்திருவாக்கச் செல் ஆ) சூல்களில் அதிக அதிக சூல் திசுப் பெற்றுள்ளது
இ) புறத்தோல் நிலையிலுள்ள வித்துருவாக்கச் செல் ஈ)சூல்களில் ஓரடுக்கு சூல் திசு காணப்படுகிறது
  அ) அடித்தோல் நிலையிலுள்ள வித்திருவாக்கச் செல் (மற்றும் ) ஈ)சூல்களில் ஓரடுக்கு சூல் திசு காணப்படுகிறது
5. புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுநர்
ஆ) எஸ் .ஆர் .காஷ்யப் இ) எம்.எஸ். சுவாமிநாதன்
ஆ)பி.மகேஸ்வரி ஈ)கே.சி மேத்தா
  ஆ)பி.மகேஸ்வரி
6. கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை (1.9கருவுறா கனிகள் பக்கம் 30)
அ) எண்டோகார்ப் ஆ)எப்பிகார்ப்
இ) மீசோகார்ப் ஈ) விதை
  ஈ) விதை
7. கீழ்காணும் எத்தாவரத்தில் பொலினியம் காணப்படுகிறது
அ) ஹைபிஸ்கஸ் ஆ) டாட்டூரா
இ) எருக்கு ஈரிஸினஸ்
  இ) எருக்கு
8. குதிரைலாட வடிவ சூல்திசு எவ்வகை சூலில் காணப்படுகிறது
அ) ஆம்பிரோபஸ் ஆ)கம்பை லோட்ரோபஸ்
அ) ஆம்பிரோபஸ் ஈ) நேர் சூல்
  அ) ஆம்பிரோபஸ்
9.பறவை மூலம் மகரந்த சேர்க்கை எனப்படும் (1.4.3 மகரந்த சேர்க்கைக்கான முகவர்கள் பறவை மகரந்தசேர்க்கை பக்கம் 18)
அ)கேன்தரோஃபில்லி இ)மெல்லிடோ ஃபில்லி
ஆ)ஃபாலினோ ஃபில்லி ஈ)ஆர்னித்தோஃ பில்லி
  ஈ)ஆர்னித்தோஃ பில்லி
10.உறை குளிர் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறது(உங்களுக்கு தெரியுமா? மகரந்தவியல் பக்கம் 9)
அ) திரவ பாதாசம் ஆ)திரவ ஹீலியம்
இ) திரவ கார்பன்-டை-ஆக்சைடு ஈ) திரவ நைட்ரஜன்
  ஈ) திரவ நைட்ரஜன்

பகுதி-ஆ

II குறு வினா

1. பாலினப்பெருக்கம் என்றால் என்ன?
பாலினப்பெருக்கம் ஆண் ,பெண் கேமிட்டுகளின் உற்பத்தி மற்றும் இணைவு ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது ஆகும் 
2. “இருமடிய வித்தாக்கம்” என்ற சொல்லை வரையறு? 
   
3. பொலினியம் என்றால் என்ன?

சில தாவரங்களில் ஒரு நுண்வித்தகதிலுள்ள நுண் வித்துக்கள் அனைத்தும் ஒன்றாக இனைந்து ஏற்படுத்தும் அமைப்பு பொலினியம் எனப்படும் 

எ.க :- எருக்கு 

4. ஸ்டோமியம் என்றால் என்ன?
1. ஒரு முதிர்ந்த மகரந்தப் பையில் இரண்டு விந்தகங்களை இணைக்கும் ஒரு மகரந்த மடல் பகுதியில் அமைந்த செல்களில் செல்லுலோஸ் மற்றும் லிக்னினால் ஆன தடிப்பு காணப்படுவதில்லை ,இப்பகுதி ஸ்டோமியம்  எனப்படும் ,ஸ்டோமியம்  முதிர்ந்த மகரந்தப்பையின் வெடிப்பிற்கு உதவுகின்றது 
5. ஸ்பொரோபொலினின் என்றால் என்ன?
  • ஸ்பொரோபொலினின் எனப்படுவது மகரந்த சுவர் பொருள் ஆகும் 
  • இவை உருவாக மகரந்ததுகளின் சைட்டோபிளாசம் மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது 
  • இது கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது 
  • இரு இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மை உடையது 
பகுதி-இ
III. சிறு வினா
1. தன் மகரந்த சேர்க்கையைத் தடுக்க இருபால் மலர்கள் மேற்கொள்ளும் ஏதேனும் மூன்று உத்திகளை பட்டியலிடுக

1.மூடிய மகரந்த சேர்க்கை 

மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக திறக்காமல் அல்லது இனப்பெருக்க உறுப்புகளை வெளிக்காட்டாமலும் மூடிய நிலையில் மலரில் மகரந்த சேர்க்கை நடைபெறும் .எ.கா :- காமிலினா,வயோலா,ஆக்சாலிஸ் .இவை தன் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுகின்றன 

2. ஒத்த முதிர்வு 

ஒரு மலரில் மகரந்ததாள் சூலக முடி ,இரண்டும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்தால் இதற்க்கு ஒத்த முதிர்வு என்று பெயர் எ.கா :- மிராபலிஷ்,ஜலாபா,கேத்தராந்தஸ் ரோஷியஸ்.

3.முழுமையற்ற இருக்கால முதிர்வு 

இக்கால முதிர்வு மலர்களில் ஒரு மலரில் மகரந்ததாலும் சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடைகின்றன ,சில நேரங்களில் இந்த இன்றியமையா உறுப்புகளின் முதிர்வடையும் நேரம் ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும் பொது தன மகரந்த சேர்க்கைக்கு சாதகமாகிறது 

2. மூடு விதைத் தாவரங்களின் கருவூண் திசு, மூடா விதை தாவரங்களின் கருவூண் திசுவிலிருந்து வேறுபடுகிறது! ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்

கருவூண் திசு , கருவுறுத்தலுக்குப் பின் கரு பகுப்படைவதற்கு முன் முதல்நிலை கருவூண் உட்கரு உடனடியாக பகுப்படைந்து உருவாகும் திசு 

மூடுவித்தை தாவரம் , மூடுவிதை தாவரங்களில் மூவிணைதல் மூலம் உருவாகும் முதல்நிலை கருவூன் திசு உட்கரு ( 2 துருவ உட்காருங்கள் மற்றும் 1 விந்து உட்கரு ) மும்முடி குரோமோசோம்களைக் கொண்டுள்ளது 

மூடவிதை தாவரம் , மூடவிதை கொண்ட தாவரங்களில் ஒற்றை மைய குரோமோசோம் கொண்டுள்ளது வளரும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது ,எடுத்துக்காட்டு ஹைடிரில்லா,வாலிஸ்நெறியா 

3. எண்டோதீசியம் மகரந்தப்பை வெடித்தலுடன் தொடர்புடையது’ இக்கூற்றை நியாயப்படுத்துக 
எண்டோதீசியம் பொதுவாக புறத்தோலுக்குக் கீழாக ஆரப்போக்கில் நீண்ட ஓரடுக்கு செல்களால் ஆனது,உட்புற கிடைமட்டச் சுவர் பட்டைகளைத் தோற்றுவிக்கிறது ,இச்சிலைகள் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டவை , நீர்வாழ்த் தாவரங்கள் ,சிற்றுண்ணித் தாவரங்கள் ,மூடிய பூக்களைக் கொண்ட தாவரங்கள் மற்றும் தீவிர ஒட்டுண்ணித் தாவரங்களில் மகரந்தப் பைகளில் எண்டோதீசியம் வேறுபாடடைவதில்லை ,இரண்டு வித்தகங்களை இணைக்கும் ஒரு மகரந்த மடல் மிகுதியில் அமைந்த செல்களில் இத்தடிப்பு காணப்படுவதில்லை,இப்பகுதி ஸ்டாமியம் என்று பெயர் ,எண்டோதீசியம் நீர் உறிஞ்சுதன்மையும் ,ஸ்டாமியமும் முதிர்ந்த மகரந்தப்பை வெடிப்பிற்கு உதவுகின்றன.
4.திறந்த விதை தாவரங்களிலும் மூடு விதை தாவரங்களிலும் நடைபெறும் மகரந்த சேர்க்கை வேறுபட்டது,காரணங்களை கூறுக
திறந்த விதை தாவரங்களில் மலர் மலர்ந்து ,அதன் முதிர்வு மகரந்த பைகளையும் ,சூலகமுடியையும் ,மகந்தசேக்கைக்காக வெளிக்காட்டுகின்றன,இத்தகைய மலர்கள் திறந்த மலர்கள் எனவும் ,இத்தகைய நிகழ்ச்சி திறந்தமலர் மகரந்த சேர்க்கை எனவும் அழைக்கப்படுகிறது  மூடு விதை தாவரங்கலில் சிலவற்றில் மகரந்த சேர்க்கை மலர் திறக்காமலும் ,அவற்றின் இன உறுப்புகள் வெளிபாடடையாமலும் இருக்கின்றன,இத்தகைய மலர்கள் மூடிய மலர்கள் எனவும் ,இத்தகைய நிகழ்வு மூடியமலர் மகரந்த சேர்க்கை எனவும் அழைக்கப்படுகிறது 
5.இரு விதையிலைத் மற்றும் ஒரு விதையிலைத் விதைகளின் அமைப்பை வேறுபடுத்துக
இரு விதையிலை விதை  ஒரு விதையிலை விதை 
விதையில் இரண்டு விதையிலைகள் காணப்படும்  ஒரு விதையிலை காணப்படும் 
விதை உறை தடித்த வெளியுறை மற்றும் மெல்லிய சவ்வு மற்றும் மெல்லிய சவ்வு போன்ற வேறுபாடு அடைந்து காணப்படும்  விதை உறை பிரிக்க முடியாமல் சவ்வு போன்று விதையை மிக நெருக்கமாக ஒட்டி காணப்படுகிறது 
கரு ஆச்சு நீளமானது இரண்டு விதையிலைகளுக்கும் நடுவே காணப்படுகிறது  கரு அச்சு கட்டயானது 
கருவூண் திசு குறைந்த அளவில் காணப்படும்  சேமிப்பு திசுவான கருவூன் திசு விதையின் பெரும் பகுதியாக உள்ளது 
பகுதி – ஈ
IV.பெறு வினா
1.பூச்சி மகரந்தசேர்க்கை மலர்களில் காணப்படும் சிறப்புகளை குறிப்பிடுக
   
2.கருவுண் திசு என்றால் என்ன? அதன் வகைகளை விவரி