Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

9th Tamil Basic Quiz 1 (வினாடி வினா )Answerkey 2021

9th Tamil Basic Quiz 1 (வினாடி வினா )Answerkey 2021:- Here is the full answer key for the 9th standard Tamil basic quiz number one, Vinadi Vina Answer for Tamil subject for 9th standard students,

இயல்1 – பயிற்சித்தாள் –  ஒன்பதாம் வகுப்பு – தமிழ் 

உரைநடை உலகம் – திராவிட மொழிக்குடும்பம்

1. திராவிட மொழிக்குடும்ப அடிப்படையில் மாறுபட்டதைக் கண்டறிந்து காரணம் எழுதுக

அ) கூயி ஆ) கோண்டா

இ) குரூக்  ஈ) கோயா

விடை- குருக்- வடதிராவிடம் – 

மற்ற மூன்றும் நடுத்திராவிட மொழிகள்.


2. திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மொழி ஆராய்ச்சியாளர்நால்வரின் பெயரைக் குறிப்பிடுக.

பிரான்சில் எல்லிஸ்,  கால்டுவெல் , ஹோக்கன் , எமினோ


3. தொன்மை, தனித்தன்மை – இரு சொல்லையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

தமிழ்மொழி தொன்மையும் , தனித்தன்மையும் வாய்ந்த மொழியாகும்


4. உரைப்பகுதியைப் படித்து வினாக்கள் இரண்டனை உருவாக்குக.

                   1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல்,திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்த பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும்எடுத்துரைத்தார்.

வினாக்கள் 

1 ) ‘ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ‘ என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

2 ) திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை என நிறுவியவர் யார் ?


5 ) திராவிட மொழிக்குடும்பத்தின் வகைகள் யாவை ? உங்கள் தாய்மொழி எந்தத் திராவிட மொழிக்புடும்பத்தைச் சேர்ந்தது ?

திராவிட மொழிக்குடும்பத்தின் வகைகள்

1 ) தென்திராவிட மொழிகள் 

2) நடுத்திராவிட மொழிகள்

3 ) வடதிராவிட மொழிகள்

என் தாய்மொழியான தமிழ்மொழி தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது

அட்டவணையைப்படித்து 6 முதல் 8 வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.

தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் துளு கூர்க்
மரம் மரம் மானு மரம் மர மர
ஒன்று ஒண்ணு ஒகடி ஒந்து ஒஞ்சி
நூறு நூறு நூரு நூரு நூது
நீ நீ நீவு நீன் நின்
இரண்டு ஈர்ரெண்டு ஈர்ரெண்டு எரடு ரட்டு
நான்குநால் ,நாங்கு நாலுகு நாலு நாலு
ஐந்து அஞ்சு ஐது ஐது ஐனு

6 ) தெலுங்கு , கன்னட மொழிகளில் பொதுவாக உள்ளசொற்களை எழுதிஅவற்றிற்கான தமிழ்ச் சொற்களை எழுதுக.

நூரு , நூரு  – நூறு

நாலுகு ,நாலு  – நான்கு

ஐது , ஐது  – ஐந்து


7 ) இரண்டு என்னும் தமிழ்ச்சொல் மலையாளம் , தெலுங்கு மொழிகளில் எந்த முன்னொட்டைப் பெறுகிறது ?

மலையாளம் , தெலுங்கு – ஈர்ரெண்டு – ‘ ஈர் ‘ என்னும் முன்னொட்டைப் பெறுகிறது.


8 ) ‘ நீ ‘ என்னும் சொல் கன்னடம் , துளு போன்ற மொழிகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ?

  நீ என்னும் சொல் கன்னடத்தில் ‘ நீன் ‘ என்றும்  , துளுவில் ‘ ஈ’என்றும் பயன்படுத்தப் படுகிறது.


9 ) இரண்டு புதிருக்குமான ஒரே விடையைக் கண்டறிக.

அ) இது ஒரு நான்கெழுத்துச் சொல் . மண்ணிலே மறைந்திருக்கும்.மதிப்பு மிகுந்திருக்கும். முதலெழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும்.அது என்ன ?

விடை – புதையல் , தையல்

ஆ ) இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும்.இடை எழுத்துகள் இரண்டை எடுத்துவிட்டால் மாடும்தின்னும்.மாதம் ஒன்று மறைந்திருக்கும். அது என்ன ?

விடை – புயல் , புல்.


10 ) ‘ பிரான்சிஸ் எல்லிஸ் ‘ என்பாருக்கும்  ‘ தென்னிந்திய மொழிகள் ‘  என்பதற்கும் உள்ள தொடர்பினை எழுதுக.

1 ) முதன் முதலில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தவர் பிரான்சிஸ் எல்லிஸ்.

2 ) தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகியவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தவர் இவர்.

3 ) தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் முதலிய மொழிகளை ஒரே இனமாகக் கருதி ‘ தென்னிந்திய மொழிகள் ‘எனப் பெயரிட்டவரும் இவரே.


11 )பின்வரும் திராவிட மொழிக்குடும்பத்தின் பண்பினைப் படித்து ஏற்ற எடுத்துக்காட்டுகளைஎழுதுக.

பண்பு:திராவிடமொழிகளில் குறில் , நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணைசெய்கின்றன.

எ.கா – வளி – வாளி 

அடி – ஆடி 

கொடு – கோடு

படு – பாடு 

விடு – வீடு


12 ) ‘தமிழ்மொழியின் தனித்தன்மை  ‘என்னும் தலைப்லிற்கான குறிப்புகளைக் கொண்டு ஒரூ பக்க அளவில் கட்டுரை எழுதுக.

முன்னுரை – தமிழ்மொழி – தொன்மை – இலக்கண இலக்கிய வளம் – தனித்தியங்கும் மொழி – சொல்வளம் – தனித்தன்மை – முடிவுரை


13 ) திராவிடமொழிகளின் பண்பினைப் படித்துப் பின்வரும் அட்டவணையை நிரப்பி நிறுவுக.

  ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டும். திணை , பால் , எண் , இடம் ஆகிய வேறுபாட்டைக்காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள்  இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அட்டவணை 

9th Tamil Basic Quiz 1 (வினாடி வினா )Answerkey 2021
9th Tamil Basic Quiz 1 (வினாடி வினா )Answerkey 2021

நிறுவும் கருத்து 

தமிழ் மொழியில் அஃறிணையில்  பால்பகுப்பு இல்லை.ஆண் , பெண் வேறுபாடு உண்டு.அஃறிணைச் சொற்களில் பால்காட்டும் விகுதிகள் இல்லை. தன்மை முன்னிலை இடச்சொற்களில் பெயர்ச்சொல்லைக்கொண்டே பால்பகுப்புக் கூறமுடியும்.

    இப்பண்புகள் ஆங்கிலத்தில் இல்லை.வினைச்சொல்லைக்  கொண்டு திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைஆங்கிலத்தில் அறிய முடியாது.


14 ) தமிழ் மொழியிலுள்ள வேர்ச்சொற்கள் , பயன்பாட்டில் எஙவ்வாறு வடிவமாற்றம் பெறுகின்றனென்பதை ‘வா, தா , செல் ஆகிய வேர்ச்சொற்களைக்கொண்டு விளக்குக.

விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

வா- வந்த , வரும் , வந்தான் , வந்தது , வந்தன , வருவார்கள்.

தா – தரும் , தந்தது , தந்தன , தருவான் , தருவாள் , தருவார்கள்

செல் – செல்லும் , சென்றது , சென்றன , செல்வான் , செல்வாள் , சென்றார்கள் , செல்வார்கள்.


15 ) படமும் , செய்தியும்உணர்த்தும் கருத்து குறித்து ஐந்து வரிகள் எழுதுக.

9th Tamil Basic Quiz 1 (வினாடி வினா )Answerkey 2021

1 ) ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொரிசியஸ் நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

2) தமிழகத்தின் அண்டை நாடானிலங்கை நாட்டின்பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

3 ) இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தமிழ் பேச்சு மொழியாக உள்ளது.

4 ) இங்கிலாந்து , கனடா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பேசப்படும் பெருமை உடையது தமிழ்மொழி.

5 ) தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.