Site icon Tamil Solution

Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை

abdul kalam

abdul kalam

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானியாக இருந்து பின் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது ஜனாதிபதியாகவும் இருந்தார்.

இந்திய தலைவர்களிலேயே குழந்தைகள் மற்றும் இளவயதினரால் அதிகம் நேசிக்க பட்டவர் அப்துல் கலாம் அவர்கள் , புகழ் பெற்ற விஞ்ஞானியான இவர் ஓய்வு பெற்ற பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடல் நிகழிச்சி நடத்தி ,அவர்களுக்கு ஊக்கத்தயும் தன்னம்பிக்கையும் ஊட்டினார் ,அவரது புகழ் பெற்ற வாக்கியமான கனவு காணுங்கள் ஒரு மேடையில் சொல்ல பட்ட செய்தியை ஆகும்

இளமை காலங்களில் இவர் இராமேஸ்வரத்தில் பள்ளி கல்வியும் ,திருச்சி புனித ஜோசப் கலோரியில் இயற்பியல் படித்து பின் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பனி புரிந்த இவர் இந்தியாவின் முதல் ஏவுகணைகளை வடிவமைத்தார் பின் நாட்களில் இந்திய ஏவுகணை நாயகன் என்றழைக்க பட்டார்.அணுஆயுத ஆய்வில் கலந்து கொன்ற கலாம் இந்தியாவின் பொக்ரான் அணுகுண்டு சோதனையில் பெரும் பங்காற்றினார் .

அனைவராலும் போற்ற பட்ட கலாம் அவர்கள் 2002 குடியரசு தலைவர் போட்டிக்கு இருபெரும் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . குடியாரசு தலைவர் பதவி முடிவடைந்தவுடன் மீண்டும் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இம்முறை அதிக அளவில் மரக்கன்றுகளை நடும் பணியையும் சேர்த்து செய்தர்.

அப்துல் கலாம் அவர்களின் சுய சரிதை புத்தகமாக அவர் எழுதிய அக்னிச் சிறகுகள் கருத படுகிறது.அப்துல் கலாம் அவர்கள் பெற்ற 1997 இல் இந்திய அரசின் பாரத ரத்னாவும் , 1990 இல் பத்ம விபூஷண் மற்றும் 1981 இல் பத்ம பூஷன் விருதுகளும் பெற்றார்

Exit mobile version