Site icon Tamil Solution

En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம்

En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி கடிதம் எழுத வேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு தாய் நான் தற்போது நிறைவேற்றும் ஊக்கத்தில் உள்ளேன் எனது கடிதத்தை காண மேலும் படிக்கவும்

நான் பிறந்த இந்திய பொன்னாடே,

தேசாதி தேசங்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கித்தவிக்கும் இந்த நவீன யுகத்தில் ,எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் என்னையும் என் குடும்பத்தையும் எனது சமூகத்தையும் சுதந்திரமாக வைத்திருக்கும் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை,நீ ஒரு சுதந்திர நாடு என்பதனை நான் அனுபவிக்கும் பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம்,மத சுதந்திரம் என அனைத்து வகையான தனிமனித சுதந்திரங்களையும் அனுபவிக்கும் என்னால் அனுபவிக்க முடிகிறது

நீ ஒரு வளரும் நாடு என்று எவரேனும் கூறினால் கூட என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை ,மிக நீண்ட ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாட்டின் வளர்ச்சியை வரலாற்று நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்ற மைல் கல்லை நீ எப்போதோ கடந்துவிட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு,

உனது வளர்ச்சியை கண்டு நான் பூரிப்படையும் கரணங்கள் ஏராளம் ,நவீன அறிவியல் யுகத்தில் மேலை நாடுகள் என்று கூறிக்கொள்ளும் வளர்ந்த நாடுகளுக்கு எப்போதும் சலித்ததல்ல எனது பாரத தேசம் என்று இந்த பாரெங்கும் கொடிகட்டி பறக்கும் என்னைப்போன்ற குடிமக்கள் ஆயிரம் ஆயிரமுண்டு,உன்னை குறை சொல்லும் கூட்டத்திற்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ,எந்த ஒரு தேசமும் முழுமை பெற்றவை அல்ல அதை மேம்படுத்த எடுக்கும் ஒவ்வொரு குடிமகனின் முயற்சி மட்டுமே அதை மேம்பட்ட நாடக அறிய முடியும் என்கிற கோட்பாட்டை நான் எப்போதும் நம்புகிறேன் ,அந்த வகையில் உன்னை மென் மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல துடிக்கும் மருத்துவனாக ,பொறியாளனாக ,உழைக்கும் சாமானியனாக ,போர் வீரனாக என பல முனைகளில் உனக்காக உழைக்கும் எனது இந்திய தேச சொந்தங்களை வணங்குவதும் எனது கடமையாகி போனது.

என்ன தவம் செய்தேன் இந்த புண்ணிய பூமியில் பிறப்பெடுக்க என தினம்தோறும் மார்தட்டி கொள்ளும் உனது குடிமகன்களில் ஒருவனாக இருந்து இன்று ஒரு சபத மேற்கிறேன்,உன்னை உலகத்தில் தலை சிறந்த தேசமாக்கிட உழைக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு கை கொடுத்து நானும் உனது வளர்ச்சியில் பங்கு பெறுவேன் என்பதே அந்த உறுதிமொழி ஆகும்

Exit mobile version