Site icon Tamil Solution

Essay About Rain in Tamil – மழை கட்டுரை

Essay About Rain in Tamil – மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் மனித நாகரிகத்தின் முதல் கடமையாகும் .எனவேதான் விவசாய நிலங்களை சுற்றி அதிக மரங்களையும். தாழ்வான பகுதிகளில் கிணறுகளையும் முன்னோர்கள் பராமரித்து வந்தனர்.

கடல்,ஆறு ,மற்றும் நீர் நிலைகளில் இருந்து சூரிய வெப்பத்தால் ஆவியாகும் நீர் ,மேகங்களாக மாறி தேவையான இடங்களில் மழையாக பொழிகிறது. மழை பொழிவை அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் மூன்று வகையாக பிரிக்கலாம் வெப்ப சலன மலை ,பருவ மழை மற்றும் சூறாவளி மழை என பிரிக்கலாம்

வெப்ப சலன மலை

பகலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படும் விரிந்த சூடான கற்று லேசாக மாரி காற்று மண்டலத்தில் உயரிய இடத்திற்கு பயணிக்கிறது .அங்கு குளிர்விக்க படும் காற்று நீர் திவலைகளாக மாறி புவிப்பரப்பில் மழையாக பொழிகிறது .இவ்வகை மழை மதிய நேரங்கள் மற்றும் சாயங்கால வேலைகளையே பொழிகின்றன.

பருவ மழை

கடலில் இருந்து புறப்படும் குளிர்ந்த கற்று மலை சரிவுகளில் மோதி உண்டாகும் மழை இதுவாகியும்,இந்திய தென் பகுதிகளில் அதிக தொடர்ச்சியான மலைகள் இருப்பதின் பருவ மழை அதிகம் பொழியும் பகுதிகளாக மலையை ஒட்டியுள்ள பகுதிகளே இருக்கின்றன . வட மாநிலங்களில் மிகப்பெரிய அரணாக இமயமலை தொடர் இருப்பதினால் அங்கு தென்னகத்தை விட அதிக பருவ மலை பொழிகிறது .மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சி மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இவ்வழியில் கிடைக்கிறது

சூறாவளி மழை

புயல் மற்றும் சூறாவளி ஏற்படும்போது உடன் பெய்யும் மழையை இது குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை பொழிவை இவ்வகை மழையே கொடுக்கிறது. சூறாவளி இந்திய எல்லையில் அதிகம் வராமல் இருந்த காலம் முடிந்து விட்டதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவிக்கிறது . 2000 ம் ஆண்டுக்கு பின்னர் அதிக சூறாவளிகளை தென் இந்திய மாநிலங்கள் சந்தித்து விட்டன . இத்தகைய மழை ஒரே நாளில் ஒரு வருடத்தில் பெய்யக்கூடிய மழையில் 60 விழுக்காடு பெய்துவிடுகின்றன ,இதன் காரணமாக பெரிய நகரங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.

விவசாயத்தை தொழிலை கொண்ட நாடுகளில் ஒன்று இந்திய, எனவே இந்திய பொருளாதாரத்தில் மழைப்பொழிவு பெரும் பங்கு ஆற்றுகிறது. காடுகளை அளித்தல் நகரமயமாதல் போன்ற காரணங்களினால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் பிரச்னைக்கு அதிக மழை பெறுவது கட்டாயமாகிறது . அதிக மழை பொழிய மேகங்களை கொடுக்கும் மரங்களை அதிகமாக நடுவதே ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்

Exit mobile version