Site icon Tamil Solution

Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை

Indian Culture Tamil Essay – India Kalacharam Katturai – இந்திய கலாச்சாரம் கட்டுரை

இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை என்ற பதத்திர்ற்கு ஏற்ப மொழிவாரியாக ,உடை வாரியாக ,உணவு வாரியாக ,கலை வாரியாக வேறுபடுகிறது.

இந்திய கலாச்சாரத்தின் உச்சமாக விருந்தோம்பல் இடம் பெறுகிறது, இருக்கைகளை கூப்பி வணக்கமிடும் பழக்கம் தொன்று தொட்டு இந்திய கலாச்சாரத்தின் அத்தனை பிரிவுகளிலும் இடம் பெறுகிறது .

இந்திய கலாச்சாரம் வேற்று நாடுகளின் படையெடுப்பு மற்றும் ஆட்சி காரணமாக சிதைந்து போகாமல் ,ஒவ்வொரு நாலும் மேம்பட்டு கொண்டே இருக்கிறது ,உடுத்தும் உடையில் மேற்கத்திய நாகரிகம் பளிச்சிட்டாலும் உள்ளூர அமைந்த இந்திய கலாச்சார ஒரு போதும் மாறாமலே இருக்கிறது.

இந்திய கலாச்சாரம் பற்றிய ஆய்வு கட்டுரை எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்படும் பிரமிப்பு என்னவென்றால் எத்தனையோ கலாச்சாரங்களின் சாயல் படிந்தாலும் இந்திய கலாச்சாரம் உயர்ந்து நிற்பதுதான்

மத ரீதியான கலாச்சாரங்களை வரையறுக்கும் ஆய்வாளர்கள் இந்திய கலாச்சாரத்தை மட்டும் மொழி ரீதியாகவே அணுகுகிறார்கள் , ஒவ்வொரு மொழிக்கும் அதன் கலாச்சாரம் மாறாத புத்தகம் ,நாடகங்கள் ,திரைப்படங்கள் என மேலோங்கி நிற்கிறது,

மொழி ரீதியாக கலாச்சாரங்கள் பிரிக்க பட்டாலும் அனைத்திர்ற்கும் உள்ளக இந்திய கலாச்சாரம் என்ற ஒற்றை தொகுப்பு அடங்கியுள்ளது .

புதிய மத பழக்க வழக்கங்கள் இந்திய கலாச்சாரத்தின்மீது ஊன்றி இருந்தாலும் , அவற்றயும் தன்னுடன் இணைத்து கொள்ளும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டே அன்றி ,பழைய கலாச்சாரத்தை மறந்து புதிய கலாச்சாரத்தை தழுவும் முறை அறவே இல்லை

Exit mobile version