Site icon Tamil Solution

kalvi katturai in tamil – கல்வி கட்டுரை

kalvi katturai in tamil – கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் . மனித வாழ்க்கையை வளம்பெற செய்வதில் கல்வியே முக்கிய இடத்தை வகிக்கிறது.

இந்த உலகில் நமது பங்கு என்ன என்று புரிந்து கொண்டு இந்த வளரும் சமுதாயத்தில் ஒரு அங்கமாக மிளிர கல்வி ஒன்றே துணை புரிகிறது . மற்ற உயிரினங்களில் இருந்து வேறுபட்டு சக்திவாய்ந்த உயிரினமாக மனிதன் வாழ்வதற்கு கல்வியே அடிப்படை காரணியாகும்.

கல்வியின் முக்கியத்துவம்

இன்றைய உலகில் மனிதனுக்கு கல்வியே மிக முக்கிய தேவையாக உள்ளது. வளரும் நாடுகளில் சாதாரண மனிதனை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் சக்தி கல்விக்கு உண்டு.கல்வி ஒருவரை மகிழ்ச்சியுடன் வாழவைப்பதோடு தனது எதிர்காலத்தை பாதுகாப்பாகவும், சிறந்ததாகவும் அமைத்து கொள்ள துணை புரிகிறது .

கல்வி அறிய புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணியாக உள்ளது ,கல்வி அறிவு கொண்ட மக்கள் அதிகம் உள்ள நாடே உலகில் தலைசிறந்து விளங்குவதால் கல்வியின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது .கல்வி அறிவு கொண்ட ஒரு மனிதன் ஓடும் நதி போல தான் கடக்கும் இடங்களை எல்லாம் கல்வி அறிவு நிறைந்த இடமாக மாற்றுகிறார் . இந்திய தேசத்தில் பெண் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் காலம் அணைத்து நாடுகளும் விட முன்னதாகவே ஆரம்பமாகி விட்டது .

புதிய கல்வி

தற்போதைய காலகட்டங்களில் புதிய புதிய வழிகளில் கல்வி போதிக்க படுகிறது . கல்வி கற்க வேண்டும் என்று விரும்பும் ஒரு மனிதன் தனது வீட்டிலேயே இருந்து கல்வி கற்கும் காலம் தொடங்கிவிட்டது.

இணைய வசதி கொண்ட செல் பேசி பரவலாக நம் அனைவரது கைகளிலும் தவழுகிறது .புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் ,புதிய செய்திகள் ,புதிய அறிவியல் கட்டுரைகள் ,ஆய்வு கட்டுரைகள் ,பாதுகாப்பு வழிமுறைகள் என அனைத்தும் புத்தக வடிவிலும் ,காணொலி கட்சியாகவும் , வளையொளி என இலவசமாகவே கிடைக்கின்றன .

முந்தய கால கட்டங்களில் அறிவியல் கட்டுரை படிக்க கிராமத்தில் இருக்கும் ஒருவர் நூலகத்தையோ புத்தக கடைகளையோ நாட வேண்டி ,இருந்தது அனால் இன்று சில நிமிடங்களில் நமக்கு தேவையான கல்வி கட்டுரைகள் நமக்கு இலவசமாக கிடைக்கிறது .

கல்வி போதிக்கும் முறை மட்டுமல்லாது கல்வி பயிலும் முறையும் மாறிவிட்டது . கல்வி கற்கும் மாணவர் தனக்கு தேவையான பாட புத்தகங்களை மின்புத்தகங்களாக (ebook) சேமிக்க முடிகிறது . புத்தக பிரசுகர்கள் தற்போது மின்புத்தகங்களையும் பிரசுரிக்கின்றனர் , மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வி நிலையமும் இணையவழி கல்வி பயிலும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறது , 2020 இல் ஏற்பட்ட கோரோனோ பரவலை அடுத்து கல்வி கற்கும் கற்பிக்கும் முறை இணையவாழி யாக , தொலைக்காட்சி வழியாக ,வானொலி வழியாக என வேகம் எடுத்து.

Exit mobile version