Site icon Tamil Solution

நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil

நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக இருப்பார்.ஏனென்றால் காமராஜர் படிக்காத போதிலும் படிப்பின் வலிமையை அறிந்தவராக இருந்தார்.எனவே அவரைப்பற்றி கட்டுரை வரைகிறேன்.

காந்திய வழியில் நடந்து சுதந்திரத்திற்க்காக போராடியவர் காமராஜர் ஆவர்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வெற்றி பெற்று பணியாற்றிய காமராஜரின் சாதனைகளே அவரை நேசிப்பதற்கான முக்கிய காரணங்களா நான் சொல்லுவேன்

தமிழக முதல்வரான பிறகும் எளிமையான வாழ்வை வாழ்ந்த காமராஜர் தனது தாயை கூட தனது சொந்த வீடான விருதுநகர் வீட்டில் வாழவைத்த, ஒரு போதும் அரசு வீடுகளை தமது சொந்த பயன்பாட்டிற்கு பயன் படுத்தவில்லை காமராஜர்.தனது சம்பளத்தில் இருந்தே தனது செலவு மற்றும் தனது தாயின் செலவுகளை நிர்வகித்தார் .அவர் இறந்த பிறகு அவரது கணக்கில் இருந்த பணத்தை பார்த்து இந்த உலகமே அதிசயித்து .இப்படி ஒரு எளிமையான தலைவரா என்று எனக்கு ஆச்சர்யமூட்டியது அவரது சென்னை வீட்டை பார்த்த போது தான்,அந்த வீடு தற்போது அரசு பராமரிப்பில் உள்ளது.

கல்வியின் முக்கியத்தை உணர்ந்து இருந்த காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிகளை கட்டினார். அரசு பணம் போதுமானதாக இல்லை என்ற காரணத்தை கூறாமல் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள வசதியானவர் உதவியுடன் அரசு உதவி பெரும் பள்ளிகளையும் காட்டினார். மாணவர்கள் பசியோடு பள்ளிக்கு வருவதையும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும் சத்துணவு மற்றும் சீருடை போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

தொழில் கொள்கையில் முன்னோடியாக தமிழகம் திகழ்வதற்கு காமராஜரே முக்கிய காரணம்.விவசாயிகளின் துயர் தொடக்க அணைத்து தமிழக நதிகளுக்கு அணைக்கட்டியது என்னை ஆச்சர்யமுர செய்தது.மின்சார நிலையங்களை பராமரிக்க அருகில் உள்ள தொழிற்சாலைகளை உதவிக்கு கொண்டு அதிலிருந்தது பக்கத்து கிராமங்களுக்கு மின் இணைக்கும் செயல் என்னை புன்னகைக்க செய்தது.

Exit mobile version