Site icon Tamil Solution

Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை

PONGAL ESSAY IN TAMIL

Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a essay for students who needs Essay about pongal in tamil and pongal festival essay in tamil langugae

பொங்கல்

வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி சொல்ல நடத்த படும் பண்டிகையாகும் .உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகள் நான்கு நாட்கள் நடத்த படுகிறது . போகி பொங்கல் , தை பொங்கல்,மாட்டு பொங்கல் ,காணும் பொங்கல் என நான்கு தினங்களுக்கும் தனி தனி பெயருண்டு

போகி பொங்கல்

தமிழர்தம் பொங்கல் பண்டிகையும் முதல் நாள் விழா இதுவாகும் .பழையன கழிதல் புதியன புகுதல் என்பது இத்தினத்தின் சாராம்சமாகும். தமிழர் தம் வேளாண்மை சுழற்சியின் கடைசி நாள் இதுவாகும் .பண்டைய களங்களில் ஒவ்வொரு வருடத்தின் வேளாண்மை வேலைகளில் கடைசியாக செய்ய வேண்டிய மீதி பொருட்களை தீயிட்டு எரிக்கும் வேலைகள் இன்று செய்யப்பட்டன .இது மார்கழி கடைசி தினம் அனுசரிக்க படுகிறது . தற்போதைய களங்களில் வீட்டில் உள்ள பழைய பொருட்டாக்களை மாற்றும் தினமாக கடைபிடிக்க படுகிறது .போகி பண்டிகை அன்று வீட்டு மாடங்களில் காப்பு கட்டும் வழக்கமும் தொடர்ந்து கடைபிடிக்க படுகிறது .

தை பொங்கல்

பொங்கல் பண்டிகையும் பிரதான தினம் இதுவாகும் .இது இரண்டாவது பொங்கல் தினம் ஆகும் .இது குறிப்பாக தை மாதத்தின் முதல் நாள் கொண்டாட படுகிறது .இந்திய மற்றும் அல்லாமல் உலகில் உள்ள அணைத்து தரப்பினராலும் பரவலாக கொன்றாடப்படுகிறது .வருடம் முழுவதும் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து இத்துணை நாள் உழவர் தமக்கு உதவிய பூமிக்கு சேர்த்து பொங்கல் வைக்கும் தினமாகும் .அறுவடை முடித்து அனைவரும் சந்தோசமாக இருக்கும் மாதம் தை என்பதால் ,தை முதல் தினம் இது கடைபிடிக்க படுகிறது .அனைவரும் புத்துடை அணிந்து அனைத்து நண்பர் மற்றும் உறவினருடன் இணைந்து கொண்டாடப்படும் விழா இதுவாகும்

மாட்டு பொங்கல்

வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழா இதுவாகும் .இது பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாள் விழாவாகும் .குறிப்பாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாட்டிற்கும் இல்லத்தை செழிப்புற செய்யும் பசு மாட்டிற்கும் இடும் பொங்கல் இதுவாகும் .இன்றைய தினம் மாடுகள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி ,உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து பொங்கல் வைக்க படுகிறது.

காணும் பொங்கல்

காணும்பொங்கல் என்பது உற்றார் உறவினர் பிரிந்து சென்ற நண்பர்களை மீண்டும் கண்டு உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகும். இது பொங்கல் பண்டிகையின் நான்காவது தின கொண்டாட்டமாகும். இதனை கன்னி பொங்கல் ,கணுப் பொங்கல் என்றும் அழைப்பர்.தற்போதைய காலகட்டங்களில் பட்டிமன்றம் சிறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வேலை நிமித்தம் தனிமையாகி போன உறவினர்களை இணக்கமுற செய்ய ஒரு வாய்ப்பளிக்கிறது.

பொங்கல் வாழ்த்துக்கள்

வாழ்த்து அட்டைகள் பரிமாறி கொள்ளும் பழக்கம் தொடர்ந்து செய்யப்படுகிறது . அச்சு பதிக்க பட்ட வாழ்த்து அட்டகளுக்கு பதிலாக தற்போது குறுந்செய்திகள் பரிமாறப்படுகிறது. நாகரிக வளர்ச்சியில் தொலைதொடர்பு வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் உருவானாலும் ,பொங்கல் பண்டிகையின் வாழ்த்து சொல்லும் சாராம்சம் மாறவில்லை.

பொங்கல் கோலங்கள்

வட இந்தியாவின் ரங்கோலி கோலம் போன்ற வற்றை மிஞ்சும் விதமாக எத்துணை விதமாக பொங்கல் கோலம் போடா இயலுமோ அத்துணை வழிகளிலும் தமிழ் பெண்கள் பொங்கல் கோலம் போடுகின்றனர்.நாகரிக வளர்ச்சியில் அடுத்த கலாச்சாரத்தின் தாக்கம் மற்ற கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும் ஆனால் பொங்கல் பண்டிகை மற்ற கலாச்சாரத்தை தம்முடன் இணைத்து கொண்டு மென்மேலும் சந்தோசத்தை நமக்கு கொடுக்கிறது .இதற்க்கு சான்றாகவே விதவிதமான கோலங்களை நமது தமிழ் பெண்கள் போடுவதை தமிழ் கலாச்சாரம் ஒருபோதும் தடுப்பதில்லை .

ஜல்லிக்கட்டு – ஏறுதழுவல்

ஒவ்வொரு கலாச்சாரத்தில் வீர விளையாட்டுக்கள் தொன்று தொட்டு கடைபிடிக்க படுகின்றன ,அதன்படி வீரம் மிகுந்த தமிழ் இளைஞர்களின் வீரத்தை பறைசாற்ற ஏறுதழுவுதல் நடத்த பட்டன.வீரம் மிக்க இளைஞர்கள் காளையை அடக்கும் இந்த விளயாட்டு உலகளவில் பிரசித்தி பெற்றதாகும் .ஒவ்வொரு வருடமும் இந்த விளையாட்டை காண வரும் உலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக இந்திய சுற்றுலா துறை தெரிவிக்கிறது . சில காரணங்களுக்கானக தடை பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழ் இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் நடத்த படுகிறது.பண்டைய விளையாட்டை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் அகிம்சை வழியில் போராடும் இந்திய பழக்கத்தை மென்மேலும் புதிய வழிகளை கடைபிடித்து உலகம் பூராவும் உள்ள போராட வேண்டிய நிலையில் உள்ளவர்க்கு எடுத்துக்காட்டாக இருந்தது ஜல்லிக்கட்டு போராட்டம் .

Exit mobile version