Site icon Tamil Solution

Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை

Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் கண்ணகி ,கோவலன் மற்றும் மாதவியின் வரலாறு சொல்லும் படைப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்தம் கலை இலக்கிய அறிவை ஆவணப்படுத்திய ஒரு மிகப்பெரிய இலக்கிய நூலாகும்.

திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட, உறை எழுதப்பட்ட இலக்கியம் இதுவாகும். ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் தமிழர்கள் காத்துவரும் இலக்கிய நூல்களில் ஒன்றாகும்,மேலை நாடுகள் போலெ ஒரு கதைவடிவின் அடுத்த படைப்பாக (sequel) மணிமேகலை என்ற காவிய நூல் தமிழில் அமைந்தது தமிழர்தம் கலை திறமைக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் சொல்லப்படுகிறது.

இளங்கோவடிகள் கோவலன் கதையை பாடல் வடிவில் இந்த இலக்கியத்தை எழுதினார். சிலப்பதிகாரத்தின் கதை வடிவமைப்பு ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பண்டையகால ஆவணமாக்கல் அடிப்படையில் பண்டைய கலைகள் ,பண்டைய நாகரிகம் ,பண்டைய வாழ்வியல் நெறிமுறைகள் என அடுத்த தலைமுறைக்கு கடத்துதல் அடிப்படியில் அமைந்தது.

கோவலன் மற்றும் கண்ணகி இளமைக்காலங்கள் முதல் திருமண நிகழ்வுவரை பண்டைய தமிழர் திருமண முறைகள் வாழ்வியல் முறைகளை பற்றிய பாடல்களையும். கண்ணகியை விட்டு பிறந்த கோவலன் மாதவியை அடையும்போது மாதவியின் கலைத்திறமையை பற்றிய பாடல்களில் அந்தக்கால நடன நாட்டிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.கோவலன் திரும்பி கண்ணகி அடைக்கலம் பேணும் போது குடும்ப உறவுகளை பற்றிய பாடல்களையும். மதுரை மாநகரை அடையும் தம்பதிகளின் பயண கதை பாடல்கள் மூலம் அண்டை நாட்டு வியாபார ,சுங்க விதி போன்ற ஆட்சி முறைகளை பற்றியும்.மதுரை சங்கத்தமிழ் பாடல்கள் இறுதி இலக்கியத்தில் நிறய அமைந்துள்ளது. இளங்கோவடிகள் நீண்ட பாடல்கள் மூலம் தமிழர்தம் கலாச்சாரத்தின் உச்சத்தை பதிவு செய்துள்ளார்.

Exit mobile version