Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Tn 6th Social Science Tamil Medium Assignment Answers

Tn 6th Social Science Tamil Medium Assignment Answers :- This is for tamil medium 6th standard students, for english medium students please click here

Download fist assignment questions – Click here

For all subject answers please visit this page

6th Social Science TNSCERT Assignment (With Answers) PDF Download

ஒப்படைப்பு

வகுப்பு: 6

பாடம்: சமூக அறிவியல்

அலகு

பகுதி -அ

I) ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1) பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாட செல்லும்போது பயன்படுத்திய விலங்கு……

Answer:- நாய்

2) இஸ்டோரியா என்ற சொல்…… மொழி.

Answer:- கிரேக்கம்

3) பழங்கால மனிதர்கள் எப்படி வேட்டையாடினார்கள் என்பதை……….மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Answer:- பாறை ஓவியங்கள்

4) வரலாற்றுக்கும், வரலாற்றுக்கும் முந்தைய காலத்திற்கும் இடைப்பட்ட காலம்……….

Answer:- வரலாற்று தொடக்க காலம்

5) அசோக சக்கரத்தில்……..ஆரங்கள் உள்ளன.

Answer:- 24

பொருத்துக

6) பாறை ஓவியங்கள்-செப்பேடுகள்

7) எழுதப்பட்ட பதிவுகள்-மிகவும் புகழ்பெற்ற அரசர்

8) அசோகர்-மத்தியபிரதேசம்

9) சாஞ்சி ஸ்துபி-ஆங்கில எழுத்தாளர்

10) சார்லஸ் ஆலன்-வாழ்க்கை முறையை புரிந்து கொள்வதற்கு உதவுதல்

6) பாறை ஓவியங்கள் -வாழ்க்கை முறையை புரிந்து கொள்வதற்கு உதவுதல்

7) எழுதப்பட்ட பதிவுகள் -செப்பேடுகள்

8) அசோகர்-மிகவும் புகழ்பெற்ற அரசர்

9) சாஞ்சி ஸ்துபி-மத்தியபிரதேசம்

10) சார்லஸ் ஆலன்-ஆங்கில எழுத்தாளர்


பகுதி-ஆ

II) குறுவினா

1.வரலாறு என்றால் என்ன?

கடந்த கால நிகழ்வுகளின் கால வரிசைப் பதிவு வரலாறு ஆகும்


2.வரலாற்று முந்தைய கால மக்களின் வாழ்க்கை பற்றி அறிய உதவும் சான்றுகள்யாவை?

  1. கற்கருவிகள்
  2. பாறை ஓவியங்கள்
  3. புதை படிமங்கள்
  4. அகழாய்வு பொருட்கள்

3.வரலாற்று முந்தைய காலம் என்றால் என்ன?

கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் , எழுதும் முறைகளைக் கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம் ஆகும்


4.அருங்காட்சியகம் பயன்கள் யாவை?

பழங்கால பொருட்கள் ,கருவிகள் ,எழுதுபொருட்கள் ,ஓவியங்கள் ,ஓலைசுவடிகள் ஆகியவை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படுகின்றன


5.பாறைகளில் ஏன் ஓவியம் வரையப்பட்டன.

அக்கால மக்கள் குகைகளில் வாழ்ந்தனர் ,ஓய்வு நேரத்தில் தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளில் ஓவியம் வரைந்தனர்


பகுதி – இ

III) பெருவினா:

1.பேராசர் அசோகர் பற்றி விவரிக்க

பண்டைய இந்திய அரசர்களில் பேரும் புகழும் பெற்ற அரசர் அசோகராவார் .கலிங்கப் பொறுக்குப் பிறகு போர் தொடுப்பதைக் கைவிட்டார் .பின்னர் ,புத்த சமயத்தைத் தழுவி அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காக தன் வாழ்க்கயை அர்ப்பணித்தார்

அசோகரது ஆட்சியில்தான் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது .வெற்றிக்குப் பின் போரை துறந்த முதல் அரசர் அசோகராவார் .உலகிலேயே வில்லன்களுக்கு முதன் முதலாக தனி மருத்துவமனை அமைத்தவரும் இவர்தான் .இன்றும் அவர் உருவாக்கிய சாலைகளை நாம் பயன்படுத்தி வருகின்றோம் ,நமது தேசிய கோடியில் உள்ள 24 ஆரங்கள் சக்கரம் அசோகர் நிறுவிய சாரநாத் கற்றூ னில் காணப்படுகிறது

பகுதி – ஈ

IV.செயல்பாடு

1.கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி :

பண்டைய காலத்தில், மக்கள் பாறைகளில் ஓவியங்களை வரைந்தனர்.வேட்டைக்குச் செல்ல இயலாதவர்கள் குகைகளிலேயே தங்கினர். வேட்டைக்கு சென்றவர்கள் அங்கு நடந்தது என்ன என்பதைக் காட்டுவதற்காக ஓவியங்களைத் தீட்டினார் கற்க ருவிகள், புதை படிமங்கள் மற்றும் பாறை ஓவியங்கள் போன்றவை கடந்த கால வரலாற்றுத் தகவல்களை அறிய உதவும் சான்றுகளாகும்.

அ. எங்கே அவர்கள் ஓவியங்களை வரைந்தனர்?

பாறைகளில் ஓவியங்கள் வரைந்தனர்

ஆ. யார் ஓவியங்களை வரைந்தனர்?

வேட்டைக்குச் சென்றவர்கள் ஓவியங்களை வரைந்தனர்

இ. கடந்த கால வரலாற்றுத் தகவல்களை அரிய உதவும் சான்றுகள் யாவை?

கற்கருவிகள்பாறை ஓவியங்கள்புதை படிமங்கள்அகழாய்வு பொருட்கள்