Site icon Tamil Solution

TNTET 2022 April 26 Last Date : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 13அன்று முடிவடைந்த ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்ப கடைசி தேதி ,பலதரப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க ஏப்ரல் 26 வரை நீட்டிக்க பட்டுள்ளது

இந்த வருடத்துக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRP ) நடத்துகிறது ,இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு மார்ச் 14முதல் ஏப்ரல் 13 வரை கால அவகாசம் வரையறுக்க பட்டது ,இந்த நிலையில் கடைசி தேதிக்கு ஐந்து தினங்களுக்கு முன்பிருந்தே விண்ணப்ப வலைத்தளத்தில் கோளாறு ஏற்பட்டது ,OTP சரியாக சென்றடையமை ,சான்றிதழ் பதிவேற்றதின் போது பிரச்னை என பல விதமான தடங்கல் ஏற்பட்டது

இதனை தொடர்ந்து ஏப்ரல் 13இல் எந்தவித நீடிப்பும் இன்றி கடைசி தேதி நிறைவடைந்தது இதனால் நிறைய ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பத்தை தொடங்காமலும் ,பாதியில் விண்ணப்பம் முழுமை பெறாமலும் ,விண்ணப்ப கட்டணம் செலுத்தாமலும் இதுந்தனர் ,இதனால் அதிக ஆர்வலர்கள் இந்த பிரச்னை குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பினர்,அதற்க்கு அவர் தொடர்ந்து ஏற்பட்ட கோளாறை சரிசெய்த பின்பு ,முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் மீண்டும் வாய்ப்பளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று நேற்று கூறியிருந்தார்.

அந்த வகையில் இன்று காலை புதிய கடைசி தேதியாக ஏப்ரல் 26 நிர்ணயிக்க பட்டுள்ளது,கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அணைத்து ஆசிரியர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

Exit mobile version