Site icon Tamil Solution

Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள்

Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் நிறைய செல்வந்தர்கள் உள்ளனர் ,இவர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகளவில் தங்களது வியாபாரத்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை தரும் அவர்களது வாழ்க்கை வரலாறு நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது , அவர்களில் முதல் பத்து நபர்களின் பெயர் மற்றும் குறுந்தகவல்கள் இந்த வலைத்தளத்தில் உள்ளது .

மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த பக்கம் வடிவமைக்க பட்டுள்ளது இந்த தகவல்கள் PDF வடிவிலும் கொடுக்க பட்டுள்ளது இதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொண்டு பயன்படுத்தலாம்


தமிழகத்தின் 10 செல்வந்தர்கள் பட்டியல் 2021

1.சிவ் நாடார்

வெளிநாட்டு எலக்ட்ரானிக் பொருட்களின் மீது இருந்த மோகத்தை கட்டுக்குள் கொண்டுவந்து இந்தியாவின் தனிப்பெரும் பிராண்ட்டாக HCL நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர் . கணினி சம்பந்தமான பொருட்களை தயாரிக்க தொடங்கிய இவரது நிறுவனம் தற்சமயம் குறைந்த விலையில் தொலைக்காட்சி சாதனங்கள் ,ஒளி ஒலி சாதனங்கள் என்று தங்களது தயாரிப்புகளை மேம்படுத்தி வெளியிடுகிறது .இந்த இருவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்க மாகாணத்தில் இருந்து இயங்கினாலும் ,இந்த தொழிற்சாலைகளின் தலைவர்க ஒரு தமிழர் இருப்பதும் அவரது பொருட்களை தமிழர்கள் விரும்பி பயன்படுத்துவதும் வரும் தலைமுறையினருக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது


2.ஆனந்த கிருஷ்ணன்

அடுத்த படியாக உஷாகா நிறுவனத்தின் முதலாளியான அனந்த கிருஷ்ணன் இந்த பட்டியலில் இடம்பெறுகிறார்.ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இவர் என்பது வயதை தாண்டியவர் ஆவார் .உலகளவில் வயது சாதிப்பதற்கு தடை அல்ல என்றொரு பட்டியல் தயாரிக்க படும்போது அதில இவரது பெயர் இடம்பெறுகிறது .Yu Cai Foundation என்ற நிறுவனத்தின் மூலமாக இவர் செல்வந்தர் பட்டியலில் இடம் பெறுகிறார் .


3.சேனாபதி க்ரிஷ் கோபாலக்ரிஷ்ணன்

உலகளவில் புகழ்பெற்ற மென்பொருள் உற்பத்தி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் இவராவார், கிட்ட தட்ட மூன்று பில்லியன் சொத்து மதிப்புடையவர் இவராவார். அறுபது வயதிற்கும் அதிகமான இவர் இந்திய அரசின் பத்ம பூசன் விருதை பெற்றுள்ளார்.இந்திய மென்பொருள் சந்தையில் முன்னோடியான நிறுவனத்தி நடத்தும் இவரது வாழ்க்கை இந்திய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது


4.கலாநிதி மாறன்

சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் தனது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக இந்த உயரத்தை அடைந்தார்.தமிழ் நாடு மட்டுமல்லாது இந்திய மொழிகள் அனைத்திலும் இவர் தொலைக்காட்சி சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது . 2.3 பில்லியன் சொத்து மதிப்புடையவர் இவராவார் .இந்திய அளவில் தொலைத்தொடர்பு தாக்கத்தை ஏற்படுத்தும் இவரது நிறுவனங்கள் தற்சமயம் ரேடியோ ,சினிமா தயாரிப்பு என்று தனது சேவையை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது .தற்சமயம் இவரது சன் குழுமம் OTT எனப்படும் நேரடி சினிமா தளங்களில் தனது முத்திரையை சன் நெஸ்ட் செயலி மூலமாக வழங்கி வருகிறார்


5. A .வெள்ளையன்

முருகப்பா குழுமத்தின் தலைவரான இவரது மதிப்பு கிட்ட தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் .இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மற்றும் எக்ஸிம் பேங்க் போன்றவற்றிலும் இவரது செயல்பாடுகள் உள்ளது .தற்சமயம் 67 வயதை தாண்டிய இவரது செய்யப்பாடுகள் தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் படியாக உள்ளது.இந்திய பொருளாதாரத்தில் அதிகம் பங்கு வகிக்கும் நிறுவனமாக இவரது நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது


6. வேணு ஸ்ரீனிவாசன்

தமிழகத்தின் வாகன தயாரிப்பு நிறுவனமாட டிவிஎஸ் குழுமத்தின் தலைவரான இவர் இந்திய அளவில் சிறந்த தொழிற் தலைவருக்கான CEO விருதை பெற்றிருக்கிறார் . இருசக்கர வாகன உற்பத்தி மட்டுமல்லாது உலகில் உள்ள அணைத்து தொழிற்சாலைகளுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனனம் , பங்கு நிறுவனம் , சுயதொழில் செய்வோருக்கான கடன் வழங்கும் நிறுவனம் என பல வகையான தொழிற்கூடங்களிழும் இவரகளது பங்கு உள்ளது


7.பார்கவ் ஸ்ரீ பிரகாஷ்

உலகளவில் கணினி மென்பொருள் வியாபாரத்தில் உச்சகட்ட இடமான சிலிக்கான் வெளியில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டவர் இவராவார் .இளமை காலங்களில் புகழ் பெற்ற டென்னிஸ் வீரராக திகழ்ந்த இவர் தற்சமயம் தொழிலதிபராக வளம் வருகிறார்.FriendsLearn குழுமத்தின் தலைவராக இருக்கும் இவரது வளர்ச்சி தமிழகத்தில் உள்ள கணினி பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது


8.ராம் ஸ்ரீராம்

தொடக்க கலகட்டத்திலேயே கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமையை பெறுகிறார் .இந்திய அமெரிக்க குடியுரிமையுடன் இருக்கும் இவரது சொத்து மதிப்பு பில்லியனில் கணக்கிடப்படுகிறது .தொடக்க காலங்களில் சாதாரண அமேசான் நிறுவனத்தில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கி தற்சமயம் மிக பெரிய வளர்ச்சியை கொண்டுள்ள இவரது வாழ்க்கை தன்னம்பிக்கை பாடங்கள் எடுப்பவராது பட்டியலில் இடம்பெறுகிறது


9.அருண் புதூர்

Celframe Corporation நிறுவனத்தின் தலைவரான இவர் தனது முதல் மில்லியன் டாலர் பணத்தை தனது 21 வயதிலேயே சம்பாதித்து விட்டார். கிட்ட தட்ட ஏழு பில்லியன் அமெரிக்க டாலர் வளர்ச்சியை கொண்டுள்ளவர் இவர் .இந்திய அளவில்லாமல் ஆசியா அளவில் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார் இவர்


10. மல்லிகா ஸ்ரீனிவாசன்

Tractors and Farm Equipment Limited TAFE நிறுவனத்தின் தலைவராவார்,இந்திய அளவில் பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் தகுதியுடையவர்.தனது நிறுவனத்தின் மூலம் உள்நாட்டு விவசாய கருவிகள் தயாரிப்பில் முன்னோடியாக திகழ்கிறார் .தமிழகத்தை சேர்ந்த பெண் முதலீட்டாளராகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் இவரது வாழ்கை தமிழக பெண்களிடையே மிகுந்த ஊக்குவிப்பை ஏற்படுத்துகிறது


Download This List in Print


Exit mobile version