தமிழக பள்ளிகளில் பயிலும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயமாக நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
இந்த ஆண்டு பொது தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ,அவர்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் மூலமாக இந்த செய்தியை உத்தரவாக பிறப்பித்துள்ளது .இந்த உத்தரவில் கட்டாயம் 10,11,12 மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட பட்டுள்ளது
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் ,அமைதியாக படிப்பில் கவனம் செலுத்த சூழலை ஏற்படுத்தவும் ஆவண செய்ய பரிந்துரைக்க பட்டுள்ளனர்