Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

12th Tamil Guide Chapter 6.3 சிலப்பதிகாரம்

12th Tamil Guide Chapter 6.3 Silappathigaram

ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் ………….. தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.

  1. மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
  2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.

அ) 1-சரி, 2-தவறு
ஆ) 1-தவறு, 2-சரி
இ) 1-தவறு, 2-தவறு
ஈ) 1-சரி, 2-சரி
Answer:
ஈ) 1-சரி, 2-சரி

பொருத்துக.
அ) ஆமந்திரிகை – 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா – 2. மூங்கில்
இ) கழஞ்சு – 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை – 4. எடை அளவு

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 2, 1, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3, 1, 4, 2

சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம்
அ) புகார்
ஆ) வஞ்சி
இ) மதுரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புகார்

இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை
அ) நீலகேசி, குண்டலகேசி
ஆ) உதயணகுமாரகாவியம், நாககுமார காவியம்
இ) சிந்தாமணி, சூளாமணி
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை
Answer:
ஈ) சிலப்பதிகாரம், மணிமேகலை

சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கத்தேவர்
ஈ) நக்கீரர்
Answer:
அ) இளங்கோவடிகள்

‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று குறிப்பிடுபவர்
அ) திரு.வி.க.
ஆ) பாரதி
இ) பாரதிதாசன்
ஈ) ம.பொ.சி.
Answer:
ஆ) பாரதி

இளங்கோவடிகள் தன்னைப் பற்றிய குறிப்பைத் தருகையில் தான் செங்குட்டுவன் தம்பி என்பதைக் குறிப்பிட்டிருக்கும் காதை
அ) மங்கலவாழ்த்து
ஆ) அரங்கேற்றுகாதை
இ) வரந்தருகாதை
ஈ) ஊர்சூழ்வரி
Answer:
இ) வரந்தருகாதை

பொருத்திக் காட்டுக.
அ) கழை – 1. பந்தல்
ஆ) விதானம் – 2. புதுமை
இ) நித்திலம் – 3. மூங்கில்
ஈ) விருந்து – 4. முத்து

அ) 3, 1, 4, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 3, 1, 4, 2

பொருத்திக் காட்டுக.
அ) நாவலம்பொலம் – 1. இசைக்கருவிகள் வாசிப்போர்
ஆ) அரசு உவா – 2. நாடகக் கணிகையர் பெறும்பட்டம்
இ) குயிலுவமாக்கள் – 3. பட்டத்து யானை
ஈ) தலைக்கோல் – 4. சாம்பூந்தம் என்னும் உயர்ந்த வகைப் பொன்

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

பொருத்திக் காட்டுக.
அ) புரிகுழல் – 1. ஒரு வகை எடை அளவு
ஆ) பல்இயம் – 2. இடக்கை வாத்தியம்
இ) வாரம் – 3. தெய்வப்பாடல்
ஈ) ஆமந்திரிகை – 4. இன்னிசைக்கருவி
உ) கழஞ்சு – 5. சுருண்ட கூந்தல்

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 5, 4, 3, 1, 2
இ) 3, 1, 2, 4, 5
ஈ) 5, 4, 2, 3, 1
Answer:
அ) 5, 4, 3, 2, 1

மாதவி ஆடற்கலையைப் பயின்ற ஆண்டுகள்
அ) 5
ஆ) 7
இ) 12
ஈ) 15
Answer:
ஆ) 7

ஆடல் கற்பதற்கான சடங்குகளை மாதவி செய்தபோது வயது
அ) 5
ஆ) 7
இ) 9
ஈ) 12
Answer:
அ) 5

மாதவி தனது ஆடலை அரங்கேற்ற விரும்பிய வயது
அ) 7
ஆ) 9
இ) 12
ஈ) 15
Answer:
இ) 12

மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் நிரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) ஒரு முகத்திரை

மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பொருமுகத்திரை

மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படுவது
அ) ஒரு முகத்திரை
ஆ) பொருமுகத்திரை
இ) கரந்துவரல் திரை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) கரந்துவரல் திரை

அரங்கேற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆடல்மகளுக்கு அளிக்கப்படுவது
அ) தலைக்கோல்
ஆ) செங்கோல்
இ) வைரமணி
ஈ) அரசாட்சி
Answer:
அ) தலைக்கோல்

இந்திரனின் மகன்
அ) சனகன்
ஆ) சயந்தன்
இ) அபினந்தன்
ஈ) மாயன்
Answer:
ஆ) சயந்தன்

மன்னனிடமிருந்து மாதவி பெற்ற பரிசு
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
ஆ) நூற்றெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை
இ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சு வைரமாலை
ஈ) நூற்றெட்டுக் கழஞ்சு வைரமாலை
Answer:
அ) ஆயிரத்தெட்டுக் கழஞ்சுப் பொன்மாலை

பொருத்திக் காட்டுக.
அ) பேரியாழ் – 1) 7 நரம்புகளைக் கொண்டது
ஆ) மகரயாழ் – 2) 16 நரம்புகளைக் கொண்டது
இ) சகோடயாழ் – 3) 17 நரம்புகளைக் கொண்டது
ஈ) செங்கோட்டியாழ் – 4) 21 நரம்புகளைக் கொண்டது.

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

தொல்நெறி, ஆடலும் பாடலும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்பைக் கண்டறிக.
அ) வினைத்தொகை, எண்ணும்மை
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை
இ) பெயரெச்சம், முற்றும்மை
ஈ) உவமைத்தொகை, உம்மைத்தொகை
Answer:
ஆ) பண்புத்தொகை, எண்ணும்மை

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்னும் விதிக்குரிய சொல்
அ) பொற்குடம்
ஆ) தலைக்கோல்
இ) பேரியாழ்
ஈ) பூங்கோதை
Answer:
ஆ) தலைக்கோல்