Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

kodikatha kumaran
Tamil Essays

Kodikatha Kumaran Essay In Tamil

கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து இந்திய சுதந்திர போராட்டத்தை மேலும் ஒரு படி நகர்த்தினார் . சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு என ஒரு கட்டுரை எழுதினால் அதில் முதல் நபராக  தனது 28 வயதில் தனது தேசத்திற்க்காக உயிர் நீத்த திருப்பூர் குமரன் பெயரையே முதலாவதாக எழுதப்படுகிறது

பிறப்பு: 4 அக்டோபர் 1904

மறைவு 11 ஜனவரி 1932

இடம் திருப்பூர்

சாதனை : அரசு நினைவுகள் அமைத்துள்ளது

 

பிறப்பு

 ஈரோடு மாவட்டம், சென்னிமலையின், செ.மேலப் பாளையம் எனும் சிற்றூரில் நெசவாளரான நாச்சிமுத்து- கருப்பாயி தம்பதியரின் மகனாக (குமாரசாமி  இயற்பெயர்) குமரன் பிறந்தார். நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், அங்கிருந்து திருப்பூருக்கு இடம் மாறியது குமரன் குடும்பம்.

இளமை காலம்

குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923-ல் தனது 19-வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார்

காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார்.

சுதந்திர போராட்டம்

1932-ம் ஆண்டு தேசமெங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டுக் கொண்டிருந்த பொழுது, மகாத்மா காந்தியடிகளின் ‘ஒத்துழையாமை’ இயக்கம் என்கிற ஆலமரத்தின் வேர்களைத் தேடிப் பிடித்து வெட்ட பிரிட்டிஷ் போலீஸ் தீவிரம் காட்டிய உச்சகட்ட தருணம்.தேச பக்திப் பாடல்களை பாடியபடி, அது தொடர்பான ஓரங்க நாடகங்களை நடத்தியபடி, திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தபடி இருந்ததால், பிரிட்டிஷ் அரசாங்க போலீசாரால் கண்கணிப்பட்டு வந்தார்  குமரன்.

கொடி காத்த குமரன்

ஜனவரி 10, 1932- அன்று மாபெரும் அறப் போராட்டத்துக்கு அழைப்பை விடுத்திருந்தனர் தேச விடுதலைப் போராளிகள் , போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்ல திருப்பூரில்  பி.டி.ஆஷர், அவர் மனைவி பத்மாவதி ஆஷர்  முன்வருவர் என தெரிந்து அவர்களை கைது செய்தது போலீஸ்.பின்  பி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்க,   ராமன் நாயர், நாச்சிமுத்து கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்து செட்டியார், சுப்புராயன்,  இன்டர் மீடியட் மாணவர்கள் அப்புக்குட்டி, நாராயணன் ஆகியோர்உடன் இனைந்து திருப்பூர் குமரன் ஊர்வலம் நடத்தி சென்றார்

போலீசாரின் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அனைவரும் மயங்கி சரிந்தனர்,ஆனால் ஒருவர் கையில் இருக்கும் கோடி மட்டும் வானை நோக்கி பட்டொளி வீசி பறந்தது .அதை தாங்கி  பிடித்தபடி வந்தேமாதரம் என தொடர்ந்து முழங்கினார் குமரன் ,இதை காண்க போலீசார் மீண்டும் மீண்டும் குமாரனை தாக்கினார் .இருந்தும் குமரனின் விரல்களை தேசிய கொடியை விட்டு பிரிக்க முடியவில்ல

மறைவு

ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.

 

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .

நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தபால் தலை

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.