Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்

பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்
ஆ) ஆராய்ச்சிப் பேரறிஞர் – 2. மயிலை. சீனி. வேங்கடசாமி
இ) தமிழ் தென்றல் – 3. திரு.வி.க.
ஈ) மொழி ஞாயிறு – 4. தேவநேயப்பாவாணர்
Answer:
அ) தனித்தமிழ்த் தந்தை – 1. மு.வரதராசனார்

ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்.
அ) பௌத்தமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) கிறுத்தவமும் தமிழும்
Answer:
ஈ) கிறுத்தவமும் தமிழும்

மயிலை சீனி. வேங்கடசாமி பிறந்த நாள் ………….. பிறப்பிடம்
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்
ஆ) 14.12.1905, சென்னை வடபழனி
இ) 13.10.1902, மதுரை மாட்டுத்தாவனி
ஈ) 10.12.1901
Answer:
அ) 16.12.1900, சென்னை மயிலாப்பூர்

மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தை ……………… ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) வெங்கடசுப்பு
Answer:
அ) சீனிவாசன்

மயிலை சீனி. வேங்கடசாமியின் தமையனார் ………….. ஆவார்.
அ) சீனிவாசன்
ஆ) கோவிந்தராசன்
இ) கிருஷ்ணமூர்த்தி
ஈ) ராசராசன்
Answer:
ஆ) கோவிந்தராசன்

மயிலை சீனி. வேங்கடசாமியின் தந்தையார் பணி ……………. தமையனார் பணி ……………
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்
ஆ) தமிழாசிரியர், சித்த மருத்துவர்
இ) வழக்கறிஞர், கட்டிட வரைவாளர்
ஈ) கட்டிட வரைவாளர், வழக்கறிஞர்
Answer:
அ) சித்த மருத்துவர், தமிழாசிரியர்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆசிரியப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள்
அ) 20
ஆ) 25
இ) 28
ஈ) 30
Answer:
ஆ) 25

1934இல் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் சிந்தாதிரிபேட்டை உயர்நிலைப் பள்ளியில் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற பொருள் குறித்து உரையாற்றியவர்
அ) கா. சுப்பிரமணியர்
ஆ) விபுலானந்த அடிகள்
இ) ச.த. சற்குணர்
ஈ) திரு.வி.க
Answer:
இ) ச.த. சற்குணர்

மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் நூல்
அ) கிறித்துவமும் தமிழும்
ஆ) பௌத்தமும் தமிழும்
இ) சமணமும் தமிழும்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கிறித்துவமும் தமிழும்

மயிலை சீனி. வேங்கடசாமி புலமை பெற்றிருந்த எழுத்துகள்
i) வட்டெழுத்து
ii) கோலெழுத்து
iii) தமிழ் பிராம்மி

அ) i, ii – சரி
ஆ) ii, iil – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

மயிலை சீனி. வேங்கடசாமி எந்தெந்த பல்லவ மன்னர்களைப் பற்றி நூல்களை எழுதினார்?
i) மகேந்திரவர்மன்
ii) நரசிம்மவர்மன்
iii) மூன்றாம் நந்திவர்மன்

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் தவறு
Answer:
இ) மூன்றும் சரி

1905களில், ……………… நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் ஆட்சிபுரிந்த மன்னர்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டவர் மயிலை சீனி. வேங்கடசாமி.
அ) கி.பி.3 – கி.பி.9
ஆ) கி.பி.6 – கி.பி.12
இ) கி.பி.7 – கி.பி.12
ஈ) கி.பி.8 – கி.பி.13
Answer:
அ) கி.பி.3 – கி.பி.9

கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளி வந்த முழுமையான முதல் நூல் …………….. ஆசிரியர் ………………..
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நுண்கலைகள், கா. சுப்பிரமணியர்
இ) இசைவாணர் கதைகள், விபுலானந்த அடிகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள், மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்
அ) நுண்கலைகள்
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
இ) இசைவாணர் கதைகள்
ஈ) பௌத்தமும் தமிழும்
Answer:
ஆ) தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

மயிலை சீனி. வேங்கடசாமி நூல்களின் படங்களை வரைந்து வெளியிட்டவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) திரு.வி.க
ஈ) ச.த.சற்குணர்
Answer:
அ) மயிலை சீனி. வேங்கடசாமி

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்றினை வேங்கடசாமி நிகழ்த்திய ஆண்டு
அ) 1960
ஆ) 1962
இ) 1956
ஈ) 1954
Answer:
ஆ) 1962

தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்சான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்
அ) பழங்காலத் தமிழர் வணிகம்
ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) கொங்கு நாட்டு வரலாறு
ஈ) களப்பிரர் ஆட்சியில் தமிழாம்
Answer:
ஆ) தமிழ்நாட்டு வரலாறு

தமிழ்நாட்டு வரலாறு என்னும் நூலின் சிறப்பு
i) சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதலிய இலக்கியத் தரவுகளைக் கொண்டு இந்நூல் : எழுதப்பட்டுள்ளது.
ii) அத்துடன் துளுமொழியையும் தமிழ்மொழியையும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ளது.
iii) குறைந்த ஆதாரங்களைக் கொண்டு ஒரு பெரிய வரலாற்றையே உருவாக்கிய பெருமை மயிலை சீனி.வேங்கடசாமியையே சாரும்.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) iii மட்டும் சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

ஒவ்வொரு நூற்றாண்டையும் எவ்வகையில் ஆவணப்படுத்துவது என்பதற்கான முன்னோடியாக விளங்கும் மயிலை சீனி.வேங்கடசாமியின் நூல்
அ) தமிழ்நாட்டு வரலாறு
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்
இ) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஈ) பழங்காலத் தமிழர் வணிகம்
Answer:
ஆ) பத்தொன்பதாம் நூற்றாண்டுத்தமிழ்

‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் நூலில் வேங்கடசாமி மறைந்து போன …………….. நூல்கள் தொடர்பான குறிப்புகளைக் கூறியுள்ளவர்.
அ) 321
ஆ) 333
இ) 345
ஈ) 247
Answer:
ஆ) 333

தாங்கெட நேர்ந்த போதும்
தமிழ்கெட லாற்றா அண்ணல்
வேங்கடசாமி என்பேன் – என்று கூறியவர்

அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) திரு.வி.க.
ஈ) ம.பொ.சி.
Answer:
அ) பாரதிதாசன்

வேங்கடசாமி, ………… என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.
அ) குடியரசு
ஆ) ஊழியன்
இ) செந்தமிழ்ச்செல்வி
ஈ) ஆரம்பாசிரியன்
Answer:
இ) செந்தமிழ்ச்செல்வி

மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் ………………. அதனை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர்.
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) நரசிம்மவர்மன், தெ.பொ.மீ
இ) மூன்றாம் நந்திவர்மன், விபுவானந்த அடிகள்
ஈ) இராசராசசோழன், கவிமணி
Answer:
அ) மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி பெற்றுள்ள சிறப்புகளை பொருத்திக் காட்டுக.
i) தமிழ்ப் பேரவைச் செம்மல் – தமிழ் எழுத்தாளர் சங்கம்
ii) ஆராய்ச்சிப் பேரறிஞர் – சென்னை கோகலே மண்டபம்
iii) கேடயம் (1962) வழங்கல் – மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்

அ) 3, 2, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 2, 3, 1
Answer:
அ) 3, 2, 1

சங்கக்காலப் பசும்பூன் பாண்டியன் தன் கொடியில் ……………. சின்னத்தைக் கொண்டிருந்தான் என்ற செய்தி அகநானூற்றில் (162) இருப்பதை முதன் முதலில் அறிந்து வெளிப்படுத்தியவர் வேங்கடசாமி.
அ) புலி
ஆ) யானை
இ) கழுதை
ஈ) சேவல்
Answer:
ஆ) யானை