சிவகார்த்திகேயனுடன் நடிக்க போட்டி

Photo of author

By radangfx

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் அயலான் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ,அவருடன் அடுத்த படத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் மிக பெரிய போட்டி நிலவுகிறது ,

வருக ஜூலை 14இல் மாவீரன் திரையிடப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .இது சிவகார்த்திகேயன் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது

அடுத்த படியாக கமலகாசன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்

ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயனை நடிக்க கேட்டுக்கொண்ட செய்தி வெளிவந்த பிறகு இந்த போட்டி இன்னும் சூடு பிடித்துள்ளது ,குறிப்பாக சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர்,பூஜா ஹெக்டே நடிக்க அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்

சிவகார்த்திகேயன் 22 என பெயரிடப்பட்டு துரிதமாக பட வேலைகளை படக்குழு துவங்கியுள்ள நிலையில் யார் கதாநாயகியாக நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது