ஜெயம் ரவி லோகேஷ் கனகராஜ் சந்திப்பு புதிய திரைப்பட வேலைகள் தொடக்கம்

 விக்ரம் மாபெரும் வெற்றி திரைப்படத்தை தொடர்ந்து திரை உலகத்தினர் அதிகம் பின்பற்றுவது லோகேஷ் கனகராஜ் பற்றிய செய்திகளைத் தான். இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் 67வது திரைப்படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ஜெயம்ரவியை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளார்

 இந்த சந்திப்பின்போது லோகேஷ் கனகராஜ் ஜெயம் ரவியிடம் புதிய கதை விவாதத்தை நடத்தியதாக தெரிகிறது. தளபதியிடம் இணைந்து லோகேஷ் கனகராஜ் திரைப்பட தயாரிப்பில் இருக்கும்பொழுது இந்த புதிய செய்தி ரசிகர்களிடையே ஆவலை தூண்டியுள்ளது.

பலரது விருப்பமாக தளபதியுடன் இணைந்து ஜெயம்ரவி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது திரைப்படங்களில் நிறைய திரைப்படங்களை நடிக்க வைப்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கிய இருந்த விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருந்தார் மேலும் மாபெரும் வெற்றிப்படமான விக்ரம் திரைப்படத்தில் உச்ச நட்சத்திரமான கமல் இருக்கும் பொழுது விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலை நடிக்க வைத்திருந்தார்.

அது போன்றதொரு நிகழ்வு மீண்டும் நடைபெறும் இன்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது விஜய் ரசிகர் மட்டும் அல்லாது சாதாரண திரைப்பட ரசிகர்கள் வரை இந்த சந்திப்பு ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது.

 இது சாதாரண சந்திப்பு தானா அல்லது புதிய பட தயாரிப்பாளர் அல்லது விஜய் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறாராம் போன்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது