Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials Uncategorized

12th Tamil Guide Chapter 1.1 இளந்தமிழே

BOOK BACK QUESTION WITH ANSWERS

1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

அ) யாப்பருங்கலக்காரிகைஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்ஈ) நன்னூல்

விடை :

2.“மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

௨) பொதிகையில் தோன்றியது

௩) வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரிஆ) ௧, ௨ இரண்டும் சரி
இ) ௩ மட்டும் சரிஈ) ௧, ௩ இரண்டும் சரி

விடை : ஈ) ௧, ௩ இரண்டும் சரி

3.“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” – இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்

அ) அடிமோனை, அடிஎதுகைஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனைஈ) சீர்எதுகை, அடிமோனை

விடை :

கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) கருத்து 1 சரிஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் சரிஈ) கருத்து 1 சரி, 2 தவறு

விடை :

5.பொருத்துக.
அ) தமிழ் அழகியல் – 1) பரலி சு. நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ – 2) தி.சு. நடராசன்
இ) கிடை – 3) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி – 4) கி. ராஜநாராயணன்

அ) 4, 3, 2, 1ஆ) 1, 4, 2, 3
இ) 2, 4, 1, 3ஈ) 2, 3, 4, 1

விடை :

பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?

அ) குற்றால மலைஆ) விந்திய மலை
இ) இமய மலை ஈ) சாமிமலை

விடை : அ) குற்றால மலை

சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?

அ) அக்கினிஆ) ஒளிப்பறவை
இ) அக்கினிசாட்சிஈ) சூரியநிழல்

விடை :இ) அக்கினிசாட்சி

சாய்ப்பான்’ என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை

அ) சாய்ப்பு + ஆன்ஆ) சாய் + ப் + ஆன்
இ) சாய் + ப் + ப் + அன்ஈ) சாய் + ப் + ப் + ஆன்

விடை :ஈ) சாய் + ப் + ப் + ஆன்

கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?

அ) ஒரு கிராமத்தின் கதைஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்தின் நதிஈ) ஒரு புளியமரத்தின் கதை

விடை :இ) ஒரு கிராமத்தின் நதி

‘செந்தமிழ்’ – எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?

அ) ஈறுபோதல், இனமிகல்ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்ஈ) ஈறுபோதல்

விடை :ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்

‘வியர்வை வெள்ளம்’ – இலக்கணக் குறிப்புத் தருக.

அ) உவமையாகுபெயர்ஆ) கருவியாகு பெயர்
இ) உருவகம்ஈ) உவமைத்தொகை

விடை :இ) உருவகம்

இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?

அ) சூரிய காந்திஆ) சூரிய பார்வை
இ) ஒளிப்பூஈ) சூரிய நிழல்

விடை :ஈ) சூரிய நிழல்

கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.

அ) கருத்து 1 சரிஆ) கருத்து 2 சரி
இ) இரண்டும் கருத்தும் தவறுஈ) கருத்து 1 சரி, 2 தவறு

விடை :ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்

அ) சிற்பி பாலசுப்பிரமணியம்ஆ) பெருந்தேவனார்
இ) தமிழண்ண ல்ஈ) மு. வரதராசனார்

விடை :அ) சிற்பி பாலசுப்பிரமணியம்

பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்

அ) கோப்பெருந்தேவிஆ) வேண்மாள்
இ) தமிழன்னைஈ) ஒளவையார்

விடை :இ) தமிழன்னை

…………… முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை .

அ) சடையப்ப வள்ளல்ஆ) சீதக்காதி
இ) பாரிஈ) நெடுங்கிள்ளி

விடை :இ) பாரி

எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ – என்று பாடியவர்

அ) பாரதியார்ஆ) பாரதிதாசன்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம்ஈ) திரு.வி.க

விடை :இ) சிற்பி பாலசுப்பிரமணியம்

பொருத்திக் காட்டுக.
i) செம்பரிதி – உருவகம்
ii) முத்து முத்தாய் – வினையெச்சம்
iii) சிவந்து – அடுக்குத்தொடர்
iv) வியர்வைவெள்ளம் – பண்புத்தொகை

அ) 4321ஆ) 3412
இ) 2143ஈ) 3214

செம்பரிதி – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.

அ) ஈறுபோதல்ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்ஈ) முன்நின்ற மெய்திரிதல்

விடை :அ) 4321

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.

அ) உன்னையல்லால்ஆ) வானமெல்லாம்
இ) செந்தமிழேஈ) செம்பரிதி

விடை : ஆ) வானமெல்லாம்

‘இளந்தமிழே’ என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலின் இடம்பெற்றுள்ள பாவகை

அ) நேரிசை ஆசிரியப்பாஆ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) கலி விருத்தம்ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

விடை :ஈ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

‘இளந்தமிழே’ என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?

அ) சூரிய நிழல்ஆ) ஒரு கிராமத்து நதி
இ) ஒளிப்பறவைஈ) நிலவுப்பூ

விடை :ஈ) நிலவுப்பூ

சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.

அ) கவிஞர்ஆ) ஓவியர்
இ) பேராசிரியர்ஈ) மொழிபெயர்ப்பாளர்

விடை :ஈ) மொழிபெயர்ப்பாளர்

சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்

அ) பாரதியார்ஆ) பாரதிதாசன்
இ) தமிழ்ஈ) காமராசர்

விடை :அ) பாரதியார்

சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?

அ) மூன்றுஆ) இரு
இ) நான்குஈ) பல

விடை :ஆ) இரு

சிற்பி பாலசுப்பிரமணியன் சாகித்திய அகாதெமியின் …………….. இருக்கிறார்.

அ) தலைவராகஆ) செயலாளராக
இ) பொருளாளராகஈ) உறுப்பினராக

விடை :ஈ) உறுப்பினராக

தொழிலாளர்களின் கைகள் எதனைப் போலச் சிவந்துள்ளதாகக் கவிஞர் சிற்பி கூறுகிறார் ?

Answer:
மாலையில் மறையும் கதிரவனின் கதிரொளி போல தொழிலாளரின் கைகள் சிவந்துள்ளதாகக் கூறுகிறார்.

தமிழ்மொழியின் பழமைநலம் எவை?


Answer:

  1. தமிழ்மொழி பாண்டியர்களின் அவையிலே தன்னிகரற்ற செம்மொழியாய் ஆட்சி செய்தது.
  2. பாரி போன்ற வள்ளல்கள் பலரை தமிழ் மண்ணிற்குத் தந்த பழமை நலம் கொண்ட மொழி.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை என்ன ?



‘தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்’, என்பதே கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆசை ஆகும்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூற்களில் சிலவற்றை எழுதுக.


Answer:
ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி

சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகங்களைக் குறிப்பிடுக.


கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்.

சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?


இலக்கியச் சிந்தனைகள், மலையாளக்கவிதை, அலையும் சுவரும்

சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் எம்மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன?


ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி.

சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார்?

  1. சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியன் இரு முறை பெற்றுள்ளார் .
  2. மொழிபெயர்ப்புக்காகவும், ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலிற்காகவும் சாகித்திய அகாதெமி விருதைப் சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ளார்.

குளிர் பொதிகைத் தென்தமிழ் ஏன் சீறி வர வேண்டும் எனச் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்?

  • உள்ளத்தில் பொங்கிவரும் உணர்வுகளை உணர்ச்சி மிகு கவிதையாக எழுத முத்தமிழே உதவி செய்கின்றது.
  • பாண்டியமன்னர்கள் அமைத்த சங்கத்திலே, தன்னிகரற்ற செம்மொழியாய் இருந்து ஆட்சிச் செய்தது.
  • பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்தது.
  • அன்றிருந்த தமிழர் நலமும் தமிழ்நாட்டுப் பொதுமை நலமும் மீண்டும் பிறப்பதற்கு நீ குயில் போலக் கூவி வர வேண்டும்.
  • இன்று தமிழர்களைச் சூழ்ந்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும் அகன்றிட அவர்கள் சிறைப்பட்டிருக்கும் கூட்டினை உடைத்திட நீயும் சிங்கம் போலச் சீறி புறப்பட்டு வர வேண்டும்.

கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றிக் குறிப்பு வரைக.

பெயர் : பாலசுப்பிரமணியம். சிறப்புப்
பெயர் : சிற்பி (எழுத்துகளைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்).
பெற்றோர் : சி. பொன்னுசாமி – கண்டியம்மாள்.
ஊர் : ஆத்துப்பொள்ளாச்சி, கோவை.
பணி : பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர் . சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினர்.
விருது : “ஒரு கிராமத்து நதி” எனும் கவிதை நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது.
படைப்புகள் : ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், பூஜ்யங்களின் சங்கிலி.

1 COMMENTS

Comments are closed.