Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை

Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால அறிவியல் உலகில் நம்மைச்சுற்றி இயந்திரங்கள் நிறைய பணிகளை நமக்காக செய்வதை நாம் கங்கூடாக பார்க்கிறோம்.இத்தகைய சுலப வாழ்க்கை முறைக்கு பல அறிவியல் கண்டுபிடுப்புகளை காரணமாகும். அறிவியல் வளர்ச்சி,அறிவியல் கோட்பாடுகள்,அறிவியல் சாதனைகள் போன்றவற்றை நாம் இந்த கட்டுரையில் காணலாம்

Ariviyal Katturai in Tamil

அறிவியல் வளர்ச்சியில் தற்போது பயண தூரங்கள் சுருங்கிவிட்டது, உலகமே தற்போது சிறு கிராமமாக பார்க்க படுகிறது. பல தேசங்களையும் கண்டங்களையும் சிலதினங்களுக்குள் நாம் சுற்றி வந்துவிடலாம்.எத்துணையா அதிவேக வாகனங்கள் தற்போது நமக்கு உதவுகின்றன. அறிவியல் வாகனங்களால் நமக்கு வேகமான வாகனங்களை கொடுத்தாலும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் முன்னேற்றங்களை குறைக்கவே விரும்புகிறது ,இதன்காரணமாகே எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் விதமான வாகனங்கள் இன்று அதிக பயன்பாட்டில் உள்ளன.

ஐம்பது வருடங்களுக்கு முன்னதாகவே நாம் நிலவை எட்டிவிட்டோம்,இன்றைய அறிவியல் செவ்வாய் கிரகத்தில் குடியேறும் முனைப்பில் உள்ளது.தொலைதூரத்தில் உள்ள விண்மீன் கூட்டங்களுக்கு பெயர்வைத்து முடித்துவிட்டோம்.எப்போதும் மனிதர்களை அச்சுறுத்தும் வின் கற்களை கண்டுபிடித்து அதன் பாதையை இம்மி பிசகாது வரையறுக்கும் தொழில் நுட்பம் நம்மிடம் உள்ளது.உலக விண்வெளி ஆய்வு போட்டியில் இந்தியா மிகைத்திறந்த போட்டியாளராகவே பார்க்க படுகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சந்திராயன் விண்கலம் பற்றிய வியத்தகு சாதனைகளை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

தொலைதொடர்பில் அதிவேக இணையம் இன்று எளிதாக சாமானியருக்கு கிடைக்கிறது. தொலைபேசியின் புதிய பரிணாமம் அதிவேக இனைய பயன்பாடு கொண்டு உலகை சுருக்கி உள்ளங்கையில் வைக்கிறது. ஒரு அதிவேக செல்லிடைபேசி முந்தையகால கணினியை விட நூறு மடங்கு சக்தி உடையதாக இருக்கிறது. அறிவியலின் உச்சமாக கருதப்படும் செயற்கை கோள்கள் தரும் துல்லிய தகவல்களை ஒரு செல்லிடைபேசி மூலமாக நாம் அறிய முடிகிறது.

மருத்துவ உலகில் மிகப்பெரிய சவால்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன , உதாரணமாக 2019ம் ஆண்டில் ஏற்பட்ட பெரும்தோற்று (கோரோனோ ), இதுபோன்ற சவால்களை சமாளிக்கும் திறன் அறிவியல் கொண்டுள்ளது.மிக அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி மிக விரைவில் கண்டுபிடிக்க பட்டுவிட்டது.இன்னும் சில காலங்களில் இந்த பெரும்தொட்ரை அடியோடு அழிக்கும் முயற்சியில் அறிவியல் அறிஞர்கள் நாள்தோறும் முயன்று வருகின்றனர். போலியோ,பெரியம்மை போன்ற கொடிய நோய்களை இல்லாமல் செய்துவிட்ட அறிவியல் இதுபோன்ற புதிய தொற்று நோய்களை களையும் வல்லமை கொண்டுள்ளது.

இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் செயற்கை உறுப்புகள் கூட தயாரிக்க படுகின்றனர். இன்றைய மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை செய்வதில் எத்தனையோ சாதனை படிகளை தாண்டிவிட்டனர். இதய நோய்க்கு வெளி நாட்டிற்ற்க்கு சென்று அறுவைசிகிச்சை செய்யும் காலம்போய் இந்தியாவிற்கு மருத்துவ காரணங்களுக்காக வரும் வெளிநாட்டினர் ஏராளம்.இந்திய மருத்துவத்தின் சிறப்பம்சமாக குறைந்த செலவில் அதிக தரமுடைய மருத்துவம் கருதப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய எப்போதும் முன்னணியில் உள்ள நாடுகளுடன் போட்டிபோடுகிறது.சர்வதேச தரமுடைய தானியங்கி இயந்திரங்கள் குறைந்த செலவில் இந்தியாவில் தயாரிக்க பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்திய அறிவியல் விஞானிகள் தற்காலங்களில் உலகளவில் புகழ் பெற்றவர்களாக இருக்கின்றனர்.பல உலக அறிவியல் கோட்பாடுகளை உலகிற்கு வழங்கியுள்ளனர்.