Kamarajar Essay (Katturai ) In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை

Kamarajar Essay in tamil | Kamarajar Powerpoint Presentation in another page please search for it

காமராஜர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்து  பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.

பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்
இளமை​

காமராஜர் ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய பயின்றார்

1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யா சாலையிலும் .

பின்னர் விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியிலும் பயின்றார் .

அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர்,

தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்

அரசியல்

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்க பட்டார்

தனது 16 வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரஸ் இல் தன்னை இணைத்து கொண்டார்

1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம்   நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.

‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’, ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார்.

மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.

1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்

தமிழக முதல்வராக

1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.
கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.
தன்னுடைய முதல் பணியாக  குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டுமூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.
kamarajar essay

கல்வி

17000த்திற்கும் மேற்பட்ட புதிய  பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தினார்.
இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறை

தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்
நெய்வேலி நிலக்கரித் திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
கல்பாக்கம் அணு மின்நிலையம்
ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை

கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்கு ஆலை
பாரத மிகு மின் நிறுவனம்
இரயில் பெட்டித் தொழிற்சாலை
நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன

நீர்பாசனம்

மேட்டூர் கால்வாய்த்திட்டம்
பவானி திட்டம்
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
மணிமுத்தாறு, அமராவதி, வைகை சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்

காங்கிரஸ் தலைவர்

kamarajar biography

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்

கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்
1963 அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்
1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.
1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்

இறப்பு

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.
அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.

kamarajar essay in tamil

Kamarajar Essay in Tamil

This is the full essay is the biography of veteran leader K.Kamarajar , this essay in Tamil language for powerpoint version of this essay is also available in our website

Kamarajar Essay in Tamil FAQ

Most frequent questions and answers about Kumaraswami Kamaraj
Kumaraswami Kamaraj
 
K. Kamaraj/Full name

K. Kamaraj‘s resignation as the Chief Minister in 1963, to concentrate on party affairs, along with persistent rumours of corruption had weakened the incumbent Congress Government. … It was the first time a party or pre-election alliance formed a non-Congress government with absolute majority.

Major irrigation schemes were planned in Kamaraj’s period. Dams and irrigation canals were built across higher Bhavani, Mani Muthar, Aarani, Vaigai, Amaravathi, Sathanur, Krishnagiri, Pullambadi, Parambikulam and Neyyaru among others.

The former chief minister and popular leader of the Indian National Congress, K. Kamaraj lost his seat in Virudunagar by 1285 votes to the student leader P. Seenivasan from the DMK. A few days before the electionKamaraj had an accident and could not campaign

Kamaraj died at his home, on Gandhi Jayanti day (2 October 1975), which also was the 12th anniversary of his resignation. He was aged 72 and died in his sleep.

13 dams
 
13 dams were completed when Kamarajar was CM of Tamilnadu between 1954 to 1963.

Kumaraswami Kamaraj (15 July 1903 – 2 October 1975), was the founder and the president of the Indian National Congress (Organisation), widely acknowledged as the “Kingmaker” in Indian politics during the 1960s. … He was awarded with India’s highest civilian honour, the Bharat Ratna, posthumously in 1976

Kamaraj strived to eradicate illiteracy by introducing free and compulsory education up to the eleventh standard. He introduced the Midday Meal Scheme to provide at least one meal per day to the lakhs of poor school children. Later it was expanded to four more schools.

Kingmaker. From Wikipedia, the free encyclopedia. A kingmaker is a person or group that has great influence on a royal or political succession, without themselves being a viable candidate.

2 October 1975

  1. Karma veerar
  2. King Maker
  3. Black gandhi
  4. Leader of poor
  5. Uneducated leader

A person who worked for the welfare of the people 

There is lot more about the un educated chief minister its a biography movie available in you tube

Leave a comment