Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Computer in Tamil Essay
Tamil Essays

Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை

Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு தினசரி நிகழ்வுகளும் நிகழ்த்த முடியாது. ஒவ்வொரு துறையிலும் கணினியின் தனது ஆதிக்கத்தை செலுத்தி பல நாட்கள் ஆகின்றன. கணினி பற்றிய முழுமையான கட்டுரையை இந்த பகுதியில் நாம் காணலாம்

Computer in Tamil Essay

கணினியின் தேவை தற்போதைய காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. அரசு அலுவலகம் தனியார் அலுவலகம் வங்கிகள் கல்லூரிகள் பள்ளிகள் என கணினி இல்லாத இடமே தற்போது இல்லை. மனித சமூகம் கணினியை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மனிதனுக்கு உதவும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பவியல், பொறியியல், மருத்துவம், ராணுவம், வானியல் ஆராய்ச்சி என அனைத்து இடங்களிலும் கணினி தனது சேவையை செய்கிறது.

 மனித சமூகம் தகவல்களை சேமிக்க தொடங்கிய நாள் முதலாக கணினியின் ஆதிக்கம் தொடங்கியது. சிறிய அளவில் தொடங்கிய கணினியின் வளர்ச்சி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்னதாக இருந்த கணினியை விட தற்போது ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த கணினி நமது கைகளில் தவழ்கிறது. 

வேளாண்மை துறையில் சென்ற ஆண்டின் வளர்ச்சி புதிய வேளாண் முயற்சிகள் போன்றவற்றை இணையத்தில் பகிரவும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட வேளாண் வளர்ச்சி மற்றும் தாக்கங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் கணினி பயன்படுத்தப்படுகிறது அரசு. தற்சமயம் கணினி வழியாக வேளாண் பாடங்களை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கற்பிக்கிறது. கணினியின் உதவி கொண்டு வேளாண்மை வளர்ச்சி என்பது தற்போது தேசத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.

மருத்துவத்துறையில் கணினியின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து கொண்டே உள்ளது எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற மருத்துவ வேலைகள் தற்போது கணினியின் உதவியுடன் மிக வேகமாக நடைபெறுகிறது. மருத்துவருக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மருந்து உட்கொள்ளும் அவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் மருந்துகளை பற்றிய விவரங்களை கணினி மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். புத்தம் புதிய வியாதிகள் வரும் பொழுது அவற்றை எதிர்கொள்ளும் திறனை கணினி மற்றும் இணையம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்துகிறது அரசு. 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோரோனோ பெரும் தொற்று பற்றிய ஆய்வுகளை உலக அளவில் தெரிய செய்தது இணையமே. இணையம் மூலமாகவே நோய்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசு அதிகம் செலவிட்டது குறிப்பிடத்தக்கது

 இராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் கணினியின் பங்கு இன்றியமையாததாக மாறிவிட்டது . இன்றைய காலகட்டங்களில் ராணுவத் தளவாடங்கள் அனைத்தும் கணினியின் புதிய ஏற்பாட்டில் இயங்குகின்றன . துல்லியமாக தாக்கும் காலங்களையும் அதிவேக ஆயுதங்களையும் கணினியின் உதவி கொண்டே இயக்கமுடியும்.

 கணினி இல்லாமல் ஒரு தனி மனிதன் வாழ்வது கடினம் என்ற அளவுக்கு உயர்ந்த கணினியால் நமக்கு ஏற்படும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அதிக நேரம் கணினியை உபயோகித்தல் தனிநபர் விஷயங்களை திருடுதல் போன்ற இணைய வழி குற்றங்கள் நடக்கவே செய்கிறது. கணினி அறிவு பெற்ற ஒரு நபர் மூலம் இத்தகைய திருட்டுக்களை தடுக்க முடியும் .வங்கிக் கணக்குகளில் இருந்து திருடப்படுவது சாதாரண ஒரு நிகழ்வாக தற்சமயம் உள்ளது. இவற்றை கணினி மூலமாக ஆய்வுசெய்து தடுக்கமுடியும் இணையவழி குற்றங்களை தடுக்க ஒவ்வொரு அரசும் அதிகமான பொருட்செலவு செய்கிறது 

கணினி ஒரு மின்னனு சாதனம் என்ற நிலைமாறி மனிதனுக்கு உதவும் இன்னொரு விலங்கு என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. மிக சக்திவாய்ந்த குழப்பமான கணக்கு மற்றும் மனித வேலைகளை சுலபமாக முடிப்பதற்கு கணினி நமக்கு உதவுகிறது மனித கலாச்சாரத்தில் கணினி கண்டுபிடிப்பு அசுர வேக அறிவியல் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது

 பள்ளி கல்லூரிகளில் கணினியின் பங்கு எப்போதும் குறைந்ததில்லை . பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்ற நிலைமை மாறி இணைய வழியில் பாடம் கற்கும் நாளைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். கோரோனோ தொற்று பரவும் காலங்களில் இளம் வயதினரை பள்ளி கல்லூரிக்கு அனுப்பி தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் அரசு இணைய வழி மூலமாக பாடங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இணைய வழி பாடங்கள் சாதாரணமாக ஒரு ஆசிரியர் வகுப்பறையில் நடத்துவது போன்ற மட்டுமில்லாமல் புத்தம் புதிய தொழில்நுட்பம் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது. அனிமேஷன் மற்றும் வீடியோக்கள் மூலமாக மாணவர் சுலபமாக கல்வி கற்கும் திறனை வளர்க்கிறது. இதன் காரணமாகவே ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கு கணினி அறிவும் தேவை என்ற குறைந்தபட்ச தகுதி தாமாக அமைந்துவிட்டது

கணினி விலை ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது மறுபக்கம் கணினியின் சக்தி ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்ட கணினியின்  சக்தியைவிட பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் செல்பேசியின் சக்தி இன்று நூறு மடங்கு அதிகமாக உள்ளது

 கணினியில் சக்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் இணைய வேகம் தொலைத்தொடர்பு மூலமாக நொடிப்பொழுதில் உலகை சுற்றி வரும் வல்லமை கொண்டதாக மாறி வருகிறது 10 ஆண்டுகளில் இணையத்தின் வேகம் 200 மடங்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இனிவரும் காலங்களில் இது ஆயிரம் மடங்கு வேகமாக செயல்பட உள்ளது

இன்றைய சூழலில் கணினி இயக்க தெரியாத குழந்தைகளே நம் குடும்பங்களில் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. தொடுதிரை கொண்ட செல்போனை இயக்கும் இரண்டு வயது குழந்தைகளை நாம் இப்போது காணலாம். இத்தகைய வளர்ச்சி காட்டில் உள்ள கணினியை கற்காமல் இருப்பது தவறு என்னும் அளவிற்கு கணினியின் வளர்ச்சி உள்ளது. இருந்தபோதிலும் கணினி உதவியின்றி செய்யப்படும் செயல்கள் பல சமயங்களில் உன்னதமாக உள்ளன