10,11,12 ஆம் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாப்பை உறுதி செய்ய நேரடி வகுப்பை தவிருங்கள் என்று சென்னை உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்துள்ளது

தமிழகத்தில் 600 என்ற கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 12 நாட்களில் 15000 மாக மாறிவிட்டது ,இதனை தொடர்ந்து 1முதல் 9வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் ,கல்லூரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்பிற்கு தடை விதித்தது தமிழக அரசு ,இருந்த போதிலும் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பொதுத்தேர்வை காரணம் காட்டி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு சுழற்சி முறையில் நடைபெற்று வந்தது

இதற்க்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் அரசு தொடர்ந்து பள்ளியை நடத்தி வர அனுமதி அளித்தது ,வரும் 19 தேதி முதல் திட்டமிட்ட படி திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிய படுத்த பட்டது

இரு தினங்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்பை தடை செய்ய சென்னை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை தாண்டி இன்று நடந்த நீதிமன்ற கூட்டத்தில் தமிழக அரசிற்கு சில பரிந்துரைகளை வழங்கியது

அதன்படி 10,11,12ஆம் மாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டாம் என்றும் ,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை வழங்குவதாகவும் செய்தி குறிப்பில் தெரிய வந்தது