Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 2.5 நால்வகைப் பொருத்தங்கள்

Tn 12th Tamil Guide Chapter 2.5 Naalvagai Pothangal

தமிழில் திணைப்பாகுபாடு …………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
Answer:
அ) பொருட்குறிப்பு

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே” – இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்

அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ) இலக்கண விளக்கம்
Answer:
இ) தொல்காப்பியம்

யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே

அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை, அஃறிணை
ஈ) விரவுத்திணை, உயர்திணை
Answer:
ஆ) உயர்திணை, அஃறிணை

பொருத்துக.

அ) அவன் அவள் அவர் – 1. உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் – 2. உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் – 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் – 4. பதிலிடு பெயர்கள்

அ) 4, 1, 2, 3
ஆ) 2, 3, 4, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 1, 2, 3

தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு …………பாகுபாடு அமைந்துள்ளது.

அ) இருதிணைப்
ஆ) பால்
இ) இடப்
ஈ) எண்
Answer:
ஆ) பால்

பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினைமுற்றின் ………………ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.

அ) திணை , பால்
ஆ) திணை , எண்
இ) திணை , பால், எண்
ஈ) திணை , விகுதி
Answer:
இ) திணை , பால், எண்

‘அவர்கள்’ என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும்

அ) பெயர்ச்சொல்
ஆ) வினைச்சொல்
இ) பதிலிடு பெயர்ச்சொல்
ஈ) பதிலிடு வினைச்சொல்
Answer:
இ) பதிலிடு பெயர்ச்சொல்

தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது ………… இடத்திலும் வரும்.

அ) படர்க்கை
ஆ) தன்மை
இ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) முன்னிலை
Answer:
ஈ) முன்னிலை

சரியானதைத் தேர்க.

அ) பத்துமரம் வீழ்ந்த து – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படவில்லை
ஆ) நாம் முயற்சி செய்வோம் – உளப்படுத்தாதத் தன்மைப்பன்மை
இ) நாங்கள் முயற்சி செய்வோம் – ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படுகிறது
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்
Answer:
ஈ) அவர்கள் – பதிலிடு பெயர்ச்சொல்

சரியானதைத் தேர்க.

அ) யார்? எது? – பால் வேறுபாடு
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்
இ) அவர் வந்தார் – பன்மைப் பொருளை உணர்த்துகிறது
ஈ) தங்கமணி பாடினான் – பெண்பால் விகுதி பெற்றுள்ளது
Answer:
ஆ) ஆசிரியர் வந்தார் – பலர்பால் விகுதி உயர்வு விகுதி வரும்

சரியானதைத் தேர்க.

அ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது.
ஆ) ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளன.
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.
ஈ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளன.
Answer:
இ) ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் உள்ளது.

சரியானதைத் தேர்க.

அ) பத்துத் தேங்காய்கள்
ஆ) இரண்டு மனிதர்
இ) ஒரு மரம் வீழ்ந்த ன
ஈ) அவர்கள் வந்தார்கள்
Answer:
ஈ) அவர்கள் வந்தார்கள்

பொருத்துக.

அ) பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள் – 1. ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர்
ஆ) பத்துத் தேங்காய் – 2. பலர்பால் சொல்
இ) தங்கமணி – 3. அஃறிணைபன்மைவிகுதிகட்டாயமில்லை
ஈ) மாணவர் வந்தனர் – 4. தன்மை, முன்னிலை, படர்க்கை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 1, 2
இ) 4, 1, 3, 2
ஈ) 1, 2, 3, 4
Answer:
ஆ) 4, 3, 1, 2

மொழியின் அடிப்படைப் பண்புகள்

i) திணை
ii) பால்
iii) எண்
iv) இடம்

அ) i), ii) சரி
ஆ) iii), iv) சரி
இ) ili), iv) சரி மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

உலக மொழிகள் அனைத்திலும் ………… மிகுதி என்பர்.

அ) பெயர்ச்சொற்களே
ஆ) வினைச்சொற்களே
இ) இடைச்சொற்களே
ஈ) உரிச்சொற்களே
Answer:
அ) பெயர்ச்சொற்களே

பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் ……………வகையாகப் பிரிப்பர்.

அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

தமிழில் ……………பகுப்பு இலக்கண அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

அ) எண்
ஆ) செய்யுள்
இ) இலக்கிய
ஈ) பால்
Answer:
ஈ) பால்

…………அடிப்படையிலேயே ஒன்றன்பால் பலவின்பால் என்பன அறியப்படுகின்றன.

அ) பால்
ஆ) இட
இ) தன்மை, முன்னிலை
ஈ) ஒருமை, பன்மை
Answer:
ஈ) ஒருமை, பன்மை

இடம் …………… வகைப்படும்.

அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

தன்மைப் பன்மையில் உள்ள வகை …………

அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பேசுவது

அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

பேசுபவர் முன்னிலையாளரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது

அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தாத முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

நாம் முயற்சி செய்வோம் என்பது

அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) உளப்படுத்தா முன்னிலைப் பன்மை
ஈ) உளப்பாட்டு முன்னிலைப் பன்மை
Answer:
ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை