Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

Tamilnadu 12th Tamil Guide Chapter 3.1 தமிழர் குடும்ப முறை

சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை

அ) அறவோர், துறவோர்
ஆ) திருமணமும் குடும்பமும்
இ) மன்றங்களும் அவைகளும்
ஈ) நிதியமும் சுங்கமும்
Answer:
ஆ) திருமணமும் குடும்பமும்

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) உரிமைத்தாகம் – 1. பாரசீகக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி – 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி – 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை – 4. சாகித்திய அகாதெமி

அ) 2, 4, 3, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
ஈ) 2, 3, 4, 1

“எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூகமுறை
Answer:
ஈ) தந்தைவழிச் சமூகமுறை

‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்

அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்

அ) இல், மனை
ஆ) மனை , குடில்
இ) இல், குரம்பை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) இல், மனை

அகநானூறு 346ஆவது பாடலில் வரும் ‘நும்மனை’ என்பது

அ) கணவனின் இல்லம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) நற்றாய் இல்லம்
ஈ) செவிலியின் இல்லம்
Answer:
அ) கணவனின் இல்லம்

தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்

அ) குடும்பம்
ஆ) தாய்வழிக் குடும்பம்
இ) மணந்தகம்
ஈ) விரிந்த குடும்பம்
Answer:
இ) மணந்தகம்

தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்

அ) பெண்கள்
ஆ) ஆண்க ள்
இ) பெண்கள், ஆண்கள்
ஈ) குழந்தைகள்
Answer:
அ) பெண்கள்

மணமக்களின் வாழ்விடம் என்பது

அ) கணவன் அகம்
ஆ) செவிலியகம்
இ) தனியார் விடுதி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கணவன் அகம்

தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்

அ) புரிதலில்லாத குடும்பம்
ஆ) நெருக்கமில்லாத குடும்பம்
இ) நெருக்கமான குடும்பம்
ஈ) முடிவுநிலை குடும்பம்
Answer:
இ) நெருக்கமான குடும்பம்

இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்

அ) தனிக்குடும்ப வகை
ஆ) சமூக குடும்ப வகை
இ) கூட்டுக்குடும்ப வகை
ஈ) விரிந்த குடும்ப வகை
Answer:
அ) தனிக்குடும்ப வகை

ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை

அ) தந்தைவழிக் குடும்ப முறை
ஆ) விரிந்தவழிக் குடும்ப முறை
இ) தனிக்குடும்ப முறை
ஈ) பிரிந்த வழிக் குடும்ப முறை
Answer:
இ) தனிக்குடும்ப முறை

தலைவனும் தலைவியும் …… காத்தலே இல்வாழ்வின் பயன்.

அ) குழந்தை நலம்
ஆ) மனைநலம்
இ) தன்னறம்
ஈ) மனையறம்
Answer:
ஈ) மனையறம்

கூற்று 1 : மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.
கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.

அ) கூற்று 1 தவறு 2 சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
இ) கூற்று 1 சரி 2 தவறு

கூற்று 1 : தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 : ‘குடும்பு’ என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

கூற்று 1 : ‘மணந்தகம்’ என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.
கூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

கூற்று 1 : சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.
கூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை’ ஆகும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி 2 தவறு

சரியானதைத் தேர்க.

அ) குடும்பு – தன்மனை
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை
இ) இல், மனை – நன்னூல்
ஈ) புக்கில் நிரந்தரமாகத் தங்குமிடம்
Answer:
ஆ) பதிற்றுப்பத்து – சேரநாட்டு மருமக்கள் தாய முறை

சரியானதைத் தேர்க.

அ) சிறுவர்தாயே பேரிற் பெண்டே – புறம் 276
ஆ) வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 270
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278
ஈ) செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன் – கலி, பாலை 8
Answer:
இ) முளரிமருங்கின் முதியோர் சிறுவன் – புறம் 278

சரியானதைத் தேர்க.

அ) குரம்பை – நகரம்
ஆ) புலப்பில் – கூட்டு இல்லம்
இ) குடில் – உச்சிப்பகுதி
ஈ) வரைப்பு – வாழிடம்
Answer:
ஈ) வரைப்பு – வாழிடம்

பொருந்தாததைத் தேர்க.

அ) நும்மனை – கணவனின் இல்லம்
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்
இ) தாய்வழிக் குடும்பம் – மருமக்கள் தாய முறை
ஈ) தந்தைவழிக் குடும்பம் – சிலம்பு கழி
Answer:
ஆ) மணந்தகம் – விரிந்த குடும்பம்

பொருத்தித் தேர்க.

அ) சிலம்பு கழி – 1. திருக்குறள்
ஆ) குடும்பு – 2. ஐங்குறுநூறு
இ) குடும்பம் – 3. குறுந்தொகை
ஈ) புலப்பில் – 4. கூடி வாழ்தல்

அ) 2, 1, 3, 4
ஆ) 1, 2, 3, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
இ) 2, 4, 1, 3

பொருத்துக.

அ) மருமக்கள் தாய முறை – 1. ஆமய்
ஆ) அறிவுரை – 2. நோன்பு
இ) செவிலித்தாய் – 3. பதிற்றுப்பத்து
ஈ) சிலம்புகழி – 4. செவிலித்தாய்

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?

அ) குடும்பம்
ஆ) கிராமம்
இ) நகரம்
ஈ) அரசு
Answer:
அ) குடும்பம்

குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை

அ) பெற்றோர்
ஆ) திருமணம்
இ) அரசு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) திருமணம்

சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.

i) இன்று நாம் வழங்கும் ‘திருமணம்’, ‘குடும்பம்’ ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.
ii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
iii) சங்க இலக்கியத்தில் ‘குடம்பை’, ‘குடும்பு’, ‘கடும்பு’ ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.

அ) i, ii சரி
ஆ) i, i சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

‘இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே
மனையகம் புகாஅக் காலை யான’
– என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை

அ) அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்
இ) தலைவனின் வரைவுக் கடாதல்
ஈ) தோழி, தலைவி உரையாடல்கள்
Answer:
ஆ) ‘இல்’, ‘மனை’ ஆகிய இரண்டு வாழிடங்கள்

மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
ஆ) அகநானூறு

தற்காலிகத் தங்குமிடத்தைப் ‘புக்கில்’ என்று கூறும் நூல்

அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) குறுந்தொகை
Answer:
ஆ) புறநானூறு

தன்மனை எனப்படுவது

அ) தற்காலிகத் தங்குமிடம்
ஆ) மனைவியின் இல்லம்
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
ஈ) திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்
Answer:
இ) திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்

மணந்தகம் என்பது

அ) மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
இ) கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்

இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி …………. என்று தொல்காப்பியம் கூறுகிறது.

அ) நற்றாய்க்குரியது
ஆ) செவிலிக்குரியது
இ) தோழிக்குரியது
ஈ) முதியவருக்குரியது
Answer:
ஆ) செவிலிக்குரியது

சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்

அ) தந்தை
ஆ) அரசன்
இ) தாய்
ஈ) அரசி
Answer:
இ) தாய்

சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே’ என்று குறிப்பிடும் நூல்

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

‘செம்முது பெண்டின் காதலஞ்சிறா அன்’ என்று குறிப்பிடும் நூல்

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்’ எனக் குறிப்பிடும் நூல்

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
அ) புறநானூறு

‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன்’ எனக் கூறும் நூல்

அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) பதிற்றுப்பத்து

‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்’ என்று குறிப்பிடும் நூல் …………. திணை …………….

அ) ஐங்குறுநூறு, பாலை
ஆ) கலித்தொகை, பாலை
இ) அகநானூறு, முல்லை
ஈ) குறுந்தொகை, மருதம்
Answer:
ஆ) கலித்தொகை, பாலை

திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்

அ) ஐங்குறுநூறு
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பதிற்றுப்பத்து
Answer:
இ) அகநானூறு

தாய்வழிச் சொத்துகள் பெண்டிருக்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் ………… திணைப்பாடல் கூறுகிறது.

அ) குறிஞ்சித்
ஆ) முல்லைத்
இ) மருதத்
ஈ) பாலைத்
Answer:
இ) மருதத்

தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் …………… சென்று சேர்ந்தன.

அ) ஆண்களுக்குச்
ஆ) பெண்களுக்குச்
இ) அரசனுக்குச்
ஈ) ஏழைகளுக்குச்
Answer:
ஆ) பெண்களுக்குச்

ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின் …………. வாழ வேண்டும்.

அ) தன் தந்தையகத்தில்
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்
இ) தன் கணவனுடைய தாயகத்தில்
ஈ) தன் தாயகத்தில்
Answer:
ஆ) தன் கணவனுடைய தந்தையகத்தில்

மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது

அ) பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு
ஆ) சிலம்புகழி நோன்பு
இ) சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சிலம்புகழி நோன்பு

‘நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக’ – என்று குறிப்பிடும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே’ என்று கூறும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
அ) குறுந்தொகை

இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்

அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

‘மறியிடைப் படுத்த மான்பிணை போல்’ மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்

அ) அகநானூறு
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) கலித்தொகை
Answer:
இ) ஐங்குறுநூறு

இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பாண்மையாகக் காணப்படுவது

அ) கூட்டுக்குடும்பம்
ஆ) தனிக்குடும்பம்
இ) விரிந்த குடும்பம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) தனிக்குடும்பம்

கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை ……………. புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

அ) வெள்ளைக்குடி நாகனாரின்
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்
இ) பரணரின்
ஈ) கபிலரின்
Answer:
ஆ) ஒக்கூர் மாசாத்தியாரின்

சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்

அ) நற்றாய்
ஆ) செவிலித்தாய்
இ) தோழி
ஈ) ததலைவி
Answer:
ஆ) செவிலித்தாய்

தமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி …………. காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.

அ) பனுவல் (தொகுதி II, 2010)
ஆ) பனுவல் (தொகுதி 1, 2010)
இ) பனுவல் (தொகுதி II, 2011)
ஈ) பனுவல் (தொகுதி 1, 2011)
Answer:
அ) பனுவல் (தொகுதி II, 2010)

தமிழர் குடும்பமுறை என்றும் கட்டுரையின் ஆசிரியர்

அ) சுப்ரமணிய பாரதி
ஆ) சோமசுந்தர பாரதி
இ) பக்தவத்சல பாரதி
ஈ) பழனிபாரதி
Answer:
இ) பக்தவத்சல பாரதி

பக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்

அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை
ஆ) விலங்குகள், பறவைகள் சார்ந்தவை
இ) இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை