Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

TN 12th Tamil Guide Chapter 3.3 கம்பராமாயணம்

‘உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்’ – யார் யார் ?

அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சவரி
Answer:
இ) இராமன், சுக்ரீவன்

“அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்” – அன்னவன் யார்?

அ) குகன்
ஆ) இராமன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஆ) இராமன்

‘இளவல் உன் இளையான்’ – இளவல் யார்?

அ) இலக்குவன்
ஆ) குகன்
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
அ) இலக்குவன்

சடாயு யாருடைய நண்பன்

அ) குகன்
ஆ) இராமன்
இ) தயரதன்
ஈ) அருணன்
Answer:
இ) தயரதன்

‘இந்தனம் எனைய என்ன கார்’ – இந்தனம் என்பதன் பொருள்

அ) இந்த நேரம்
ஆ) மாலை
இ) மணல்
ஈ) விறகு
Answer:
ஈ) விறகு

சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?

அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) அயோத்தியா காண்டம்
Answer:
ஆ) கிட்கிந்தா காண்டம்

“உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்” – ‘உவா’ என்பதன் பொருள்

அ) சந்திரன்
ஆ) சூரியன்
இ) பௌர்ணமி
ஈ) அமாவாசை
Answer:
ஈ) அமாவாசை

வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது?

அ) ஆரண்ய காண்டம்
ஆ) கிட்கிந்தா காண்டம்
இ) சுந்தர காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
ஈ) யுத்த காண்டம்

“ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூற” – ‘ஆழியான்’ எனப்படுபவன்

அ) குகன்
ஆ) இராமன்
இ) வீடணன்
ஈ) சடாயு
Answer:
ஆ) இராமன்

‘குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு, பின்குன்று சூழ்வான்’ – ‘குன்று’ பொருள்

அ) மலை
ஆ) பாறை
இ) கதிரவன்
ஈ) இராமன்
Answer:
இ) கதிரவன்

“தந்தனன் தாதை தன்னைத் தடக்
கையான் எடுத்துச் சார்வான்” – ‘தடக்கையான்’ இலக்கணக் குறிப்பு

அ) உரிச்சொற்றொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ) மரூஉ
Answer:
அ) உரிச்சொற்றொடர்
விடை : அ.

‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை

அ) குவித்த + உ
ஆ) குவி + (த்)(ந்) + த் + உ
இ) குவி + த் + த் + உ
ஈ) குவித்து + உ
Answer:
இ) குவி + த் + த் + உ

‘தந்தனன்’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை

அ) த + த்(ந்) + த் + அன் + அன்
ஆ) தந்து + அன் + அன்
இ) தா + த் + த் + அன் + அன்
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
Answer:
ஈ) தா(த) + த்(ந்) + த் + அன் + அன்

‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற விதிப்படி அமைந்த சொல்

அ) தலைப்பட்டு
ஆ) நமக்கிடையே
இ) உமக்கிடையே
ஈ) அருங்கானம்
Answer:
அ) தலைப்பட்டு

‘செற்றவர் என்னைச் செற்றார்’ – ‘செற்றவர்’ இலக்கணக் குறிப்பு

அ) பலர்பால் வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) வினையாலணையும் பெயர்
ஈ) எதிர்கால வினைமுற்று
Answer:
இ) வினையாலணையும் பெயர்

‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்

அ) மண்ணில்
ஆ) திரைப்படம்
இ) இல்லை
ஈ) பின்னாளில்
Answer:
அ) மண்ணில்

‘தருப்பையும் திருத்தி, பூவும்’ – ‘திருத்தி’ – இலக்கணக் குறிப்பு

அ) பெயரெச்சம்
ஆ) பண்புப்பெயர்
இ) வினையெச்சம்
ஈ) வினைத்தொகை
Answer:
இ) வினையெச்சம்

‘துன்பு உளது எனின் அன்றோ ’ – ‘உளது’ – இலக்கணக் குறிப்பு

அ) வினையெச்சம்
ஆ) பெயரெச்சம்
இ) மரூஉ
ஈ) இடைக்குறை
Answer:
ஈ) இடைக்குறை

ஓர் மூலம் இல்லான் யார் ?

அ) இலக்குவன்
ஆ) இராமன்
இ) சடாயு
ஈ) சுக்ரீவன்
Answer:
ஆ) இராமன்

‘யாவரும் கேளிர்’ என்பது தமிழர் நற்பண்பின் …………….. ஆகும்.

அ) மலர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஈ) வளர்ச்சி

‘சிறியோரை இகழ்தல் இலமே’ என்பது தமிழர் நற்பண்பின் …………. ஆகும்

அ) வளர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) மலர்ச்சி
ஈ) உயர்ச்சி
Answer:
இ) மலர்ச்சி

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழர் நற்பண்பின் …………… ஆகும்.

அ) முதிர்ச்சி
ஆ) வளர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) தொடர்ச்சி
Answer:
அ) முதிர்ச்சி

‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்பது தமிழர் நற்பண்பின் ……………….. ஆகும்.

அ) முதிர்ச்சி
ஆ) தொடர்ச்சி
இ) உயர்ச்சி
ஈ) வளர்ச்சி
Answer:
ஆ) தொடர்ச்சி

தமிழர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது ……………. ஆகும்.

அ) புறநானூறு
ஆ) திருக்குறள்
இ) கம்பராமாயணம்
ஈ) தொல்காப்பியம்
Answer:
இ) கம்பராமாயணம்

கூற்று 1 : குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உளதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்
கூற்று 2 : அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலிக்கவில்லை.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஆ) கூற்று 1 சரி 2 தவறு

கூற்று 1 : “அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர் – நீ என் உயிர்நண்பன்”
கூற்று 2 : “பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்”

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

கூற்று 1 : “மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் தவறு

சரியானதைத் தேர்க.

அ) சடாயு – கழுகின் மகன்
ஆ) வீடணன் – இராவணனின் தம்பி
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்
ஈ) குகன் – வேடற்குலத்தலைவன்
Answer:
இ) சுக்ரீவன் – வாலியின் அண்ணன்

சரியானதைத் தேர்க.

அ) ஆரண்ய காண்டம் – சவரி பிறப்பு நீங்கு படலம்
ஆ) கிட்கிந்தா காண்டம் – நட்பு கோட்படலம்
இ) யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்
Answer:
ஈ) அயோத்தியா காண்டம் – சடாயு உயிர்நீத்த படலம்

சரியானதைத் தேர்க.

அ) செற்றவர் – வினையாலணையும் பெயர்
ஆ) திருத்தி – வினையெச்சம்
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ
ஈ) நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
Answer:
இ) உளது – உள்ளது என்பதன் மரூஉ

பொருத்துக.

அ) சடாயு – 1. உயிர் நண்பன்
ஆ) சுக்ரீவன் – 2. அடைக்கலமானவன்
இ) குகன் – 3. தந்தை உறவு
ஈ) வீடணன் – 4. வேடற்குலத் தலைவன்

அ) 3, 1, 2, 4
ஆ) 3, 1, 4, 2
இ) 3, 1, 4, 2
ஈ) 1, 2, 4, 3
Answer:
இ) 3, 1, 4, 2

‘எனக்கும் மூத்தோன்’ என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்?

அ) இராமன் குகனை
ஆ) குகன் இராமனை
இ) குகன் பரதனை
ஈ) பரதன் குகனை
Answer:
ஈ) பரதன் குகனை

………………. தலைவன் குகன்.

அ) ஆயர்
ஆ) வேடுவர்
இ) பரதவர்
ஈ) குறவர்
Answer:
ஆ) வேடுவர்

பொருத்திக் காட்டுக.

அ) அமலன் – 1. குளிர்ந்த
ஆ) இளவல் – 2. இராமன்
இ) துன்பு – 3. தம்பி
ஈ) நளிர் – 4. துன்பம்

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 3, 4, 1

‘இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) இலக்குவன் குகனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) குகன் பரதனிடம்
ஈ) பரதன் குகனிடம்
Answer:
ஆ) இராமன் குகனிடம்

இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று வருந்தியவன்

அ) அனுமன்
ஆ) குகன்
இ) இராவணன்
ஈ) வாலி
Answer:
ஆ) குகன்

குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்

அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
அ) அயோத்தியா காண்டம்

சடாயு உயிர்நீத்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்

அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

……………… வேந்தன் சடாயு.

அ) வானர
ஆ) கழுகு
இ) மான்
ஈ) வன
Answer:
ஆ) கழுகு

இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது, தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன்

அ) அனுமன்
ஆ) வாலி
இ) சடாயு
ஈ) குகன்
Answer:
இ) சடாயு

சடாயுவைத் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்தவன்

அ) இராமன்
ஆ) குகன்
இ) அனுமன்
ஈ) பரதன்
Answer:
அ) இராமன்

‘சவரி பிறப்பு நீங்கு படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம் ………

அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) யுத்த காண்டம்
ஈ) சுந்தர காண்டம்
Answer:
ஆ) ஆரண்ய காண்டம்

சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்

அ) கைகேயி
ஆ) கோசலை
இ) மந்தரை
ஈ) சவரி
Answer:
ஈ) சவரி

அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியவன்

அ) இராமன்
ஆ) அனுமன்
இ) சுக்ரீவன்
ஈ) சடாயு
Answer:
அ) இராமன்

‘மாண்டது என் மாயப் பாசம்’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) கைகேயி, இராமனிடம்
ஆ) குகன் இராமனிடம்
இ) சவரி இராமனிடம்
ஈ) இராமன் அனுமனிடம்
Answer:
இ) சவரி இராமனிடம்

‘நட்புகோட்படலம்’ இடம்பெற்றுள்ள காண்டம்

அ) அயோத்தியா காண்டம்
ஆ) ஆரண்ய காண்டம்
இ) கிட்கிந்தா காண்டம்
ஈ) யுத்த காண்ம்
Answer:
இ) கிட்கிந்தா காண்டம்

சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் யாரை அழைத்து வந்தான்?

அ) சடாயுவை
ஆ) சுக்ரீவனை
இ) சவரியை
ஈ) வாலியை
Answer:
ஆ) சுக்ரீவனை

பொருத்திக் காட்டுக.

அ) அனகன் – 1. உறவினர்
ஆ) சுவர் – 2. பகைவர்
இ) உடுபதி – 3. அமாவசை
ஈ) செற்றார் – 4. சந்திரன்
உ) கிளை – 5. இராமன்

அ) 5, 3, 4, 2, 1
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 5, 3, 1, 2
ஈ ) 2, 3, 1, 5, 4
Answer:
அ) 5, 3, 4, 2, 1

வானரத் தலைவன்

அ) சடாயு
ஆ) குகன்
இ) பரதன்
ஈ) சுக்ரீவன்
Answer:
ஈ) சுக்ரீவன்

அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள்

அ) இராமனும் குகனும்
ஆ) இராமனும் இலக்குவனும்
இ) இராமனும் சுக்ரீவனும்
ஈ) சுக்ரீவனும் இராவனனும்
Answer:
இ) இராமனும் சுக்ரீவனும்

‘என் காதல் சுற்றம் உன் சுற்றம்’ – என்று யார் யாரிடம் கூறியது?

அ) இராமன் குகனிடம்
ஆ) இராமன் சுக்ரீவனிடம்
இ) சுக்ரீவன் இராமனிடம்
ஈ) வீடணன் இராவணனிடம்
Answer:
ஆ) இராமன் சுக்ரீவனிடம்

சீதையைக் கவர்ந்து வந்தது தவறென இராவனிடம் கூறியவர்

அ) அனுமன்
ஆ) சவரி
இ) சுக்ரீவன்
ஈ) வீடணன்
Answer:
ஈ) வீடணன்

இராமன் யாருக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான்?

அ) சுக்ரீவனுக்கு
ஆ) வீடணனுக்கு
இ) அனுமனுக்கு
ஈ) இராவணனுக்கு
Answer:
ஆ) வீடணனுக்கு

மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன்

அ) சுக்ரீவன்
ஆ) குகன்
இ) வீடணன்
ஈ) அனுமன்
Answer:
அ) சுக்ரீவன்

யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்கிறார் இராமன்?

அ) குகனுடன்
ஆ) சுக்ரீவனுடன்
இ) வீடணனுடன்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சுக்ரீவனுடன்

‘நின்னொடும் எழுவர் ஆனோம்’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) இராமன் சுக்ரீவனிடம்
ஆ) இராமன் குகனிடம்
இ) இராமன் வீடணனிடம்
ஈ) இலக்குவன் குகனிடம்
Answer:
இ) இராமன் வீடணனிடம்

கம்பராமாயணத்தில் பாடப்பகுதியாக அமைந்துள்ள பகுதி

அ) இராவணன் சீதையைச் சிறை எடுத்தல்
ஆ) இராமன் இராவணனை வெல்லுதல்
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது

கம்பராமாயணத்தை இயற்றியவர்

அ) கம்பர்
ஆ) சேக்கிழார்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) அம்பிகாவதி
Answer:
அ) கம்பர்

கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்

அ) இராமபுராணம்
ஆ) இராமாவதாரம்
இ) சீதாகல்யாணம்
ஈ) இராமநவமி
Answer:
ஆ) இராமாவதாரம்

கம்பரது காலம் ………….. ஆம் நூற்றாண்டு.

அ) 1
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer:
இ) 12

கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்

அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்

12th tamil guide pdf free download 2020

12th tamil guide pdf download 2020 to 2021

12th tamil bharathi guide pdf download 2020

12th tamil konar guide pdf download 2020

12th tamil book back answers 2020

konar tamil guide 12th pdf free download 2020

12th tamil guide pdf free download ~ padasalai

12th tamil don guide pdf free download 2020 to 2021