Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
Answer:
ஈ) அ, ஆ, இ அனைத்தும்

கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி காரணம் சரி
Answer:
ஈ) கூற்று சரி காரணம் சரி

பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 4, 1, 2, 3

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
அ) மதராசப்பட்டினம்
ஆ) காவிரிபூம்பட்டினம்
இ) புதுச்சேரி
ஈ) கொற்கை
Answer:
அ) மதராசப்பட்டினம்

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
அ) திருப்பதி
ஆ) சென்னை
இ) திருவனந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
Answer:
ஆ) சென்னை

தமிழகத்தின் தலைநகரம்
அ) மதுரை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) சென்னை
Answer:
ஈ) சென்னை

சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி நிறுவுவது
அ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
இ) அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை

சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
அ) அடையாற்றுப்
ஆ) பாலாற்றுப்
இ) கூவமாற்றுப்
ஈ) கொற்றலையாற்றுப்
Answer:
ஈ) கொற்றலையாற்றுப்

இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) பல்லாவரம்
இ) புழல்
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) பல்லாவரம்

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
அ) திருவல்லிக்கேணி
ஆ) மீனம்பாக்கம்
இ) மயிலாப்பூர்
ஈ) வடபழனி
Answer:
இ) மயிலாப்பூர்

பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் நந்திவர்மன்
ஈ) மூன்றாம் நந்திர்வமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரவர்மன்

சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
அ) பல்லாவரம் கல்வெட்டு
ஆ) திருவல்லிக்கேணி கல்வெட்டு
இ) மயிலாப்பூர் கல்வெட்டு
ஈ) மாதவரம் கல்வெட்டு
Answer:
அ) பல்லாவரம் கல்வெட்டு

சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
அ) பல்லாவரம்
ஆ) மாதவரம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) வடபழனி
Answer:
இ) திருவல்லிக்கேணி

வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
அ) கூவம்
ஆ) அடையாறு
இ) கொற்றலையாற்று
ஈ) பாலாற்று
Answer:
அ) கூவம்

பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) காமராசர்
Answer:
ஆ) பாரதிதாசன்

சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் ”தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்’ என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
ஆ) வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
இ) சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு

மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) கால்பர்ட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் பிட்
Answer:
அ) பிரான்சிஸ் டே

கூவம் ஆற்றை …………… என்றும் அழைத்தனர்.
அ) வடபழனி ஆறு
ஆ) திருவல்லிக்கேணி ஆறு
இ) மாதவரம் ஆறு
ஈ) பல்லாவரம் ஆறு
Answer:
ஆ) திருவல்லிக்கேணி ஆறு

பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னை – 1. பாலாறு
ஆ) தென்சென்னை – 2. கூவம்
இ) மத்திய சென்னை – 3. அடையாறு
ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

பிரான்சிஸ் டே மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைச் சென்னப்பரின் இருமகன்களிடமிருந்து வாங்கிய நாள்
அ) 22.08.1639
ஆ) 23.09.1739
இ) 23.08.1640
ஈ) 24.10.1642
Answer:
அ) 22.08.1639

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி …………….. என்று அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கோட்டைநகரம்
இ) தமிழர் நகரம்
ஈ) கருப்பர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்தகுடியிருப்புகள்…………..என அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கருப்பர் நகரம்
இ) கோட்டை நகரம்
ஈ) தமிழர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னைப் பகுதிகள் – 1. மதராஸ்
ஆ) தென்சென்னைப் பகுதிகள் – 2. மதராசப்பட்டினம்
இ) ஆங்கிலேயர்கள் – 3. சென்னைப்பட்டினம்

அ) 2, 3, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 3, 2, 1
Answer:
அ) 2, 3, 1

1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னைநகரின் மக்கள் தொகை
அ) 18,000
ஆ) 25,000
இ) 19,000
ஈ) 29,000
Answer:
இ) 19,000

சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு
அ) 1639
ஆ) 1646
இ) 1688
ஈ) 1768
Answer:
இ) 1688

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) தானியேல்
Answer:
ஆ) எலி யேல்

எலியேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் தலைவரானவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) தாமஸ் பிட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் மன்ரோ
Answer:
ஆ) தாமஸ் பிட்

……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) இராபர்ட் கிளைவ்
Answer:
இ) தாமஸ் பிட்

சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
அ) கி.பி. 17
ஆ) கி.பி. 16
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 19
Answer:
இ) கி.பி. 18

ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1615
ஆ) 1635
இ) 1675
ஈ) 1715
Answer:
ஈ) 1715

பொருத்திக் காட்டுக.
அ) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1) 1914
ஆ) கிறித்தவக் கல்லூரி – 2) 1857
இ) பிரசிடென்சி கல்லூரி – 3) 1840
ஈ) சென்னைப் பல்கலைக்கழகம் – 4) 1837
உ) இராணிமேரி கல்லூரி – 5) 1912

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ ) 2, 3, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்
அ) இராணிமேரிக் கல்லூரி
ஆ) பச்சையப்பன் கல்லூரி
இ) சென்னைக் கோட்டைக் கல்லூரி
ஈ) கிறித்துவக்கல்லூரி
Answer:
ஆ) பச்சையப்பன் கல்லூரி

இந்தோ -சாரசனிக் கட்டடப் பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
அ) சேப்பாக்கம் அரண்மனை
ஆ) சென்னைப்பல்கலைக்கழகம்
இ) ரிப்பன் கட்டடம்
ஈ) விக்டோரியா அரங்கு
Answer:
அ) சேப்பாக்கம் அரண்மனை

இந்தியாவின் முதல் பொதுநூலகம்
அ) சரசுவதிமகால் நூலகம்
ஆ) கொல்கத்தா நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) திருவனந்தபுரம் நூலகம்
Answer:
இ) கன்னிமாரா நூலகம்

அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை ………………. நெடுஞ்சாலையாகும்.
அ) பூவிருந்தவல்லி
ஆ) திருவொற்றியூர்
இ) சிந்தாதிரிப்பேட்டை
ஈ) மவுலிவாக்கம்
Answer:
அ) பூவிருந்தவல்லி

1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்
அ) எழும்பூர்
ஆ) கிண்டி
இ) இராயபுரம்
ஈ) திருவான்மியூர்
Answer:
இ) இராயபுரம்

ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நாள்
அ) 1942 அக்டோபர் 2
ஆ) 1945 ஜூன் 15
இ) 1947 ஆகஸ்ட் 15
ஈ) 1950 ஜனவரி 26
Answer:
இ) 1947 ஆகஸ்ட் 15

பொருத்திக் காட்டுக.
அ) சென்னை இலக்கியச் சங்கம் – 1) 1869
ஆ) கன்னிமாரா நூலகம் – 2) 1812
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3) 1860
ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4) 2010

அ) 2, 3, 1, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 3, 1, 4

காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) சரசுவதி மகால் நூலகம்
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
Answer:
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) திருவனந்தபுரம் நூலகம்
இ) சரசுவதிமகால் நூலகம்
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்
Answer:
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்