Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

TN 12th Tamil Guide Chapter 6.1 திரைமொழி

TN 12th Tamil Guide Chapter 6.1 thiraimozhi

வேறுபட்டதைக் குறிப்பிடுக.
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
இ) நடுக்காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு
ஈ) காட்சி மறைவு
Answer:
ஈ) காட்சி மறைவு

சரியானக் கூற்றைக் கண்டறிக.
i) 1895ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் நாள் மாலை 5 மணி, பிரான்சின் தலைநகரான பாரீசில் கிராண்ட் கபே விடுதி முன் ‘அதிசயம் பிறக்கிறது’ என்ற தலைப்பில் முதல் திரைப்படம் வெளியிடப்பட்டது.
ii) லூமியர் சகோதரர்களே இத்திரைப்படத்தை உருவாக்கினர்.
iii) இச்சகோதரர்கள் வெளியிட்ட படங்களில் ஒன்று ரயிலின் வருகை

அ) i சரி
ஆ) ii சரி
இ) iii மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர் சகோதரர்கள்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் வெருமிலர்
Answer:
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்

படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்
அ) லூமியர் சகோரார்கள்
ஆ) எடிசன் சகோதரர்கள்
இ) ஜார்ஜ் சகோதரர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) லூமியர் சகோரார்கள்

திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்
அ) லூமியர்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) ஜார்ஜ் மிலி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) ஜார்ஜ் மிலி

சார்லி சாப்ளின் பிறந்த இடம்
அ) தி ஹேக்
ஆ) இலண்டன்
இ) நியூயார்க்
ஈ) பாரிஸ்
Answer:
ஆ) இலண்டன்

சார்லி சாப்ளின் தாயார் ஒரு
அ) மேடைப்பாடகர்
ஆ) நடிகை
இ) வழக்கறிஞர்
ஈ) மருத்துவர்
Answer:
அ) மேடைப்பாடகர்

சிறுவனான சாப்ளின் மேடையேறி ஆடிப்பாடிடக் காரணமாக அமைந்தது
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்
ஆ) இயற்கையிலேயே மேடையில் ஆடிப்பாடிட வேண்டும் என்ற சார்லி சாப்ளின் ஆசையினால்
இ) நண்பர்கள் மேடையேறியே ஆக வேண்டும் என்று சாப்ளினை வற்புறுத்தியதால்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) மேடையில் பாடிப் பிழைத்த அம்மாவின் குரல் கெட்டுவிட்டதால்

சார்லி சாப்ளினைப் பேசாப் பட நாயகனாக உருவாக்கிய தோற்றம்
அ) லிட்டில் மாஸ்டர்
ஆ) லிட்டில் டிராம்ப்
இ) லிட்டில் ஸ்டார்
ஈ) மாஸ்டர் மார்ஷல்
Answer:
ஆ) லிட்டில் டிராம்ப்

சார்லி சாப்ளின், வறுமைமிக்க தன் இளமை வாழ்வை ……………….. என்ற வெற்றிப் படமாக்கினார்.
அ) தி கிட்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) மார்டன் டைம்ஸ்
ஈ) தி. கிரேட் டிக்டேட்டர்
Answer:
அ) தி கிட்

சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்
அ) மார்டன் டைம்ஸ்
ஆ) சிட்டி லைட்ஸ்
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
ஈ) யுனைடெட் மூவிஸ்
Answer:
இ) யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்

தி கோல்டு ரஷ், தி சர்க்கஸ் போன்ற காவியப் படங்களை உருவாக்கியவர்
அ) அர்னால்டு
ஆ) ஜாக்கிஜான்
இ) சார்லி சாப்ளின்
ஈ) ஜார்ஜ் மீலி
Answer:
இ) சார்லி சாப்ளின்

‘சார்லி சாப்ளின்’ எதிரிகளின் வாய்களை அடைத்து எடுத்த பேசும் திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) சிட்டி நைட்ஸ்
இ) வில்லேஜ் லைட்ஸ்
ஈ) வில்லேஜ் நைட்ஸ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

சார்லி சாப்ளின் மூன்று ஆண்டு உழைப்பில் வெளியிட்ட திரைப்படம்
அ) சிட்டி லைட்ஸ்
ஆ) மார்டன் டைம்ஸ்
இ) தி கிட்
ஈ) தி கோல்டு ரஷ்
Answer:
அ) சிட்டி லைட்ஸ்

சார்லி சாப்ளினது சோதனைப் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வெளியான ஆண்டு.
அ) 1932
ஆ) 1940
இ) 1936
ஈ) 1945
Answer:
ஆ) 1940

ஹிட்லர் புகழேணியில் ஏறிக் கொண்டிருந்த காலத்தில் அவரை விமர்சித்து வந்த முதல் படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதை உணர்த்திய திரைப்படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி கிரேட் டிக்டேட்டர்
ஈ) தி கிரேட் லீடர்
Answer:
இ) தி கிரேட் டிக்டேட்டர்

சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ படம் ஏற்படுத்திய தாக்கம்
(i) அன்றைய தொழில் மய உலகின் கேடுகளை விமர்சனம் செய்வதாக இத்திரைப்படம் அமைந்தமையால் சாப்ளினுக்குப் பொதுவுடைமையாளர் என்னும் முத்திரை விழுந்தது.
ii) பல முதலாளிய நாடுகளில் படம் தடை செய்யப்பட்டது.
iii) இருந்தாலும் படம் வெற்றி பெற்றது.

அ) i), ii) சரி
ஆ) ii), iii) சரி
இ) iii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

சார்லி சாப்ளின் இலண்டன் சென்று கொண்டிருந்தபோது பொதுவுடைமையாளரான அவரை நாடு கடத்தியதாக அமெரிக்கா அறிவித்த ஆண்டு
அ) 1940
ஆ) 1950
இ) 1952
ஈ) 1942
Answer:
ஆ) 1950

சார்லி சாப்ளினுக்கு வாழ்நாள் சாதனையாளர் என்னும் வகையில் …………….. விருது வழங்கப்பட்டது.
அ) கோல்டன் குளோப்
ஆ) ஆஸ்கார்
இ) பிரவு டு ஆஃப் அமெரிக்கா
ஈ) கோல்டன் வேர்ல்டு
Answer:
ஆ) ஆஸ்கார்

பொருத்திக் காட்டுக.
அ) LONG SHOT – 1. மீ அண்மைக் காட்சித்துணிப்பு
ஆ) MID SHOT – 2. அண்மைக் காட்சித்திணிப்பு
இ) CLOSEUP SHOT – 3. நடுக்காட்சித்துணிப்பு
ஈ) EXTREME CLOSEUP SHOT – 4. சேய்மைக்காட்சித் துணிப்பு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

மனைவியின் வைரமாலையை விற்று, பிரெஞ்சுக்காரர் டுபான் என்பவரிடமிருந்து 2500 ரூபாய்க்கு ஒரு புரொஜக்டரையும் சில துண்டுப் படங்களையும் வாங்கியவர்
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்
ஆ) தியோடர் பாஸ்கரன்
இ) அஜயன் பாலா
ஈ) அம்ஷ ன் குமார்
Answer:
அ) சாமிக்கண்ணு வின்சென்ட்

சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுப்படங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்
அ) சென்னை
ஆ) திருவனந்தபுரம்
இ) திருச்சி
ஈ) மதுரை
Answer:
இ) திருச்சி

சார்லி சாப்ளினது ‘மார்டன் டைம்ஸ்’ வெளியான ஆண்டு
அ) 1932
ஆ) 1936
இ) 1940
ஈ) 1942
Answer:
ஆ) 1936

1977ஆம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு
ஆ) ஆந்திராவில் காக்கி நாடா
இ) கேரளத்தில் கோழிக்கோடு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

சாப்ளினுக்கு நல்ல வசனங்களுடன் படம் எடுக்கத் தெரியாது என்று கூறிவந்த விமர்சகர்களின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம்
அ) தி கிட்
ஆ) தி கோல்டு ரஷ்
இ) தி சர்க்க ஸ்
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்
Answer:
ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்திட சார்லி சாப்ளினால் உருவாக்கப்பட்ட பாத்திரம்
அ) ஹென்றி
ஆ) ஹென்கோல்
இ) மீலி
ஈ) ஆடம்ஸ்
Answer:
ஆ) ஹென்கோல்

திரைமொழி குறித்த பாடப்பகுதி … கட்டுரையை அடிப்படைச் சட்டமாகக் கொண்டது.
அ) அஜயன் பாலா
ஆ) சுஜாதா
இ) செழியன்
ஈ) அம்ஷன்குமார்
Answer:
அ) அஜயன் பாலா