Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 5.6 படிமம்

படிமம் என்பதன் பொருள்
அ) சொல்
ஆ) செயல்
இ) காட்சி
ஈ) ஒலி
Answer:
இ) காட்சி

‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்’ இக்கவிதையில் ………… பயின்று வந்துள்ளது.
அ) பயன் படிமம்
ஆ) வினைப்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) வினைப்படிமம்

கூற்று : உவமைஉருவகம்போலபடிமமும்வினை,பயன்,மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்றும் சரி, காரணமும் சரி
ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு
Answer:
ஆ) கூற்று தவறு, காரணம் சரி

மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க.
அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு
ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்
ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப
Answer:
இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும்

“வெயில் மழைக்குச்
சொரணையற்ற எருமை
குத்திட்ட பாறையாக
நதிநீரில் கிடக்கும்” – என்று எருமையின் சுரணையைற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துபவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
ஆ) தேவதேவன்

“கத்தல்களின் நெருக்கடியில்
தத்துவங்கள்
குழந்தைகள் போல்
அடிக்கடி தொலைந்துபோகும்” – என்று எழுதியவர்

அ) ஆ.வே.முனுசாமி
ஆ) தேவதேவன்
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
அ) ஆ.வே.முனுசாமி

பொருத்திக் காட்டுக.
அ) தாழைமலர் – 1. பொன்
ஆ) செருந்தி மலர் – 2. அன்ன ம்
இ) முள்ளி மலர் – 3. முத்துகள்
ஈ) புன்னை மலர் – 4. நீலமணி

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

எயிற்பட்டினம் உள்ள ஓய்மாநாட்டை ஆட்சி செய்தவன்
அ) அதியமான்
ஆ) நல்லியகோடன்
இ) பேகன்
ஈ) நளங்கிள்ளி
Answer:
ஆ) நல்லியகோடன்

‘அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்’- என்னும் அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிறுபாணாற்றுப்படை
இ) மலைப்படுகடாம்
ஈ) அகநானூறு
Answer:
ஆ) சிறுபாணாற்றுப்படை

“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கின்றது’ என்ற படிமக்கவிதையின் ஆசிரியர்
அ) தேவதேவன்
ஆ) ஆ.வே.முனுசாமி
இ) ந. பிச்சமூர்த்தி
ஈ) கல்யாண்ஜி
Answer:
இ) ந. பிச்சமூர்த்தி

‘கட்டில் நிணக்கும் இழிசினன் கையது’ என்னும் புறநானூற்றில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
அ) வினைப்படிமம்

“காலை இளம் வெயில்
நன்றாக மேய
தும்பறுத்துத் துள்ளிவரும்
புதுவெயில்” – என்று கல்யாண்ஜி கவிதையில் படிமப்படுத்தப்படுவது

அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்
ஆ) கன்றின் செயல், காலை இளம் வெயிலின் அழகோடு ஒப்பிடுதல்
இ) கன்றின் செயல் இளைஞரோடு ஒப்பிடல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) காலை இளம் வெயிலின் அழகு, கன்றின் செயலோடு ஒப்பிடுதல்

‘நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே’ என்னும் குறுந்தொகை பாடலில் இடம்பெறும் படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஆ) பயன்படிமம்

“யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்” – என்ற அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) மெய்ப்ப டிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) மெய்ப்ப டிமம்

“கோவைப்பழ மூக்கும்
பாசிமணிக் கண்ணும்
சிவப்புக்கோட்டுக் கழுத்தும்
வேப்பிலை வாலும்” – என்னும் ந. பிச்சமூர்த்தியின் கவிதையில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
இ) வடிவப்படிமம்

‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப என்னும் அகநானூற்றுப் பாடலில் அமைந்துள்ள படிமம்
அ) வினைப்படிமம்
ஆ) பயன்படிமம்
இ) வடிவப்படிமம்
ஈ) உருப்படிமம்
Answer:
ஈ) உருப்படிமம்