Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

TN 12th Tamil Guide Chapter 7.5 sangakala kalvettum en ninaivugalaum

12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
அ) எழுத்து
ஆ) கணையாழி
இ) கல்வெட்டு
ஈ) தென்றல்
Answer:
ஆ) கணையாழி

ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 25
Answer:
ஆ) 30

…………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அ) பிராகிருத
ஆ) சிந்துவெளி
இ) கல்வெட்டு
ஈ) பாரசீக
Answer:
ஆ) சிந்துவெளி

ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக.
அ) ஜவகர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது – 1) 2009
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 2) 1970
இ) தாமரைத்திரு விருது – 3) 1992

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3,1
ஈ) 1, 2, 3
Answer:
அ) 2, 1, 3

ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத்தக்கன
i) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ii) இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
iii) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையவை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
ஆ) பாண்டியன் அறிவுடைநம்பி, 2ஆம் நூற்றாண்டு
இ) சோழன் நலங்கிள்ளி, 2ஆம் நூற்றாண்டு
ஈ) சோழன் நெடுங்கிள்ளி, முதலாம் நூற்றாண்டு
Answer:
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு

1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
அ) நூற்றாண்டு மாணிக்கம்
ஆ) தமிழக கல்வெட்டியல்
இ) கல்வெட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நூற்றாண்டு மாணிக்கம்

சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி
அ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) வி. கிருஷ்ண மூர்த்தி
ஈ) தேனுகா
Answer:
ஆ) ஐராவதம் மகாதேவன்

தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரி வடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
இ) வி. கருஷ்ண மூர்த்தி
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) ஜி.யு. போப்
இ) ஜார்ஜ் எல். ஹார்ட்
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

ஆற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த செங்காய்பன் …………. ஆவார்.
அ) சமணத்துறவி
ஆ) பௌத்தத்துறவி
இ) அமைச்சர்
ஈ) புலவர்
Answer:
அ) சமணத்துறவி

கரூரை அடுத்த புகளூர் ஆறு நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
i) கோ ஆதன் செல்லிரும்பொறை
ii) பெருங்கடுங்கோன்
iii) இளங்கடுங்கோ
iv) இளங்கோ

அ) i – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, i, ii – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

பதிற்றுப்பத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
i) 6, 7, 8 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது
ii) 7, 8, 9 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
ஆ) ii – சரி

புகளூர் கல்வெட்டின் காலம் …………. நூற்றாண்டு.
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
அ) கே.வி. சுப்பிரமணியனார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஈ) இவர்களில் எவருமில்லை
Answer:
அ) கே.வி. சுப்பிரமணியனார்