Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 8.4 சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை காட்டும் பாட்டுடைத் தலைவனின் இன்றைய நிலப்பகுதி
அ) உதகமண்ட லம்
ஆ) விழுப்புரம்
இ) திண்டிவனம்
ஈ) தருமபுரி
Answer:
இ) திண்டிவனம்

கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள்
அ) ஆய் அண்டிரனும் அதிகனும்
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்
இ) நள்ளியும் ஓரியும்
ஈ) பாரியும் காரியும்
Answer:
ஆ) நல்லியக் கோடனும் குமணனும்

பொருத்துக
i) பேகன் – மலையமான் நாடு
ii) பாரி – பறம்பு மலை
iii) காரி – பொதிய மலை
iv) ஆய் – பொதினி மலை

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
ஆ) 4, 2, 1, 3

பொருந்தாத இணையைத் தேர்க.
அ) அதிகன் – கதடூர்
ஆ) நள்ளி – நளி மலை
இ) ஓரி – கொல்லி மலை
ஈ) காரி – பொதிய மலை
Answer:
ஈ) காரி – பொதிய மலை

பொருத்துக.
i) கலிங்கம் – வண்டு
ii) சுரும்பு – சுரபுன்னை
iii) நாகம் – பாரம்
iv) நுகம் – ஆடை

அ) 4, 1, 2, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 1, 2, 3

பொருத்துக.
i) போது – கூத்தர்
ii) உறழ் – வில்
iii) கோடியர் – மலர்
iv) சாவம் – செறிவு

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

பொருத்துக.
i) ஆலமர் செல்வன் – போரிடல்
ii) நாகு – மலைப்பக்கம்
iii) மலைதல் – சிவபெருமான்
iv) கவாஅன் – இளமை

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 4, 1
ஈ.) 3, 2, 4, 1
Answer:
அ) 3, 4, 1, 2

பொருத்துக.
i) மயிலுக்குப் போர்வை – பாரி
ii) முல்லைக்குத் தேர் – பேகன்
iii) ஔவைக்கு நெல்லிக்கனி – ஆய்
iv) கூத்தர்க்கு மலைநாடு – அதிகன்
v) சிவனுக்கு நீலமணி – ஓரி

அ) 2, 1, 4, 5, 3
ஆ ) 4, 5, 3, 2, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 1, 4, 5, 3, 2
Answer:
அ) 2, 1, 4, 5, 3

ஆவியர் குலத்தில் தோன்றியவன்
அ) பாரி
ஆ) ஓரி
இ) காரி
ஈ) பேகன்
Answer:
ஈ) பேகன்

பொருத்துக
i) வீரக்கழலை உடையவன் – ஆய்
ii) வில் ஏந்தியவன் – காரி
iii) வேலினை உடையவன் – நள்ளி
iv) போர்த் தொழிலில் வல்லமையுடையவன் – அதிகன்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

தனியொருவனாக இருந்து ஈகையின் பாரத்தைத் தாங்கி செல்பவன்
அ) அதிகன்
ஆ) பேகன்
இ) நள்ளி
ஈ) நல்லியக்கோடன்
Answer:
ஈ) நல்லியக்கோடன்

பொருத்துக.
i) வாய்த்த – செய்யுளிசையளபெடை
ii) காவ அன் – பெயரெச்சம்
iii) தடக்கை – ஆகுபெயர்
iv) நீலம் – உரிச்சொல் தொடர்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3, 1
ஈ) 1, 3, 4, 2
Answer:
அ) 2, 1, 4, 3

பொருத்துக.
i) நெடுவேல் – வினைத்தொகை
ii) கடல்தானை – தொழிற்பெயர்
iii) விரிகடல் – உவமைத்தொகை
iv) மலைதல் – பண்புத்தொகை

அ) 4, 3, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 1, 2

சிறுபாணன் பயணம் தொடங்கிய இடம் ……………. முடித்த இடம் ………………..
அ) நல்லூர், திண்டிவனம்
ஆ) மரக்காணம், வேலூர்
இ) வேலூர், ஆமூர்
ஈ) எயிற்பட்டினம், நல்லாமூர்
Answer:
அ) நல்லூர், திண்டிவனம்

சிறுபாணனின் பயணம் குறித்த தகவல்களைப் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலில் குறிப்பிட்டுள்வர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) விபுலானந்த அடிகள்
இ) மா. இராசமாணிக்கனார்
ஈ) மறைமலையடிகள்
Answer:
இ) மா. இராசமாணிக்கனார்

ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு தற்போது …………….. எனப்படுகிறது.
அ) பழனி
ஆ) பிரான் மலை
இ) திருக்கோவிலூர்
ஈ) தர்மபுரி
Answer:
அ) பழனி

பொருத்துக.
i) பறம்பு மலை – உதகமண்டலம் (ஊட்டி)
ii) மலையமான் நாடு – தர்மபுரி
iii) பொதிய மலை – பிரான்மலை
iv) தகடூர் – குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகள்
v) நளிமலை – திருக்கோவிலூர்

அ) 3, 5, 4, 2, 1
ஆ) 4, 2, 1, 5, 3
இ) 1, 5, 3, 4, 2
ஈ ) 4, 2, 5, 3, 1
Answer:
அ) 3, 5, 4, 2, 1

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள மலை
அ) பொதிய மலை
ஆ) பிரான் மலை
இ) நளி மலை
ஈ) கொல்லி மலை
Answer:
ஆ) பிரான் மலை

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் அமைந்துள்ள ஆற்றங்கரை
அ) காவிரி
ஆ) தென்பண்ணை
இ) பாலாறு
ஈ) வெட்டாறு
Answer:
ஆ) தென்பண்ணை

தற்போது அகத்தியர் மலை எனப்படுவது
அ) பொதினி மலை
ஆ) பொதிய மலை
இ) பறம்பு மலை
ஈ) நளி மலை
Answer:
ஆ) பொதிய மலை

கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
அ) நாமக்கல்
ஆ) விழுப்புரம்
இ) திருநெல்வேலி
ஈ) சிவகங்கை
Answer:
அ) நாமக்கல்

திண்டிவனத்தைச் சார்ந்தது ……………. நாடு என அழைக்கப்பட்ட நிலப்பகுதி.
அ) மலையமான்
ஆ) ஓய்மா
இ) தகடூர்
ஈ) பறம்பு
Answer:
ஆ) ஓய்மா

‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று கூறும் பழமொழி நானூற்றுப் பாடலுக்குச் சான்றாக அமைபவர்கள்
அ) பாரி, பேகன்
ஆ) ஓரி, காரி
இ) ஆய், அதிகன்
ஈ) நல்லியக்கோடன், நள்ளி
Answer:
அ) பாரி, பேகன்

வள்ளல் குமணனைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பதிற்றுப்பத்து
ஆ) புறநானூறு
இ) பரிபாடல்
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) புறநானூறு

குறுநில மன்னன் குமணனால் ஆளப்பட்ட மலை
அ) பொதினி மலை
ஆ) முதிரமலை
இ) நளிமலை
ஈ) கொல்லிமலை
Answer:
ஆ) முதிரமலை

‘தன் தலையை அரிந்து சென்று, இளங்குமணனிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுச் செல்லுமாறு’ குமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட புலவர்
அ) பிராந்தையார்
ஆ) கபிலர்
இ) பெருந்தலைச் சாந்தனார்
ஈ) பரணர்
Answer:
இ) பெருந்தலைச் சாந்தனார்

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர்
அ) மாங்குடி மருதனார்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) பூதஞ்சேந்தனார்
Answer:
ஆ) நல்லூர் நத்தத்தனார்

சிறுபாணாற்றுப்படை ………….. நூல்களுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாடல்
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாடல்

சிறுபாணாற்றுப்படையின் பாடலடிகள்
அ) 263
ஆ) 269
இ) 220
ஈ) 210
Answer:
ஆ) 269

ஓய்மாநாட்டு மன்னனான நல்லியக்கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) திருமுருகாற்றுப்படை
ஈ) பொருநாற்றுப்படை
Answer:
அ) சிறுபாணாற்றுப்படை