Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 8.3 இரட்சணிய யாத்ரிகம்

TN 12th Tamil Guide Chapter 8.3 Iratchaniya Yathreegam

ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் ஆங்கில நூலின் தழுவலாக அமைந்த படைப்பு
அ) இரட்சணிய யாத்திரிகம்
ஆ) இரட்சணிய மனோகரம்
இ) மனோன்மணியம்
ஈ) போற்றித் திருஅகவல்
Answer:
அ) இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
அ) வீரமாமுனிவர்
ஆ) வேநாயகம்
இ) எச்.ஏ.கிருட்டிணனார்
ஈ) ஜி.யு. போப்
Answer:
இ) எச்.ஏ.கிருட்டிணனார்

இரட்சணிய யாத்திரிகம் என்பது
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்
ஆ) சிற்றிலக்கியம்
இ) சிறு காப்பியம்
ஈ) காப்பியம்
Answer:
அ) ஒரு பெரும் உருவகக் காப்பியம்

இரட்சணிய யாத்திரிகத்தின் பாடல்கள்
அ) 3566
ஆ) 3677
இ) 3766
ஈ) 3244
Answer:
இ) 3766

இரட்சணிய யாத்திரிகத்தில் உள்ள பருவங்கள்
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

இரட்சணிய யாத்திரிகத்தின் இரட்சணிய சரித படத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் அமைந்துள்ள பருவம்
அ) ஆதிபருவம்
ஆ) குமார பருவம்
இ) நிதான பருவம்
ஈ) ஆரணிய பருவம்
Answer:
ஆ) குமார பருவம்

கிறித்துவக் கம்பர் என்று போற்றப்பட்டவர்
அ) வீரமாமுனிவர்
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்
இ) ஜி.யு. போப்
ஈ) ஈராசு பாதிரியார்
Answer:
ஆ) எச்.ஏ. கிருட்டிணனார்

திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் தொடராக வெளிவந்த ஆண்டுகள்
அ) 10
ஆ) 12
இ) 13
ஈ) 15
Answer:
இ) 13

இளமைத்தமிழே இரட்சணிய யாத்திரிகம் முதல் பதிப்பாக வெளி வந்த நாள்
அ) 1894 – மே
ஆ) 1896 – ஏப்ரல்
இ) 1896 – மே
ஈ) 1892 – ஏப்ரல்
Answer:
அ) 1894 – மே

பொருத்துக.
i) பாதகர் – கூறவில்லை
ii) மாற்றம் – குற்றமில்லாத
iii) ஏதமில் – சொல்
iv) நுவன்றிவர் – கொடியவர்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

பொருத்துக.
i) ஆக்கினை – உறுதி
ii) கூவல் – கடல்
iii) உததி – கிணறு
iv) நிண்ண யம் – தண்டனை

பொருத்துக.
i) மேதினி – கெடுதல்
ii) வாரிதி – பழி
iii) நிந்தை – கடல்
iv) பொல்லாங்கு – உலகம்

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

இறைமகன் இயேசுவைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் …………….. ஆளுநரின் முன் கொண்டுபோய் நிறுத்தினர்.

அ) போந்தியுராயன்
ஆ) போந்தியு பிலாத்து
இ) ஏரோது
ஈ) அகஸ்டஸ் சீசர்
Answer:
ஆ) போந்தியு பிலாத்து

பொருத்துக.
i) கருந்தடம் – வினையெச்சம்
ii) ஓர்மின் – பெயரெச்சம்
iii) வெந்து – பண்புத்தொகை
iv) திருந்திய – ஏவல் பன்மை வினைமுற்று

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 3, 2, 1, 4
ஈ) 4, 1, 3, 2
Answer:
அ) 3, 4, 1, 2

பொருத்துக.
i) உன்ன லிர் – வினையெச்சம்
ii) பாதகர் – அடுக்குத்தொடர்
iii) ஊன்ற ஊன்ற – வினையாலனையும் பெயர்
iv) போந்து – முன்னிலைப் பன்மை வினைமுற்று

அ) 4, 3, 2, 1
ஆ) 4, 1, 2, 3
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

இறைமகன் இயேசுவை இகழ்ந்து பேசியவர்கள்
i) பொல்லாத யூதர்கள்
ii) போர்ச் சேவகர்
iii) போந்தியு பிலாந்து

அ) i, ii – சரி
ஆ) iii – மட்டும் தவறு
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
ஆ) iii – மட்டும் தவறு

இறைமகன் இயேசுவுக்கு வெள்ளாடையைக் கழற்றிவிட்டு, …………. மலர் போன்ற ஓர் சிவந்த அங்கியை அவருக்குப் போர்த்தினர்.
அ) காந்தன்
ஆ) முல்லை
இ) முளரி
ஈ) முருக
Answer:
ஈ) முருக

பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பெம்மான் இருதயத்து ஊன்ற ஊன்ற – இவ்வடிகளில் அமைந்துள்ள இலக்கிய நயம்
அ) மோனை
ஆ) எதுகை
இ) அந்தாரி
ஈ) இயைபு
Answer:
ஆ) எதுகை