Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Tamil Essays

Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள்

Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் முக்கிய கேள்வியாகும் ,மனித தொலைத்தொடர்பு வளர்ச்சியில் எத்தனையோ சாதனை கண்டுபிடுப்புகள் வந்தாலும் தொலைக்காட்சி என்ற அறிவியல் சாதனத்தின் புகழ் எப்போதும் உயர்ந்து நிற்கிறது . அடுத்த தலைமுறை கண்டுபிடுப்புகளான கணினி ,மடிக்கணினி ,செல்லிடை பேசி என பல கண்டுபிடுப்புகளுக்கு உறுதுணையாக தொலைக்காட்சி இருந்தாலும் அது தனது உருவத்தை மாற்றி கொள்கிறதே தவிர அதன் பயன்பாடு குறைவதே இல்லை ,அத்தகைய தொலைக்காட்சியின் நன்மை தீமைகளை நாம் இந்த கட்டுரையில் காணலாம்

தொலைக்காட்சி நன்மைகள்

தொலைக்காட்சி நன்மைகள்
  • பொழுதுபோக்கு அம்சம் :– திரையில் கண்டுவந்த திரைப்படத்தை வீட்டின் வரவேற்ப்பறைக்கு கொண்டுவந்த இந்த தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு நமக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது ,உலகளவில் பிரசித்தி பெற்ற திரைப்படமாக இருந்தாலும் அதனை நமது வீட்டில் அமர்ந்து பார்க்க முடிகிறது ,குறைந்த பொருட்ச்செலவில் அதிகம் பயன் தரக்கூடிய பொழுதுபோக்காக தொலைக்காட்சி அமைந்திருப்பதாலேயே நிறைய நேரம் நாம் தொலைக்காட்சியின் முன் செலவிடுகிறோம்
  • குடுப்பதினார் நண்பர்களுடன் நேரம் :- வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் மாற்றும் நண்பர்களும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது மிக உயர்ந்த பொழுதுபோக்கு அம்சமாகும்.எப்போதும் வேலை பளு என ஓடிக்கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட நம்மை நண்பர்களோடு அமர செய்வது இந்த பழக்கம் மட்டுமே, ஒன்றாக உணவருந்தும் பழக்கம் கூட இன்றைய நவீன வாழ்க்கையில் குறைந்து போய்விட்ட நிலையில் ,ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமே குடும்ப உறவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கு காரணியாக அமைகிறது .
  • குறைந்த செலவில் பொழுதுபோக்கு :- தொலைக்காட்சியின் முக்கியபயனாக நாம் கருதுவது குறைந்த செலவே ஆகும் ,நல்ல நிலையில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஐந்து வருடங்களுக்கு நமக்கு பொழுதுபோக்கை தருகிறது,உலக நடப்புகளை எவ்வித செலவும் இன்றி நாம் தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொள்ளலாம் ,மிக அதிக தொலைக்காட்சி தொடர்கள் இந்த காலகட்டத்தில் ஒளிபரப்ப படுகின்றன அதனை குறைந்த செலவில் நாம் காணலாம் ,எப்போதும் இல்லாத அளவில் மிக பெரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலைய பட்டியலை நாம் கொண்டுள்ளோம்,இதில் நம் மொழி மட்டுமல்லாது பல தரப்பட்ட இந்திய மொழி திரைப்படங்கள் ,உலகளவில் புகழ் பெற்ற உலகமொழி திரைப்படங்களை நாம் காணலாம்
  • கல்வி புகட்டும் தொலைக்காட்சி :- பொழுதுபோக்கு என்ற ஒற்றை சொல்லை தாண்டி அறிவு புகட்டுதல் என்ற தலத்தில் தொலைக்காட்சி நமக்கு மிகுந்த பயனளிக்கிறது ,இன்றைய நவீன காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லாமலே தொலைக்காட்சி வாயிலாக ஒருவர் படித்து பட்டம் பெற முடியும் என்பதற்கு சான்றாக கொரோனா காலகட்டத்தில் அனைத்து பாடங்களும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயின்றதை நாம் கண்கூடாக கண்டுள்ளோம்
  • தனிமை போக்கி :- தனிமையில் வாழும் அல்லது தனித்து மனநிலையில் உள்ள ஒருவருக்கு உறுதுணையாக இருப்பது தொலைக்காட்சி ,எவ்வளவோ அறிவியல் கண்டுபிடுப்புகளும் இணையவழி உதவிகளும் ஒருவருக்கு கிடைக்கும் இந்த கால கட்டத்தில் தொலைக்காட்சியின் பயனாக எப்போதும் மற்றோருவருடன் தொடர்பில் இருப்பது போன்ற மனோநிலையை பலர் அடைகின்றனர் ,புதிய மனோதத்துவ தனிமை நிலை நோய்களை தொலைக்காட்சி காணுதல் என்ற செயல் மூலம் பலர் போக்குகின்றனர்

தொலைக்காட்சி தீமைகள்

தொலைக்காட்சி தீமைகள்
  • புத்தி கூர்மையை பாதிப்பு :- மிக நீண்ட நேரம் தொலைக்காட்சியை உபயோக படுத்துதல் ,இரவில் அதிக நேரம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்க்க செலவிடுதல் போன்ற நிகழ்வுகள் மூலமாக குழந்தை மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் புத்தி கூர்மை மழுங்குவதாக அறிவியல் அறிஞர்கள் பதிவிடுகின்றனர் ,குறிப்பிட்ட நேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஒருவனுக்கு தன்னிலை மறக்கும் மனோபாவம் வளர்வதால் ,புதிய முயற்சிகள் தடைபெறுகின்றன
  • தனிமை படுதல் :- தொலைக்காட்சியின் வசம் தோழமை கொண்டு சமூக வட்டங்களில் பங்குபெறாமல் தங்களை தாமே தனிமை படுத்திக்கொள்ளுதல் என்பது புதிய மனநோய் என்றும் கூறப்படுகிறது ,எப்போதும் புதிய மனிதர்களை காணுதல் புதிய மனிதர்களுடன் பேச பயம் கொள்ளுதல் போன்றன இந்த நோயின் அடிப்படை தன்மையாகும்
  • பணம் விரயம் செய்தல் :- குறைந்த செலவில் பொழுதுபோக்கை தரும் தொலைக்காட்சியை அதிக பண விரயம் செய்து புதிய தொலைக்காட்சி ஒளிபரப்பு வாங்குதல் ,புதிய நவீன தொலைக்காட்சி பேட்டிகள் வாங்குதல் ,ஒலி அமைப்புகளை அடிக்கடி மாற்றுதல் போன்ற செயல்களால் அதிக பண விரயம் செய்யும் செயலாக பலர் மாற்றி விடுகின்றனர் ,இதனால் பண இழப்பு மட்டுமல்லாது மன நிம்மதியும் கெடுகிறது
  • வன்முறை :- குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் வன்முறை என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் எளிதாக அறிமுகமாகிறது ,வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை எளிதாக ஒரு மாணவர் கண்டுகளிக்க முடிகிறது ,இதற்கான கட்டுப்பாடுகள் அரசு விதித்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை என்பது உண்மையாகும்,குழந்தைகள் காணும் கார்ட்டூன் சித்திரங்களில் கூட நாயகனை அனைவரையும் அடித்து உதைக்கும் வீரனாக காட்ட,வன்முறை சேர்க்க படுவதை யாராலும் மறைக்க முடியாது ,இது போன்ற நிகழ்ச்சிகளை பெற்றோர் உதவியுடன் காண வேண்டும் என்று பகுத்தாய்வு செய்து வெளியிட்டாலும் ,தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளை இவற்றை பார்க்காமல் இருக்க வைக்க முடியவில்லை என்பது அனைத்து பெற்றோர்களின் புகாராகும்
  • நேரம் :- பொழுது போக்கு மட்டுமே வாழ்க்கை அல்ல தொடர்ந்து தொலைக்காட்சி பார்பதினால் மனிதனின் பொன்னான நேரம் வீணடிக்க படுகிறது,முக்கிய வேலைக்கு செல்லும் ஒருவர் சிறுது நேரம் காணும் தொலைக்காட்சி அவரை ஆட்கொண்டு அந்த வேலைக்கு கூட செல்ல விடாமல் ஆட்கொள்வதை நாம் அறிந்திருக்கிறோம்,நேரம் தவறுதல் போன்ற ஒழுங்கீன செயல்களுக்கு நாமே தொலைக்காட்சி பார்க்கும் பழக்கத்தால் வித்திடுகின்றோம்
  • கண்பார்வை பாதிப்பு :- தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்தால் ,மிக அருகில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தால் ,இரவில் அதிக நேரம் கண் விழித்து தொலைக்காட்சி பார்த்தால் போன்ற செயல்களால் நமது கண் பார்வை மங்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ,அதிக ஆபத்தை தராவிட்டாலும் தொலைக்காட்சி ஒளி குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உண்மையாகும் ,இதனை தவிர்க்கும் கண்கண்ணாடிகள் பயன்படுத்துவதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் என்றாலும் எப்போதும் இதுபோன்ற கண்ணாடிகள் பயன்படுத்தும் வாய்ப்புகள் குறைவு என்பதனால் ,பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பே உள்ளது