Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

அல்லல் படுப்பதூம் இல் – எவரோடு பழகினால்?
அ) வான்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர்
ஈ) தீயினத்தார்
Answer:
ஈ) தீயினத்தார்

திண்ணியர் என்பதன் பொருள் தருக.
அ) அறிவுடையார்
ஆ) மன உறுதியுடையவர்
இ) தீக்காய்வார்
ஈ) அறிவினார்
Answer:
ஆ) மன உறுதியுடையவர்

ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்
Answer:
இ) தூதுவர்

பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று – (i) தீக்காய்வார்
ஆ) செத்தார் – (ii) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது – (iii) கள் உண்ப வர்
ஈ) இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – (iv) உடன்பாடு இல்லாதவர்

அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1

நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை?
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
Answer:
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்

எளியது, அரியது எது?
அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
Answer:
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது

‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆனப் பெறின்’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி

‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) இல்பொருள் உவமையணி
ஆ) தொழில் உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) தொழில் உவமை அணி

‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
Answer:
அ) உவமை அணி

கள் உண்பவர் …………… உண்ப வர் என்கிறார் வள்ளுவர்.
அ) அமுது
ஆ) நஞ்சு
இ) பழங்கஞ்சி
ஈ) ஊன்
Answer:
ஆ) நஞ்சு