Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

Tn 12th Tamil Guide Chapter 5.3 தேவாரம்

உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக.
Answer:
மேலாளர்,
தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு),
கடலூர் அலுவலகம்,
கடலூர்.

மயிலாப்பூரில் இறைவனுக்குக் கொண்டாடப்படும் விழா
அ) பங்குனி உத்திர விழா
ஆ) திருக்கார்த்திகை விழா
இ) சித்திரா பௌர்ணமி விழா
ஈ) தைப்பூச விழா
Answer:
அ) பங்குனி உத்திர விழா

தேவாரம் தந்த திருஞானசம்பந்தர் முத்துப்பல்லக்கில் செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ள 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் அமைந்துள்ள இடம்
அ) மயிலாப்பூர்
ஆ) திருநெல்வேலி
இ) திருவொற்றியூர்
ஈ) வள்ளியூர்
Answer:
ஆ) திருநெல்வேலி

மயிலையில் வீற்றிருக்கும் இறைவன்
அ) கபாலீசுவரர்
ஆ) தான்தோன்றிநாதர்
இ) லிங்கேசுவரர்
ஈ) பெருவுடையார்
Answer:
அ) கபாலீசுவரர்

‘மாமயிலை’ என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) உரிச்சொற்றொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
இ) உரிச்சொற்றொடர்

பொருத்திக் காட்டுக.
அ) ஐப்பசி – 1. விளக்குத் திருவிழா
ஆ) கார்த்திகை – 2. திருவாதிரைவிழா
இ) மார்கழி – 3. ஓணவிழா
ஈ) மாசி – 4. கடலாட்டு விழா

அ) 3, 1, 2, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 1, 2, 4, 3
Answer:
அ) 3, 1, 2, 4

பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
அ) திருநாவுக்கரசர்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சுந்தரர்
ஈ) மாணிக்கவாசகர்
Answer:
ஆ) திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர்
அ) சேக்கிழார்
ஆ) இராசராச சோழன்
இ) நம்பியாண்டார் நம்பி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
இ) நம்பியாண்டார் நம்பி

கண்டான் என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை
அ) காண்(கண்) + ட் + ஆன்
ஆ) கண் + ட் + ஆன்
இ) காண் + ட் + ட் + ஆன்
ஈ) காண்டு + ஆன்
Answer:
அ) காண்(கண்) + ட் + ஆன்

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு பன்னிரு திருமுறைகளில் ……………… என்று அழைக்கப்படுகின்றன.
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருச்சதகம்
ஈ) திருத்தொண்டத்தொகை
Answer:
அ) தேவாரம்