Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

TN 12th Tamil Guide Chapter 6.6 காப்பிய இலக்கணம்

ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
அ) சிவஞான முனிவர்
ஆ) மயிலை நாதர்
இ) ஆறுமுக நாவலர்
ஈ) இளம்பூரணர்
Answer:
ஆ) மயிலை நாதர்

கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள் தருகிறது.
கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.

அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

சரியானவற்றைப் பொருத்தித் தேர்க :
அ) காதை – 1. கந்தபுராணம்
ஆ) சருக்கம் – 2. சீவகசிந்தாமணி
இ) இலம்பகம் – 3. சூளாமணி
ஈ) படலம் – 4. சிலப்பதிகாரம்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

பொருத்திக் காட்டுக.
அ) காதை – 1. சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) சருக்கம் – 2. கந்தபுராணம், கம்பராமாயணம்
இ) இலம்பகம் – 3. சீவக சிந்தாமணி
ஈ) படலம் – 4. சூளாமணி, பாரதம்
உ) காண்டம் – 5. சிலப்பதிகாரம், மணிமேகலை

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4, 5
இ) 4, 3, 2, 1, 5
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

EPOS என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்
அ) சொல் அல்லது பாடல்
ஆ) எழுத்து அல்லது கவிதை
இ) வாக்கியம் அல்லது வரலாறு
ஈ) பக்தி அல்லது பண்பாடு
Answer:
அ) சொல் அல்லது பாடல்

நன்னூலுக்கு உரை எழுதியவர்
அ) மயிலைநாதர்
ஆ) சி.வை.தாமோதரனார்
இ) சேனாவரையர்
ஈ) இளம்பூரணர்
Answer:
அ) மயிலைநாதர்

‘பஞ்சகாப்பியம்’ என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல்
அ) நன்னூல்
ஆ) தமிழ்விடுதூது
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) தமிழ்விடுதூது

சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பன அறிய செய்வது
அ) மயிலைநாதரின் நன்னூல் உரை
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை
இ) பொருள்தொகை நிகண்டு
ஈ) திருத்தணிகை உலா
Answer:
ஆ) சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை

வடமொழியில் ‘காவ்யதரிசனம்’ என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) இலக்கண விளக்கம்
ஈ) தொன்னூல் விளக்கம்
Answer:
அ) தண்டியலங்காரம்

தண்டியலங்காரம் காப்பிய வகை ……………. பகுக்கின்றது.
அ) இரண்டாக
ஆ) மூன்றாக
இ) நான்காக
ஈ) ஐந்தாக
Answer:
அ) இரண்டாக

‘பாவிகம் என்பது காப்பிய பண்பே’ என்று கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) மாறனலங்காரம்
Answer:
இ) தண்டியலங்காரம்

பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) வளையாபதி
Answer:
இ) சீவகசிந்தாமணி

‘பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப்’ என்பது …………. பாவிகம்.
அ) கம்பராமயணத்தின்
ஆ) சிலப்பதிகாரத்தின்
இ) சீவகசிந்தாமணியின்
ஈ) குண்டலகேசியின்
Answer:
அ) கம்பராமயணத்தின்

தண்டியலங்காரம் கூறும் ‘தொடர்நிலை’ என்னும் செய்யுள் வகை ………….. குறிப்பதாகும்.
அ) சிற்றிலக்கியத்தை
ஆ) அக இலக்கத்தை
இ) காப்பியத்தை
ஈ) புற இலக்கியத்தை
Answer:
இ) காப்பியத்தை

பொருள்தொடர்நிலைக்கான நூல்கள்
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
ஆ) அந்தாதி இலக்கியங்கள்
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

விருத்தம் என்னும் ஒரேவகைச் அசெய்யுளில் அமைந்தவை
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை
இ) குண்டலகேசி, வளையாபதி
ஈ) இராவணகாவியம்
Answer:
அ) சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) குண்டலகேசி
ஈ) வளையாபதி
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

‘அந்தாதி இலக்கியங்கள்’, செய்யுள் வகைகளில் ……….. சான்றாக அமைகின்றன.
அ) பொருள் தொடர்நிலைக்கு
ஆ) சொல்தொடர்நிலைக்கு
இ) தொகைநிலைக்கு
ஈ) முத்தகத்துக்கு
Answer:
ஆ) சொல்தொடர்நிலைக்கு

பொருத்திக் காட்டுக.
அ) பாரதியார் – 1. பாஞ்சாலி சபதம்
ஆ) பாரதிதாசன் – 2. மருமக்கள் வழி மான்மியம்
இ) கவிமணி – 3. பாண்டியன் பரிசு
ஈ) கண்ண தாசன் – 4. மாங்கனி

அ) 1, 3, 2, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2,1, 3, 4
Answer:
அ) 1, 3, 2, 4

பொருத்திக் காட்டுக.
அ) கவியோகி சுத்தானந்த பாரதியார் – 1. ஏசுகாவியம்
ஆ) புலவர் குழந்தை – 2. பராசக்தி மகாகவியம்
இ) பாரதிதாசன் – 3. இராவண காவியம்
ஈ) கண்ண தாசன் – 4. இருண்டவீடு

அ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 3, 1, 4
ஈ) 1, 4, 2, 3
Answer:
அ) 2, 3, 4, 1

‘ஆட்டனத்தி ஆதிமந்தி’ என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியவர்
அ) பாரதிதாசன்
ஆ) கண்ண தாசன்
இ) கவிமணி
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஆ) கண்ண தாசன்