Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Padasalai Co 12th New Study Materials

12th Tamil Guide Chapter 8.6 குறியீடு

குறியீடுகளைப் பொருத்துக.
அ) பெண் – 1. சமாதானம்
ஆ) புறா – 2. வீரம்
இ) தராசு – 3. விளக்கு
ஈ) சிங்கம் – 4. நீதி

அ) 2, 4, 1, 3
ஆ) 2, 4, 3, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 3, 1, 2, 4
Answer:
இ) 3, 1, 4, 2

கூற்று : 19 ஆம் நூற்றாண்டில் குறியீட்டியம் ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது.
காரணம் : பொதலேர், ரைம்போ, வெர்லேன், மல்லார்மே முதலானவர்கள் குறியீட்டியத்தை வளர்த்தவர்கள்.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
Answer:
ஆ) கூற்று சரி, காரணம் சரி

சங்க இலக்கியத்தில், அகத்திணை மாந்தர்களின் உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள்.
அ) உவமை
ஆ) உவமேயம்
இ) உத்தி
ஈ) உள்ளுறை உவமை
Answer:
ஈ) உள்ளுறை உவமை

‘திட்டம்’ என்னும் தலைப்பில் வரங்கள் சாபங்கள் ஆகுமென்றால் இங்கே தவங்கள் எதற்காக? என்று எழுதப்பட்டுள்ள கவிதையில் ‘வரம்’ எதற்குக் குறியீடாகிறது?
அ) அமுதசுரபி
ஆ) ஆதிரைப் பருக்கை
இ) திட்ட ம்
ஈ) பயனற்ற விளைவு
Answer:
இ) திட்ட ம்

மறைத்துச் சொல்லவும் மிகுத்துச் சொல்லவும் அழுத்திச் சொல்லவும் பயன்படும் இலக்கிய உத்தி எது?
அ) குறியீடு
ஆ) படிமம்
இ) அங்கதம்
ஈ) தொன்மம்
Answer:
அ) குறியீடு

Symbol (சிம்பல்) என்பதன் பொருள்
அ) ஒன்றுசேர்
ஆ) பிரித்தல்
இ) காட்டல்
ஈ) விட்டு விலகு
Answer:
அ) ஒன்றுசேர்

தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிட்டவர்
அ) ஜார்ஜ்
ஆ) ஹார்ட்
இ) பிரவுன்லீ
ஈ) வில்லியம்
Answer:
ஆ) ஹார்ட்

‘உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையை’ – என்ற கபிலரின் கலித்தொகை பாடலில் வெளிப்படும் குறியீடு.
i) தலைவியுடனான திருமணத்தைத் தோழி வலியுறுத்தியதை விரும்பாத தலைவன் அக்கூற்றை மறுத்தற்கு, யானை வேங்கை மரத்தைக் குத்தியது குறியீடாகிறது.
ii) அவள் கூற்றை வேண்டாததாகக் கருதித் தலைவன் வருந்துதலுக்கு, தந்தத்தை எடுக்க இயலாது யானை தவிப்பது குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை” – என்னும் கபிலரின் அகநானூற்றுப் பாடலில் வெளிப்படும் குறியீடு
i) ஆண் குரங்கின் செயல் தலைவனின் செயலுக்குக் குறியீடாகிறது.
ii) சுனைநீர்த் தேறல் தலைவன் கொண்டுள்ள இன்பந்தரும் மயக்கத்திற்குக் குறியீடாகிறது.
iii) சந்தன மரத்தில் ஏறுவதற்கு முடியாமல் பூக்களாகிய படுக்கையில் குரங்கு விழுந்து கிடக்கும் செயல், திருமணம் செய்து கொள்ளாமல் இன்பத்தை மட்டும் நகர நினைக்கும் தலைவனது செயலுக்குக் குறியீடாகிறது.

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி

‘வியர்வை’ என்னும் தலைப்பில் ‘இந்த ஆதிரைப் பருக்கைகள் வீழ்ந்ததும் பூமிப்பாத்திரம் அமுதசுரபி’ என்று அப்துல்ரகுமான் எழுதியுள்ள கவிதையில் வியர்வைத்துளிக்குக் குறியீடாவது ……………………… செழிப்புக்குக் குறியீடாவது ……………..

அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி
ஆ) திட்டம், பயனற்ற விளைவு
இ) அமுதசுரபி, ஆதிரைப்பருக்கை
ஈ) பயனற்ற விளைவு திட்டம்
Answer:
அ) ஆதிரைப் பருக்கை , அமுதசுரபி

சங்க இலக்கியப் பாடல்களில் வரும் உள்ளுறை உவமம் என்னும் இக்காலத்தில் இலக்கிய உத்தியை ………………………’ எனலாம்.
அ) தொன்மம்
ஆ) படிமம்
இ) குறியீடு
ஈ) புதுக்கவிதை
Answer:
இ) குறியீடு