Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

மின்காந்த தூண்டலும் மாருதிசை மின்னோட்டமும்
Uncategorized

மின்காந்த தூண்டலும் மாருதிசை மின்னோட்டமும்– 12th Physics Tamil Guide Book Back Answerkey

I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்க்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

(a) எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது
(b) மின்னோட்டம் தூண்டப்படாது
(c) abcd
(d) adcb

Answer :-


2.படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று
(PQR) கிடைத்தள காந்தப்புலம் B – இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது

அதன் வேகம் v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு

Answer :-


3.t என்றகணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = − 10t2 – 50 t + 250 என உள்ளது.
t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

(a) −190 V (b) −10 V
(c) 10 V (d) 190 V

Answer :-


4.மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து –2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண்

(a) 0.2 H (b) 0.4 H
(c) 0.8 H (d) 0.1 H

Answer :-


5.படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து
மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது

Answer :-


6.4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண்யாது ?

(a) 7.54 µH (b) 8.54 µH
(c) 9.54 µH (d) 10.54 µH

Answer :-


7.ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230
சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின்
மின்னோட்டமானது

(a) 2 A (b) 18 A
(c) 12 A (d) 1 A

Answer :-


8.ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல்
இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக
உயர்த்துகிறது. அதன் பயனுறுதிற

(a) 1.2 (b) 0.83
(c) 0.12 (d) 0.9

Answer :-


9.ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக
இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரண

Answer :-


10.ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக
உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட
வேறுபாடு

(a) π/4
(b) π/2
(c)π/6
(d) zero

Answer :-


11.ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 µF எனில், L க்கு
குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு


(a) 600 V (b) 4000 V
(c) 400V (d) 1 V

Answer :-


12.ஒரு 20 mH மின்தூண்டி, 50 µF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு
மின்னியக்கு விசை v = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன.
AC சுற்றில் திறன் இழப்பு


(a) 0.76 W (b) 0.89 W
(c) 0.46 W (d) 0.67 W


13

Answer :-


14.ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும்.
ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்க ப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு

(a) Q/2
(b) Q / √3
(c) Q / √2
(d) Q

Answer :-


15. 20/π2 H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது


(a) 50 μF (b) 0.5 μF
(c) 500 μF (d) 5 μF

Answer :-


II சிறு வினாக்கள்

1.மின்காந்தத்தூண்டல் என்றால் என்ன ?


2.மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.


3.லென்ஸ் விதியைக் கூறுக.


4.பிளமிங் வலக்கை விதியைக் கூறுக.


5.சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது?
அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?


6.தூண்டப்பட்ட மின்னியக்கு விசையை உருவாக்கும் வழிகளைக் கூறுக.


7.ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.


8.தன் மின்தூண்டல் என்றால் என்ன?


9.பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?


10.மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றியின் தத்துவத்தைக் கூறுக.


11.AC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப்
பட்டியலிடுக.


12.ஏற்று மற்றும் இறக்கு மின்மாற்றிகள் என்றால் என்ன?


13.ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பை வரையறு.


14.ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பை வரையறு.


15.கட்ட வெக்டர்கள் என்றால் என்ன?


16.மின் ஒத்ததிர்வு – வரையறு.


17.ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?


18.Q – காரணி – வரையறு.


19.சுழித்திறன் மின்னோட்டம் என்றால் என்ன?


20.திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.


21.LC அலைவுகள் என்றால் என்ன?



III நெடு வினாக்கள்

1.ஒரு மூடிய சுற்றில் கம்பிச்சுருள் மற்றும் காந்தம் இடையே உள்ள சார்பு இயக்கம், கம்பிச்சுருளில் மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது என்ற உண்மையை நிறுவுக.


2.லென்ஸ் விதியைப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை கண்டறிவதை விளக்குக.


3.லென்ஸ் விதியானது ஆற்றல் மாறா விதியின் அடிப்படையில் உள்ளது எனக் காட்டுக.


4.லாரன்ஸ் விசையிலிருந்து இயக்க மின்னியக்கு விசைக்கான சமன்பாட்டைப் பெறுக.


5.போகால்ட் மின்னோட்டத்தின் பயன்களைத் தருக.


6.ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண்ணை (i) காந்தப்பாயம் மற்றும்
(ii) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ஆகியவற்றின் படி வரையறு.


7.மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.


8.ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன்
இயற்பியல் முக்கியத்துவம் யாது?


9.வரிச்சுருளின் நீளமானது அதன் விட்டத்தைவிட பெரியது எனக் கருதி, அதன் மின்தூண்டல் எண்ணிற்கான சமன்பாட்டைத் தருவி.


10.மின்தூண்டல் எண்Lகொண்ட ஒரு மின்தூண்டி i என்ற மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது. அதில் மின்னோட்டத்தை நிறுவ சேமிக்கப்பட்ட ஆற்றல் யாது?


11.ஒரு சோடி கம்பிச்சுருள்கள் இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண் சமமாகும்
என்பதைக் காட்டுக (M12 = M21).


12.ஒரு சுருள் உள்ளடக்கிய பரப்பை மாற்றுவதன் மூலம், ஒரு மின்னியக்கு விசையை எவ்வாறு தூண்டலாம்?


13.ஒரு காந்தப்புலத்தில் கம்பிச்சுருளின் ஒரு சுழற்சி மாறுதிசை மின்னியக்கு விசையின் ஒரு சுற்றை தூண்டுகிறது என்பதைக் கணிதவியலாக காட்டுக.


14.AC மின்னியற்றின் பொதுவான அமைப்பு விபரங்களை விவரி.


15.தேவையான படத்துடன் ஒரு – கட்ட AC மின்னியற்றியின் செயல்பாட்டை விளக்குக.


16.மூன்று-கட்ட AC மின்னியற்றியில் மூன்று வெவ்வேறு மின்னியக்கு விசைகள்
எவ்வாறு தூண்டப்படுகின்றன? இந்த மூன்று மின்னியக்கு விசைகளின் வரைபடத்தை
வரைக.


17.மின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்குக.


18.மின்மாற்றியில் ஏற்படும் பல்வேறு ஆற்றல் இழப்புகளைக் குறிப்பிடுக.


19.நீண்ட தொலைவு திறன் அனுப்புகையில் AC யின் நன்மையை ஒரு உதாரணத்துடன் தருக.


20.மின்தூண்டிச்சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்டத் தொடர்பைக் காண்க.


21.தொடர் RLC சுற்றில், செலுத்தப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்டக்கோணத்திற்கான சமன்பாட்டைத் தருவி.


22.மின்தூண்டி மற்றும் மின்தேக்கி மின்மறுப்பை வரையறு. அதன் அலகுகளைத் தருக.


23.ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப்பெறுக. அதன்சிறப்பு நேர்வுகளை விவரி.


24.மின்தூண்டல் எண் L கொண்ட மின்தூண்டி மற்றும் மின்தேக்குத்திறன் C கொண்ட
மின்தேக்கி உள்ள ஒரு சுற்றில் LC அலைவுகள் உருவாவதை விளக்குக .


25.LC அலைவுகளின் போது மொத்த ஆற்றல் மாறாது எனக் காட்டுக.


Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions