மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் வாழ்ந்து வருகிறோம் ,இயற்கை விவசாய காய்கனிகள் என்று விற்கப்படும் காய்கறிகளின் உண்மை தன்மை சாமானிய மக்களுக்கு விளங்குவதில்லை.

மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil

அன்றாட செயற்கை உரமிட்ட விளைபொருட்களை இயற்கை விவசாய உணவு என்று விற்கும் ஒரு கூட்டமே இங்கு உண்டு ,இவற்றை ஈடு செய்து நல்ல உணவை உண்பதற்கு வீட்டு தோட்டமே ஒரே வழியாக மாறிப்போனாலும் ,இன்றைய நாகரிக உலகில் வீட்டு தோட்டமிடும் வசதியும் இடமும் அனைவருக்கும் அமைவதில்லை ,எனவே தான் இந்த மாடித்தோட்டம் என்ற செயல்முறை பரவலாக எல்லோரராலும் ஏற்று கொல்லப்பட்டு தங்களது சொந்த பயன்பற்றிக்கு மாடி விவசாயம் என்று தொடங்கி இன்று மாடி தோட்ட விவசாய விளைபொருக்கள் சந்தைகளில் கூட விற்குமளவுக்கு உயர்ந்துள்ளது

இத்தகைய நன்மை விளைவிக்கும் மாடித்தோட்டம் பற்றிய நன்மைகலை பற்றி நாம் இந்த கட்டுரையில் காணலாம்

உணவே நஞ்சு

இன்றைய நாகரிக வாழ்வில் விவசாய நிலங்களும் விவசாயிகளும் குறைந்து வருகின்றனர் ,இதன் காரணமாக குறைந்த இடத்தில அதிக மகசூல் கொடுக்கும் முறைகளை கையாள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இதன் காரணமாக அதிக மகசூல் முறைகளான செயற்கை உரமிடுதல் ,செயற்கை பூச்சி கொல்லிமருந்துகள் பயன்படுத்துவது சாதாரணமாக ஆகிவிட்டது.செயற்கை ரசாயனங்கள் தங்கள் வேலைகளை செய்வதோடு உணவு விளைபொருள்களிலும் இணைந்து நம்மை வந்தடைகிறது.

மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil

இதன் காரணமாக முன் எப்போதும் இல்லாத வகையில் இளவயதில் மாரடைப்பு ,குழந்தைகளுக்கு சீக்கிரம் கண்பார்வை மங்குதல் ,பட்டியியலில் அடங்காத கேன்சர் நோயாளிகள் என்று நஞ்சான உணவின் ஆபத்துகள் தொடர்கின்றன.

வீட்டு தோட்டம்

பண்டைய விவசாய வாழ்கை முறைகளில் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் விவசாயம் நடந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டு தோட்டம் பராமரிக்க பட்டு வந்தது ,சமையலுக்கு அத்யாவிசய தேவைகளான மிளகாய் ,கருவேப்பில்லை ,கொத்தமல்லி போன்றவை வீட்டின் முன்புறத்திலேயே நடவு செய்யப்பட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்ததே

பொருளாதார கரணங்கள் மற்றும் நகரமயமாதல் காரணமாக தற்போது தோட்டத்திற்கு என இடம் விட முடியாத சூழல் தற்காலத்தில் நிலவுகிறது .இருந்த போதிலும் வீட்டு தோட்டம் அமைப்பதே செயற்கை இரசாயனங்களின் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள ஒரேவழி ஆகும்.

மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil

மாடித்தோட்டம்

வீட்டு தோட்டம் அமைக்க இயலாளர்கள் மாடியில் தோட்டம் அமைக்கும் முறை எப்போதோ தொடங்கி விட்டாலும் ,தற்போது இதன் நன்மைகளை அறிந்து அதிகமான இல்லத்தரசிகள் மாடித்தோட்டம் அமைகின்றனர்.சுமாராக ஆயிரம் ரூபாய் பணமதிப்பில் மாடித்தோட்டம் அமைத்தால் வருடத்திற்கு பத்தாயிரம் வரை பயன்தரக்கூடிய காய்கறிகள் நமக்கு கிடைக்கின்றன.சிறிய அளவில் தோட்டமிடுவதால் பூச்சி பரவுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்போது மொத்தமாகவே செடிகளை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் நடவு செய்துகொள்ளலாம் ,இந்த வசதி விவசாயிகளுக்கு இல்லாத காரணத்தினாலேயே அதிகம் பயிர் செய்த செடிகளை அளித்து நஷ்டமடையாமல் இருக்க செயற்கை இரசாயனங்களை நாடுகிண்டனர்.

இயற்கை உரங்கள்

செயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போதும் இயற்கை உரங்களை பயன்படுத்த அரசு ஆவண செய்துள்ளது .தமிழக அரசு வனத்துறை மற்றும் விவசாய துறை அறிவியல் செய்திகளில் இயற்கை உரங்களை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகளையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளது

நவ நாகரிக மாடித்தோட்டம்

பொதுவாக அறிவியல் வளர்ச்சியில் விவசாய முறைகளே மாறிவருகின்றன,கூடாரங்கள் அமைத்து குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டுமே வளரக்கூடிய விவசாய பொருட்களையும் ,பழங்களையும் ஆண்டு தோறும் விளைவிக்கும் முறை வந்துவிட்டது ,இதன் அடுத்த கட்டமாக மாடிகளில் குடில்கள் அமைத்து விவசாயம் செய்வதும் அறிமுகமாகி உள்ளது

மழைநீர் சேகரிப்பு போன்ற செயல் திட்டங்களை கண்டிப்பாக புதிய வீடுகட்டுபவர்கள் செய்ய வேண்டும் என்று அரசு நிபந்திக்கிறது இதுபோன்ற மாடி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் மழைநீர் சேமிப்பையும் சேர்த்து செய்யலாம்

தானியங்கி நீர் தெளிப்பான் போன்ற அறிவியல் சாதனங்கள் ,இயற்கை கழிவுநீர் வெளியற்றம் போன்றவற்றிற்கும் சிறிய வகை கருவிகள் வந்துவிட்டன.மாடி தோட்டத்திற்கு என புதியராக விதைகளை அரசு மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் வழங்குகின்றன,இவற்றை பயன்படுத்தி சிறிய ரக செடிகளில் அதிக மகசூலை பெற முடியும்.

மாடித்தோட்டத்தின் பயன்கள்

 • செயற்கை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி உணவில் கலப்பது கட்டுப்படுத்தலாம்
 • பொருளாதார மாறுதல்களை சமாளித்து அதிக செலவின்று நிறைய காய்கறிகளை நாமே விளைவிக்கலாம்
 • நாகரிக உலகில் தனிமையின் வெறுப்புகளை சமாளித்து நல்லதொரு பொழுதுபோக்காக விவசாயம் செய்யலாம்
 • அதிக நீரின்று போனால் கூட விவசாயம் செய்ய முடியும்
 • பூ செடிகள் வைத்து வளர்ப்பதில் மூலமாக மன நிம்மதி அடைந்து நல்ல மனநிலையை அடையலாம்
 • குறைந்த இடத்தில அதிக மகசூல் பெறலாம்
 • மாலை வேளைகளில் தூய ஆக்சிகன் கிடைக்கிக்க ,குழந்தைகளுடன் விளையாட சொந்த விளையாட்டு திடலாகவும் பயன்படுத்தலாம்
 • அதிக முதலீடு தேவையில்லை
 • அதிக செலவு செய்து நஷ்டமடைய வாய்ப்பில்லை
 • புதிய நவீன கருவிகள் பயன்படுத்தி செவ்வனே விவசாயம் செய்ய முடியும்
 • பறவைகள் வளர்த்தல் மீன் வளர்ப்பு போன்றவற்றை மாடித்தோட்டத்தின் இடையில் செய்வதும் அதிக பலனை தருகிறது
 • நவீன நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளலாம்
 • மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் நமக்கு கிடைக்கின்றன
 • மனித உழைப்பு ஒன்றே உடற்பயிற்சிக்கு மாற்றாக அமையும் எனவே மாடிதோட்டமிடுதலும் ஒருவகை உடற்பயிற்சியாக செய்து நலமுடன் வாழலாம்