Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

12th Chemistry Guide
12th MATERIALS

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Guide Pdf Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers, Notes.

Samacheer Kalvi 12th Chemistry Guide Chapter 15 அன்றாட வாழ்வில் வேதியியல்

சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. பின்வருவனவற்றுள் எது வலிநிவாரணி?
    அ) ஸ்ட்ரெப்டோமைசின் ஆ) குளோரோமைசிடின்
    இ) ஆஸ்பிரின் ஈ) பெனிசிலின்
  2. புரைதடுப்பான்கள் மற்றும் கிருமிநாசினிகள் நுண்ணுயிரிகளைக் கொல்கின்றன அல்லது
    அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
    அ) நீர்த்த போரிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆகியன வலிமை மிகுந்த
    புரைதடுப்பான்களாகும்.
    ஆ) கிருமிநாசினிகள் உயிருள்ள செல்களை பாதிக்கின்றன.
    இ) பீனாலின் 0.2% கரைசல் ஒரு புரைதடுப்பான், ஆனால் 1% கரைசல் ஒரு கிருமிநாசினி.
    ஈ) குளோரின் மற்றும் அயோடின் ஆகியவை வலிமை மிக்க கிருமிநாசினிகளாகபயன்படுகின்றன.
  3. உணர்வேற்பி மையத்துடன் பிணைந்து அதன் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கும் மருந்துகள்
    __ என்றழைக்கப்படுகின்றன.
    அ) எதிர்வினையூக்கி ஆ) முதன்மை இயக்கி இ) நொதிகள்  ஈ) மூலக்கூறு இலக்குகள்
  4. ஆஸ்பிரின்என்பது
    அ) அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் ஆ) பென்சாயில் சாலிசிலிக் அமிலம்
    இ) குளோரோபென்சாயிக் அமிலம் ஈ) ஆந்த்ரனிலிக் அமிலம்
  5. பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு நைலான் 6,6 பலபடியை குறிப்பிடுகிறது?
  1. இயற்கை இரப்பர் கொண்டிருப்பது
    அ) ஒன்றுவிட்ட சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு
    ஆ) தன்னிச்சயான சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்ப

இ) அனைத்தும் சிஸ் அமைப்பு
ஈ) அனைத்தும் டிரான்ஸ் அமைப்பு

  1. நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
    அ) பாலிஅமைடு  ஆ) பாலித்தீன் இ) பாலி எஸ்டர் ஈ) பாலிசாக்கரைடு
  2. டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
    அ) பாலிஅமைடு  ஆ) பாலித்தீன் இ) பாலி எஸ்டர் ஈ) பாலிசாக்கரைடு
  3. பின்வருவனவற்றுள் எது நியோப்ரீனின் ஒற்றைப்படி மூலக்கூறு?
    ) CH2 C CH
    Cl
    CH2 = ) CH2=CH C CH
    ) CH2 CH CH CH2 = = ) CH2 C CH CH2
    CH3
    = =
    அ ஆ
    இ ஈ
  4. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும்பலபடி?
    அ) HDPE ஆ) PVC இ) நைலான் 6 ஈ) PHBV
  5. பொதுவாக, ஒட்டா சமையல் பாத்திரங்களின் மேற்பரப்பில் பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின்
    ஒற்றைப்படி மூலக்கூறு
    அ) ஈத்தேன் ஆ) புரப்-2-ஈன்நைட்ரைல்
    இ) குளோரோஈத்தீன் ஈ) 1,1,2,2-டெட்ராஃபுளூரோஈத்தேன்
  6. கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்
    காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது..
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
    இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
    ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
  7. பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?
    அ) ஆர்லான்  ஆ) PVC  இ) டெஃப்லான்  ஈ) PHBV
  8. போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி
    அ) பாலிஸ்டைரீன்  ஆ) PAN  இ) பாலிஎஸ்டர்  ஈ) பாலித்தீன்
  9. பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது? (NEET)
    அ) பேக்கலைட்மற்றும் மேலமைன் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்
    ஆ) அவை, இரண்டு அல்லது மூன்று வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படி
    மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.
    இ) அவை, பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை
    கொண்டுள்ளன
    ஈ) அவை, அவற்றின் பலபடிசங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன

சிறு வினாக்கள்:

  1. எதிர்உயிரிகள் என்றால் என்ன?
  2. வலிநிவாரணியாகவும், காய்ச்சல் மருந்தாகவும் பயன்படும் ஒரு சேர்மத்தின் பெயரைக்
    குறிப்பிடுக.
  3. தொகுப்பு டிடர்ஜெண்ட்கள் பற்றி குறிப்பு வரைக.
  4. புரைதடுப்பான்கள் எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன?
  5. உணவு பதனப்பொருட்கள் என்பவை யாவை?
  6. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?
  7. மன அமைதிப்படுத்திகள் உடலில் எவ்வாறு செயல்புரிகின்றன?
  8. ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
  9. சோப்புகள் மற்றும் டிடர்ஜெண்ட்களின் அழுக்கு நீக்கும் செயல்பாட்டின் வழிமுறையை விளக்குக.
  10. சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் தயாரிக்க பயன்படும் இனிப்புச் சுவையூட்டி எது?
  11. போதை தரும், போதை தராதமருந்துப் பொருட்கள்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள்தருக
  12. கருத்தடை மருந்துகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள்தருக.
  13. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.
  14. மக்கும் பலபடிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
  15. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
  16. இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக.
  17. பின்வருவனவற்றை நேர்க்கோட்டு, கிளைச்சங்கிலி அல்லது குறுக்க பலபடிகள் என
    வகைப்படுத்துக.
    அ) பேக்கலைட்  ஆ) நைலான் இ) LDPE ஈ) HDPE

Samacheer Kalvi 12th Chemistry Book Solutions Tamil Medium Answers Guide

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Back Answers Solutions Guide Volume 1, 2.

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Chemistry Tamil Medium Book Volume 2 Solutions